Friday, November 5, 2021

ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும். கருத்துரைக்க.

NANDHINI ELANGOVAN - 2021

      ஒரு நாடு ஒழுங்காகச் செயல்பட அரசாங்கமும் சட்டங்களும் அடிப்படையானவையாகும். ஒரு நாட்டின் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதும் அச்சமுதாயத்திற்கு மாற்றங்கள் கொண்டுவருவதும் இவ்விரண்டினால் தான் வழிநடத்தப்பட்டு வருகின்றன. இச்சூழலில் ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலுமா அன்ற கேள்வியை எப்படிக் கேட்கலாம்? கண்டிப்பாக முடியாது! ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே ஒரு நாட்டின் பிரச்சனைகளைத் தீர்ப்பது, சமுதாயத்தின் எண்ணங்களை மாற்றுவது, அந்நாட்டில் குற்றத்தை தடுப்பது பொன்ற விரும்பத்தக்க மாற்றங்களகளை கொண்டுவர இயலும்.

      ஓரு நாட்டில் சமூக நலத்தை உறுதிப்படுத்த சட்டங்களால் மட்டும் தான் முடியும். ஒரு நாட்டின் வரலாற்றில் எத்தனையோ சிக்கல்களும் சவால்களும் தோன்றியிருக்கும். ஆனால், அதற்கேற்ப தன் மக்களைத் தயார் செய்து அவற்றிலிருந்து மீண்டு வருவதில் சட்டங்களின் பங்கை மறுக்க மடியாது. உதாரணத்திற்கு நாம்  COVID-19 கிருமித்தொற்றை எடுத்துக்கொள்ளலாம். இக்கிருமித்தொற்றால் உலகமே மிரண்டு போயிருந்தது. அப்பொழுது நாட்டின் மக்களை பாதுபாப்பாக வைத்துக்கொள்ள அரசாங்கங்கள் வெவ்வேறு வழிகளில் முயன்றன. சிங்கப்பூரில் அனைவரும் முகமூடியை அணிந்து கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியது. முகமூடிகளை அணிவதையும் அரசாங்கம் கட்டாயமாக்கிய மற்ற வழிகளையும் மக்கள் மீறாமல் அவற்றுக்கு ஏற்ப நடந்துக்கொண்டதற்கு காரணம் என்னவாக இருக்கும்? அரசாங்கம் இதை ஒரு சட்டமாக அமைத்தே காரணமாகும். இவ்விதிமுறைகளை மீறினால் மக்கள் அபராதம் அல்லது தண்டனைக்கு ஆளாகவேண்டியிருந்ததனால் நான் மக்கள் அவற்றை மீறாமல் இருந்தனர். அரசாங்கம் இதை ஒரு சட்டமாக்காமல் இருந்து நாட்டு மக்களை இவ்வாறு செய்யுமாறு பணிவாக கேட்டுக்கொண்டிருந்தால் மக்கள் அவற்றுக்கு அடங்கி செயல்பட்டிருப்பார்களா? கண்டிப்பாக இல்லை. இதைப்போல ஒரு நாடு சிக்கல்களை எதிர்நோக்கும்போது அதை தாண்டி அதிலிருந்து மீண்டு வந்து சமூக நலத்தை உறுதிப்படுத்த நிறைய மாற்றங்களை சொண்டுவரவேண்டியிருக்கும். அம்மாற்றங்களை ஏற்படுத்த சட்டங்களைப் பயன்படுத்தினால் தான் மக்களுக்கு அவற்றின் அவசியம் புரியும். அதனால், ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டுமே சமூக நலத்திற்கு தேவையான மாற்றகளை கொண்டுவர இயலும்.

      அடுத்தாக ஒரு சமுதாயத்தின் எண்ணங்களை மாற்ற சட்டங்கால் தான் முடியும். ஒரு நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தவிர்த்து அந்த நாட்டு மக்களின் மனப்போக்குகளிலேயே மாற்றங்கள் கொண்டுவர அவசியம் இருக்கலாம். உலகம் மாறிக்கொண்டே இருப்பதால் அதற்கு தகுந்தது போல் மக்களுத் தங்கள் மனப்பொக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். உதாரணத்திற்கு மக்களின் மனத்தில் மன்ன இனங்களைப் பற்றி வெவ்வேறு எண்ணங்கள் இருக்கலாம். ஒரு இனத்தவர் இன்னொரு இனத்தவரின் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளாமல் அந்தக் கலாச்சாரத்தின் பண்பாட்டை அவமதிக்குமாறு நடந்துகொள்ளலாம். இதைக் போன்ற எண்ணங்களையும் மாற்ற சட்டங்களால் தான் இயலும். சிங்கப்பூரில் இப்பொழுது மருத்துவமனையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் வேலை பார்க்கும்பொழுது அவர்களின் தலையை சுற்றி அவர்களின் ஹிஜாபுகளை (hijabs) அணிந்துக்கொள்ளலாம். இந்தச் சட்டம் இப்பொழிது சமுதாயத்தில் ஒரு மதத்தை செர்ந்தவர் இன்னும் சுதந்திரமாக நடமாட ஒரு வழியை அளிக்கிறது. இந்த சட்டம் இயக்கப்பட்டபோது இது அந்நாட்டு மக்களுக்கு நாம் மற்ற இனத்தவர்களையும் மதத்தவர்களையும் மதித்து அவர்களின் பண்பாடுகளை நாம் தடுக்கக் கூடாது அன்ற அண்ணத்தை ஏற்றுகொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. இன்னொரு உதாரணம் இந்தியாவில் வெவ்வேறு பாலின முறைகளை சேர்ந்தவர்களுக்கு இடையே திருமணம் நடக்கலாம் என்ற சட்டமாகும். மற்ற பாலின முறைகளை சேர்ந்தவரை எதிர்த்து உலகில் நறைய பேர் இருக்கிறார்கள். ஆனல், இவர்களுக்கு சுதந்திரமளிக்கவேண்டும் என்பதை பிரதிபலிக்கும் இச்சிட்டமும் சமுதாயத்தின் எண்ணங்களை மாற்றியது. அதனால், சட்டங்களுக்கு சமூகத்தின் மனப்போக்கையும் மாற்றும் ஆற்றல் உள்ளது. இவ்வாறு இருக்கும்போது சட்டங்கள் இல்லையென்றால் வேறு எவை ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்கைக் கொண்டுவருவன?

      அனைத்து நாடுகளிலும் குற்றங்கள் நடப்பன. அவற்றிலிருந்து அந்த நாட்டை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது சட்டங்களே ஆகும். ஒரு நாட்டில் குற்றத்தைத் தடுக்க சட்டம் உருவாக்கும் பயம் மிகவும் முக்கியம். ஒருவர் திருட்டு போன்ற சிறிய குற்றங்கள் செய்தாலும் கொலை போன்ற பெரிய குற்றங்கள செய்தாலும் சட்டம் அதற்கு ஏற்ற தண்டனையை வழங்கும். சட்டங்கள் வழங்கும் தண்டனைக்குப் பயந்தே முதாயத்தில் நிறைய பேர் குற்றங்களை செய்ய மாட்டார்கள். ஒரு பெரிய தண்டனைக்கு ஆளாகும் அளவிற்கு ஒரு குற்றத்தை செய்தால் ஒருவரின் வாழ்க்கையே போய்விடும். அவரால் சமுதாயத்தால் மதிக்கப்பட்ட ஒருவராக வாழ முடியாது. அதனால், சட்டங்கள் குற்றங்களை தடுக்கின்றன. ஆனால், அது மட்டும் சமுதாத்தை பாதுகாக்கவில்லை. சட்டங்கள் சமுதாயத்தில் குற்றம் செய்பவர்கையும் சமூகத்திலிருந்து வெளியேற்றி அவர்கள் போன்ற குற்றவாளிகள் இல்லாமல் அமைதியாக செயல்பட வழிவகுக்குகிறது. இதனால், சமூகத்தை இன்னும் பாதுகாப்பான ஒன்றாக மாற்ற சட்டங்கள் உதவுகின்றன. இந்த இயல்பு சட்டங்களுக்கு மட்டுமே உள்ளது. அதனால், ஒரு நாட்டை இன்னும் பாதுகாப்பாக மாற்ற சட்டங்களால் மட்டுமே இயலும்.

      இருந்தாலும் சிலர் சட்டங்கள் மட்டும் விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டுவராது என்பார்கள். மக்களின் விருப்பமும் மக்கள் நடத்தும் போராட்டங்களும் ஒரு நாட்டில் மாற்றங்கள் கொண்டுவரலாம் என்று எண்ணலாம். ஆனால், மக்களின் விருப்பங்களுக்கு இடம் கொடுத்துப் பொராட்டங்களை அனுமதிப்பதும் சட்டமே ஆகும். எத்தனையோ நாடுகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஏதாவது கூறினால் அவர்கள் உயிரிழக்க வேண்டியிருக்கும் சூழ்நிலை இருக்கிறது. அதனால், மக்கள் போராடுவதற்கும் சட்டங்கள் வசியம். அதுமட்டுமல்லாமல் மக்கள் பொரும்பாலும் கொண்டுவரும் மாற்றங்கள் புதிய சட்டங்களே ஆகும். அதனால், ஒரு நாட்டில் சட்டங்களால் மட்டும் விரும்பத்தக்க மாற்றங்களைக் கொண்டுவர இயலும் என்பது உண்மையாகும்.

      சட்டங்களால் சமூக நலத்தை உறுதிப்படுத்த முடியும் என்பதாலும், சமூகத்தின் எண்ணங்களை மாற்ற முடியும் என்பதாலும், ஒரு நாட்டை பாதுகாப்பான ஒன்றாக மாற்ற முடியும் என்பதாலும், அந்த நாட்டு மக்கள் விரும்பும் மாற்றங்களுக்கு இடம் கொடுப்பதால், அவற்றால் மட்டுமே ஒரு நாட்டில் விரும்பத்தக்க மாற்றங்களை கொண்டுவர இயலும் என்பது கண்டிப்பாக உண்மையாகும்.

No comments: