Kumbalingam.Uthaman
Friday, October 2, 2026
பிறரிடம் மன்னிப்புக் கேட்பது பலவீனத்தின் அடையாளம் அன்று. இக்கருத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் அதன்மூலம் நீ பெற்ற படிப்பினையையும் விவரித்து எழுதவும். THARSITA SELVARAJU (407 – 2026)
“ரவி! ரவி… ஒரே நிமிடம் நில். நான் இதுவரைக்கும் யாருகிட்டேயுமே
மன்னிப்புக் கேட்டதில்லை. உனக்கே தெரியும்…” என்று என் குரல் உரைக்க,
பூங்காவிலிருந்த அமைதி குலைந்தது. ஆனால், எனது குரலை விட உரக்க
“
“ஒன்னும் இல்ல, சின்ன
காயம் தான், சரியாகிடும்.” இது மாதிரி பல குரல்களையும், மனித உணர்வுகளின் அனைத்து
இந்த மருத்துவமனையில்
தான் தானும் என்னோடு சேர்ந்தே பயந்த என் நெருங்கிய தோழன், ரவியும் வேலை பார்த்தோம்.
இருவருமே தூங்காமல் கொள்ளாமல் படித்து இந்த இடத்திற்கு வந்தோம். அதனாலோ என்னவோ, இந்த
ஒருவர் ஒரு செயலுக்கு மன்னிப்புக் கேட்டால், அவர் தவறு செய்தவர். உடனடியாக,
அவரது திறமையும், குணமும் சந்தேகப்படப்படும். ஒரு மருத்துவராக, ஒருவர் எனது திறமையை
எப்பொழுதும் போல் ஒரு நாள், நானும் மருத்துவமனைக்குக் காலையிலேயே வந்துவிட்டேன். தூக்கம் கொஞ்சம் போதவில்லை. ஆனால் நான் ஆசைப்பட்டுச் செய்யும் இந்த வேலையின் முன், தூக்கம் ஒரு பொருட்டே இல்லையென்று, சுறுசுறுப்பாக ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதித்துவிட்டு, என் வேலையறைக்குச் சென்றேன். கொஞ்ச நேரம், என் கண்கள் தானாக மூட, என் தூக்கம் என்னை எப்படியோ விட்டுவிடாமல் தாக்கிவிட்டது. நானும் வீழ்ந்துவிட்டேன். ஆனால், கண்ணை மூடி இரண்டு நொடிகள் நகர்ந்திருக்காது, என் அறைக் கதவு ‘படால்’ என்று திறந்தது. புருவங்கள் சுருங்கி, கண்கள் பிதுங்கி, மூக்கு புடைப்பாக, ரவி வந்து நின்றான். கையில் சில தாட்கள். “என்னாச்சு?” என்று நான் அரை தூக்கத்தோடு கேட்க, “பேஷண்ட் 45-க்கு ஏன் அளவுக்கு அதிகம் மருந்து கொடுத்திருக்க! அவங்களால மூச்சே விட முடியல தெரியுமா? நல்ல வேளை, நர்ஸ் கவனிச்சு சொன்னாங்க!” என்று உரக்க கத்தினான் ரவி. முதலில் கூறிய இரண்டு வரிகளையும் கேட்டபோது அதிகமான என் இதயத் துடிப்பு, மூன்றாவது வரியில் நிலைக்குத் திரும்பியது.
“அய்யோ! நான் கூட பயந்துட்டேன். ஏதோ தெரியாம கொடுத்துட்டேன்! என்று , நல்ல வேளை!” என் வார்த்தைகள் கேட்கச் சாதாரணமாக இருந்தாலும், வியர்த்து விறுவிறுத்த என் முகமும் நடுங்கிக்கொண்டிருந்த என் கையும், என் மனதில் நாட்டியமாடிக்கொண்டிருந்த குற்ற உணர்ச்சியை வெளிக்காட்டின. என் தவறாக இருந்தாலும், என் மனத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப் போன்ற ஒரு திறமையான மருத்துவர், இது போன்ற ஒரு தவற்றைச் செய்தார் என்று தெரியவந்தால், அனைவரும் என்ன நினைப்பர்? என் சிந்தனைகள் என் மூளையின் ஒவ்வொரு மூலைக்கும் ஓட, ரவி மட்டும் அதே இடத்தில் நின்றான். ஆனால், அவன் கண்களிலிருந்து கோபம் சென்று, ஒரு விதமான எதிர்பார்ப்பு தெரிந்தது. காவலர்கள் திருடனிடமிருந்து பதில் எதிர்பார்க்கும்பொழுது கொண்டிருந்த பார்வை போல. அந்தப் பார்வை தெரிந்தோ தெரியாமலோ என் தொண்டையில் ஒரு கட்டியை உருவாக்கியது, என் வார்த்தைகளை விழுங்க கஷ்டமாயிற்று. அவன் என்னைக் கேள்விகேட்பதற்கு முன் நான் கேட்டுவிட்டேன். “என்ன? போய் வேலைய பாரு!” என்று எலி கம்பீரமாக பேசினால் எவ்வாறு இருக்குமோ, அது போன்ற ஒரு பாவனையில்.
“உன்னிடம் சொல்ல வேற எதுவுமே இல்லையா?” என்று பொறுமையாகக் கேட்டான், என்னை உற்று நோக்கியவாறு. கோபமாக பேசியிருந்தால் கூட இந்தளவு மனம் குறுகுறுத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவன் பொறுமையாகக் கேட்க, அந்தச் சாந்தத்தில் ஒன்று வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. என் தவற்றை ஏற்று, என்னிடமிருந்து மனமார்ந்த ஒரு மன்னிப்பு. அதைத் தான் தேடினான், ரவி. ‘ஒரு மருத்துவரின் கவனக்குறைவு அவனைக் கொலைகாரனாகக்கூட ஆக்கலாம், என் வேலையையா அவன் கேட்பான். என் தவறுக்காக என் மன்னிப்பு. அவ்வளவுதானே!’ என்று ஒரு பக்கம் யோசித்தாலும், மறு பக்கம், ‘என் திறமையிலே சந்தேகமா?’ என்று ஒரு சுயகௌரவ எண்ணம் பிறந்தது.
என்னை, இந்திடத்தில், குறைவானவனாகக் காட்டும் அந்த மன்னிப்பை கேட்கனுமா? நான் அவனைப் பார்க்க, ரவியும் என்னைப் பார்த்தான், அவனது பார்வை என்னை எரித்துவிடுவது போல். கஷ்டப்பட்டு, என் எச்சிலை விழுங்கியபடி, “எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை!” என்று வாய்கூசாமல் கூறினேன். கேட்ட அடுத்த வினாடி, கையிலிருந்த தாளை என் முகத்தில் வீசியவாறு, வெளியே சென்றான். அவன் வரும்பொழுது அவனுக்கும் எனக்கும் ஒரு மேசை அளவிருந்த இடைவெளி, அவன் சென்ற பிறகு மனதளவில் ஆயிரம் கிலோமீட்டர் தள்ளியிருந்தது போலிருந்தது. அவனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், அவன் எதிர்ப்பார்த்த மன்னிப்பு நியாயம் தானே!
அன்றிலிருந்து, ரவி என்னோடு பேசவே இல்லை. பூச்சிகளைக் கண்டால் மனிதர்கள் விலகுவது போல், என்னைக் கண்டாலே ஒதுங்கினான். சிறு வயதிலிருந்தே என்னோடு நெருங்கி இருந்தவன், நான் அவமானமாகவும் பலவீனமாகவும் காணும் ஒன்றை இப்படி எதிர்க்கிறான் என்றால், நமது கண்ணோட்டம் தான் வேறு, என்ற எண்ணம் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய, என் பார்வை மாறியது. இதைப்பற்றி அவனிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற விருப்பதில், வேலை முடித்து அவனைத் தேடினேன். என்னைக் கண்டவுடன், விறுவிறுத்தது அவனது காலடி…
“சாரி!” என்று ஒரு சின்ன குழந்தையின் மென்மையான குரல் என் காதில் விழ, நான்
நினைவு திரும்பினேன். ஆறு வயதைகூட தாண்டியிருக்காத அந்தக் குழந்தை,
ஒரு நாயின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு தட்டியவாறு, அதனிடம் மன்னிப்பு கேட்டது. தெரியாம மிதித்தேன்!’ என்று அவள் சொல்ல, என் முகம் மாறியது.
தான் செய்தது தவறு என்று தெரிந்தவுடன், தயங்காமல் மன்னிப்பு கேட்கிறாள் ஒரு சின்ன குழந்தை.
நாம் செய்ததை உணர்ந்து, அதை மாற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும், காயப்படுத்தியவருக்கு
மருந்தாகவும் அமையும் இந்த மன்னிப்பு, பலவீனம் அல்ல, பலத்தின் வடிவம் தானே, என்று எனக்குப் பொறுமையாகப் புரிந்தது.
ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல், “ரவி!” என்று கத்தினேன். முதன் முறையாக,
என் மனத்தில் தயக்கமில்லாமல், என் சிந்தனையில் தெளிவோடு, “என்னை
மன்னித்துவிடு. நான் செய்தது தவறுதான்!” என்று உரக்கக் கத்தினேன். அதிர்ச்சியோடு திரும்பினான்,
ரவி, கன்னத்தில் ஒரு புன்னகையோடு. அவனது ஒரு சிரிப்புப் போதும், என்னை எனது செயல்களை
நன்றாக அது உணர வைத்தது. அன்று தான் உணர்ந்தேன், நம்மைத் திருத்தி
வாழவிடும் இந்த ‘மன்னிப்பு’ பலவீனம் அல்ல, பலமே, என்று! வாழ்கையில் சிலது தாமதமாக புரிந்தாலும்,
கடவுளால் ஒரு பாடம் எப்பொழுதும் புகட்டப்படும் என்று அறிந்தேன். அப்படி எனக்கு அனுப்பப்பட
பாடம் தான் ரவி. உங்களது பாடம் எனது கதையாக இருக்கட்டும்! நன்றி!
Sunday, August 24, 2025
குழுமப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறுகின்ற ஒரு பேச்சுப்போட்டியில், ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக்கொண்டாட்டங்கள் அவசியம்’ எனும் தலைப்பில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.
சப்ரினா கான் (302)
அவைக்கு முதற்கண் என் வணக்கம்! இப்போட்டியில் ‘குடும்பப் பிணைப்பை மேம்படுத்த குடும்பக் கொண்டாட்டங்கள் அவசியம்’ என்ற தலைப்பை மையமாக வைத்து என் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகமா? ஆம், அதில் ஐயம் இல்லை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நன்மை தீமை என அனைத்து இடங்களிலும் தங்கள் பங்களிப்பை அளிப்பது அவசியம். இவ்வாறு, குடும்பத்தில் அன்பும் பண்பும் அறிவும் கற்றுக் கொடுத்து ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தி, புரிதலை ஏற்படுத்தி, பிணைப்பையும் வலுப்படுத்துகிறார்கள் அல்லவா? ஆனால், இது சாத்தியமாக அனைவரும் தங்கள் உறுப்பினர்களுடன் சேர்ந்து அதிக நேரத்தை ஆக்ககரமாகச் செலவு செய்ய ஒரு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை ஆகும். அதற்குத் தான் குடும்பக் கொண்டாட்டங்கள் இருக்கின்றன! பாரம்பரிய திருவிழாக்கள், பிறந்தநாட்கள், அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற அனைத்துக் குடும்ப விழாக்களும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடன் நேரத்தை செலவழிக்க இழக்க முடியாத ஒரு வாய்ப்பை அளிக்கிறன. இக்கொண்டாட்டங்களிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்பங்களுக்குள் பண்புகள் கற்றுக் கொள்கிறார்கள், புரிதல் ஏற்படுத்துகிறார்கள், மறக்க முடியா நினைவுகளையும் உருவாக்குகிறார்கள்.
ஒரு குடும்பத்தில் உறுப்பினர்களுக்கு இடையே உள்ள அன்பு, ஆதரவு, மற்றும் புரிதலை நாம் எந்த நாளில் காணலாம்? நிச்சயம் பிறந்தநாள் அன்று தான்! பிறந்தநாளின்போது பெற்றோர்கள் உங்களுக்குப் பிடித்த உணவையோ, ஆடையையோ, பொம்மையையோ நிச்சயம் வாங்கியிருப்பார்கள். இதிலிருந்தே அவர்கள் உங்களுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது? என்று நன்கு அறிந்ததைக் காட்டுகிறது. அதுமட்டுமல்ல, நிச்சயமாக பிறந்தநாளன்று இன்னும் உங்களுக்குப் பரிசு வாங்கித் தர முடியாத வயதில் இருக்கும் உங்கள் சகோதரரிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் அல்லவா? நினைவிருக்கிறதா? அந்தக் கடிதங்களில் இருக்கும் அழகிய சிறு சிறு வரைபடங்கள், வண்ணம் பூசப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஒன்று ஒன்றாக சரியான உணர்வை உணர்த்த கையால் எழுதப்பட்ட சொற்கள், முடிவில் ஒரு ஓரத்தில் தெரிவித்த நன்றிகள் ஆகியவை எல்லாம் பார்த்திருப்பீர்கள். அந்த எளிய கடிதத்தில் கொடுக்கப்பட்ட முயற்சி, சிந்தனை, நேரம் ஆகியவை நீங்கள் உண்மையாகக் குடும்ப உறுப்பினர்களால் நேசிக்கப்படுகிறீர்கள் என்று உணர்த்துவதில் உங்கள் பிறந்தநாளன்று ஒரு சக்தி வாய்ந்த நினைவூட்டலாக அமைகிறது.
“தந்தை தாய் பேண்” என்பதற்கு ஏற்பவும் தந்தையர் தினம் மற்றும் அன்னையர் தினத்தன்று எப்போதும் செலுத்துவதை விட நீங்கள் கொஞ்சம் கூடுதலாக அவர்களிடம் அன்பு செலுத்தியிருப்பீர்கள் அல்லவா? குடும்பத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்று அன்று மீண்டும் உங்கள் நினைவிற்கு வருகிறது. அப்போது, அவர்களிடம் உங்கள் நன்றியைத் தெரிவிக்க, அதிக அன்பும் செலுத்தி உதவியும் செய்வீர்கள். பெற்றோரும் அளவு கடந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். எனவே, இதிலிருந்து பிறந்தநாட்கள், பெற்றோர் தினங்கள் ஆகிய குடும்பக் கொண்டாட்டங்கள் உறுப்பினர்களுக்கும் தங்கள் அன்பையும், பிறரைப் பற்றி வைத்திருக்கும் புரிந்துணர்வையும் தெள்ளத் தெளிவாக எல்லோரிடமும் வெளிக்காட்டுகின்றன.
நாம் அனைவரும் பாரம்பரியக் கொண்டாட்டங்களைக் குடும்பத்துடன் கொண்டாடியிருக்கிறோம். தீபாவளி, பொங்கல், நோன்புப் பெருநாள் ஆகிய நாட்களன்று பெற்றோர்கள் எல்லாம் ஏன் அதைக் கொண்டாடுகிறோம், யாரிடமெல்லாம் மதிப்பு காட்ட வேண்டும், பாரம்பரிய மரபாக என்ன செய்ய வேண்டும் என்று பிள்ளைகளிடம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொடுக்கின்றனர்.
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”
என்பதற்கு ஏற்ப பெற்றோருக்குப் பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது அவர்களுடைய உடலுக்கும் இன்பம், அவர்களின் பேச்சைக் கேட்பது அவர்களுடைய காதிற்கு இன்பம். அதனால், கொண்டாட்ட நாளன்று தங்கள் பிள்ளைகள் ஓடி, ஆடி, விளையாடி மகிழ்வதைக் காணுவதையே பெற்றோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கி அவர்கள் முகத்தில் புன்னகை தோன்ற போதுமானதாக அமைகிறது. இவ்வாறு குடும்பப் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே போதனைகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனைவரும் மகிழ்ச்சியடையவும் வாய்ப்பு அளிக்கிறது.
ஆம், இக்குடும்பக் கொண்டாட்டங்களின்போது சில நேரங்களில் நம் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டையிட நேரிடும் என்பது எனக்கு நன்கு தெரியும். உங்கள் சகோதரர் உங்கள் உணவிலிருந்து சிலவற்றைத் திருடியிருக்கலாம், உங்கள் பெற்றோர் நீங்கள் பெரியவர்களுக்குச் சரியான மரியாதை கொடுக்காமல் இருந்ததற்கு உங்களைத் திட்டியிருக்கலாம், அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் உங்களுக்குக் கொடுத்த பரிசு உங்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்பிரச்சனைகள் எல்லாக் குடும்பத்திலும் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகள் தானே? இப்பிரச்சனைகளிலிருந்து நாம் எப்படி உணர்கிறோம் என்பதை ஒருவருக்கொருவர் பேசி உணர்த்துவதன் மூலம் பிறரைப் பற்றி மேலும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு அமைகிறது. அவ்வாறு செய்தால் நாம் அனைவரும் ஒருவரையொருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும், வலுவான பிணைப்பையும் மறக்க முடியா இன்ப நினைவுகளையும் உருவாக்கவும் முடியும். அதோடு, அந்த நாளில் ஒரு பிரச்சனை இருந்தாலும் அதற்கு ஈடுசெய்ய பல நல்ல நினைவுகள் ஏற்பட்டிருக்கலாம் – வேடிக்கையான உரையாடல்கள், மனம் விட்டுப் பேசும் நிகழ்வுகள், சேர்ந்து வாய்விட்டுச் சிரிக்கும் நொடிகள் போன்றவை எல்லாம் கொண்டாட்டங்களின்போது எழுந்த பிரச்சனையை மறக்க வாய்ப்புகளை நமக்கு உருவாக்குகின்றன.
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பது குடும்பத்திற்கும் பொருந்தும். சண்டையிட்டுப் பிரிந்து கிடப்பதைவிட ஒற்றுமையாக இருப்பது ஒரு குடும்பத்திற்கு நன்மையைத் தரும். மானிடராய் பிறத்தல் அரிது என்பது போல் ஒருவருக்கு நல்ல குடும்பம் அமைவதும் அரிதே. ஆனால் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க குடும்பக் கொண்டாட்டங்கள் வாய்ப்புகள் நிறைய தருகின்றன. அவை, குடும்பத்துடன் சேர்ந்து இருக்க நேரம், ஒற்றுமையை வளர்க்கும் சந்தர்ப்பம், கற்றுக்கொள்ள பாடங்கள், மனதில் எப்போதும் மறையாமல் இருக்கும் நினைவுகள் ஆகியவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
ஆனால், உங்கள் குடும்பத்திடம் உங்கள் அன்பைத் தெரிவிக்கக் குடும்ப கொண்டாட்டங்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம் — இன்றே அவர்களிடம் உங்கள் மனமார்ந்த நன்றிகளையும் அன்பையும் தெரிவியுங்கள்!
இததுடன் என் உரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம் !
Tuesday, August 19, 2025
2025 ஆம் ஆண்டு, உயர்நிலை மூன்றாம் வகுப்பு மாணவியர் , தங்களைக் கவர்ந்த ஒரு தமிழறிஞரையோ, கவிஞரையோ, பாடலாசிரியரையோ பற்றிப் படித்தறிந்தபின், அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, ஒரு சொற்பொழிவாக உருவாக்கி ஒப்படைத்த படைப்புகள்
நான் மதித்துப் போற்றும் தமிழறிஞர் - குன்றக்குடி அடிகளார்-
தர்ஷிதா செல்வராஜூ - Year 3- 2025
*********************************
***************************
நான் மதித்துப் போற்றும் கவிஞர் - மகாகவி சுப்ரமணிய பாரதியார்
மோனிகா ஜகன்னாதன் - Year 3- 2025
நான் மதித்துப் போற்றும் கவிஞர் - மகாகவி சுப்ரமணிய பாரதியார்
ஏஞ்சலின் - Year 3- 2025
நான் மதித்துப் போற்றும் கவிஞர் - வாலி
சுகரிதா - Year 3- 2025
***************************
நான் மதித்துப் போற்றும் கவிஞர் - நா. முத்துக்குமார்
மதுஶ்ரீ - Year 3- 2025
Friday, August 8, 2025
நீ அறியாது செய்த செயலால், உன் உறவினர் ஒருவருக்குச் சமூகத்தில் இருந்த நன்மதிப்பு பாதிக்கப்பட்டது
Srutika Sanjaykumar - Year 3 - 2025
என் மாமாவின் கடையில் அன்று அமைதி
நிலவியது. பணமே இல்லாத பணப்பதிவேட்டின் பின்னால் மாமா தொலைபேசியைப் பார்த்தவாறே
உட்கார்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொங்கி ஆறாக ஓடியது.
அழுது அழுது அவர் கண்கள் சிவந்து இருந்தன. மாமாவின் நிலையைப் பார்த்து, என் உள்ளம் நொந்தது. நம்பிக்கை
என்பது கண்ணாடி போன்றது. ஒரு முறை அதை உடைத்துவிட்டால், சரி செய்தாலும், வடுக்கள் என்றைக்கும் மறையாது. நான் செய்த தவறு
சமூகத்தில் என் மாமா கடினமாக உழைத்து பெற்றிருந்த நற்பெயரைச் சிதைத்தபோது, இதைக் கற்றுக்கொண்டேன். கண்கலங்கிய
என் மாமாவைப் பார்த்தவாறே, என்
எண்ணங்கள் பின்னோக்கிச் சென்றன.
“வா மலர், உன் மாமாவின் கடைக்குச் செல்லலாம்!” என்று அம்மா
அழைத்ததும், நான் என்
மெத்தையிலிருந்து ஆனந்தத்தில் குதித்தேன். என் மாமாவின் மீது எனக்கு அளவில்லாத
அன்பு இருந்தது. தினந்தோறும் அவருடைய கடைக்குச் சென்று நான் உதவிக்கரம் நீட்டுவேன்.
அன்றைக்கும் அப்படி தான். என் முகத்தில் புன்னகை பூத்தவாறு என் மாமாவின் சிறிய
உணவு கடைக்குச் சென்றேன். “மாமா!” என்று நான் கூறி, மாமாவை அனணைத்துக் கொண்டேன். நேரம் சென்றதே
எனக்குத் தெரியவில்லை. என் மாமாவின் கடையிலிருந்த பல உணவுப் பொருட்களைச் சரியாக,
ஒழுங்கான முறையில் அடுக்க உதவினேன்.
வியர்வை முத்துகள் என் நெற்றியிலிருந்து வழிந்தன. வேலை அனைத்தும் முடிந்தவுடன்,
நான் என் தொலைபேசியில் ஒரு
புகைப்படத்தை எடுத்து, “மாமாவின்
கடையில் வேலை முடிந்தது!” என்ற தலைப்புடன் இணைய தளங்களில் பதிவேற்றினேன். பின்னர்
மாமாவிடம், “புறப்படுகிறேன்!”
என்று கூறி, அம்மாவுடன்
வீட்டிற்குச் சென்றேன். ஆனால், நான்
இவ்வாறு செய்தது மாமாவின் நன்மதிப்பைப் பாதித்துவிடும் என்பதை நான் அறியவில்லை.
மறுநாள் காலை இருட்டாக இருந்தது.
பலத்த காற்றுடன் கனத்த மழையும் இனணந்தது. கார்மேகங்கள் வானத்தை சூழ்ந்தன. நான் என்
மெத்தையிலிருந்து மெதுவாக எழுந்து, என்
தொலைபேசியை எடுத்தேன். மலர்ந்திருந்த என் முகம் உடனே வாடியது. என் கண்கள் அகல
விரிந்தன. நான் பதிவேற்றிய புகப்படம் ஆயிரக்கணக்கான வெறுப்புக் கருத்துக்களைப்
பெற்றிருந்தது. “நான் இந்தக் கடையிலா உணவைச் சாப்பிட்டேன்?” , “ஏமாற்றம்!”, “இப்படிப்பட்ட பொருட்களை விற்பது தவறு!” என்று பல
கருத்துக்களை வாசிக்க என் கண்கள் அங்கும் இங்கும் ஓடின. அப்போது மாமா என்
தொலைபேசியில் அழைத்தார். “இப்படி நீ செய்வாய் என்று நான் நினைத்துப்பார்க்கவே
இல்லை மலர். என் கடைக்கு இனி என்ன நடக்குமோ…” என்று கவலையுடன் கூறியவாறே
தொலைபேசியை வைத்தார். அன்று நாள் முழுவதும் மாமாவின் கடைக்கு யாரும் வரவில்லை.
மேசைகளும் நாற்காலிகளும் அசையாமல் இருந்தன. என் மாமாவின் கடையைத் திட்டிய பல
பதிவுகளை நான் இணையத் தளங்களில் பார்த்தேன். கடையைத் தாண்டி நடப்பவர்கள் அதைச்
சுட்டிக்காட்டி, மும்முரமாகப்
பேசினர். ஆனால், யாரும்
உள்ளே வரவில்லை. நான் என்ன செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை. குழப்பதில் என் தலை
சுற்றியது. நான் பதிவேற்றிய புகைப்படத்தை உற்றுப் பார்த்தேன். சில
நிமிடங்களுக்குப் பிறகு தான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்து விட்டது. என்
கண்கள் அகல விரிந்தன. நான் செய்த தவறு என்னால் நம்பவே முடியவில்லை. நான் என்ன தவறு
செய்தேன் என்று தெரியுமா?
புகைப்படத்தை உற்றுப்
பார்த்தபோதுதான் என் உருவத்தின் பின்னால் காலாவதியான உணவுப் பொருட்கள் இருந்ததைக்
கவனித்தேன். ஆனால், இந்த
உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தத்தான் மாமா ஒரு மேசையில் வைத்திருந்தார். இதை
அறியாத இணைய பயணர்கள் என் மாமாவின் கடைக்குச் செல்வதையே நிறுத்திவிட்டனர்.
வழக்கமான வாடிக்கையாளர்கள் கடையைத் தவிர்த்தனர். அக்கம் பக்கத்திலிருந்த பலர்
கடையின் தரம் எப்படி குறைந்துவிட்டது என்று பேசினர். கடையில் தூய்மைக்கும்
தரத்திற்கும் பெயர் பெற்ற என் மாமா வேதனையில் தவித்தார். நான் செய்த தவற்றைச் சரி
செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, மாமாவின் கடைக்கு ஓடினேன்.
“இப்பொழுது நான் என்ன செய்வேன் மலர்?”
என்று மாமா கவலையுடன் கேட்டது என்னை
நிகழ்காலத்திற்குச் சுண்டியிழுத்தது. “என்னை மன்னித்து விடுங்கள் மாமா. நான் தவறு
செய்துவிட்டேன். ஆனால், அதைச்
சரி செய்ய நான் முயற்சி செய்கிறேன் மாமா…” என்று நான் மன்னிப்பு கோரியதற்கு என்
மாமா கவலையுடன் தலையசைத்தார். என் மாமா அனலில் இட்ட புழுவைப்போல்
துடித்துக்கொண்டிருந்தது என் தவறால் தான். உடனே, நான் பதிவேற்றிய புகைப்படத்தை நீக்கினேன்.
பின்னர் என் தவற்றை ஒப்புக்கொண்டு, என்
புகைப்படத்தில் இருந்த பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்த வைத்திருந்தவை என்பதைத்
தெளிவுபடுத்தி, இணையத்தில்
பதிவேற்றினேன். அதுமட்டுமின்றி, என்
மாமாவின் அன்றாட வழக்கத்தில், அவர்
எவ்வாறு கடையைச் சுத்தம் செய்கிறார் என்றும் காலாவதி தேதிகளைச் சரிபார்ப்பதும்
ஒவ்வொரு வாடிக்கையாளருடன் அவர் எவ்வாறு பணிவுடன் பழகினார் என்றும் ஒரு காணொளியை
உருவாக்கி, இணையத்தில்
பதிவேற்றினேன்.
மறுநாள் காலையில் ஆவலுடன் என்
தொலைபேசியை எடுத்தேன். மக்கள் நான் கூறிய உண்மையை நம்புவார்களா? அல்லது அலட்சியப்படுத்துவார்களா?
என் மனம் படபடவென்று அடித்தது.
நடுநடுங்கும் கைகளுடன் தொலைபேசியைத் திறந்தேன். என் கண்களை என்னால் நம்பவே
முடியவில்லை. என்ன ஆச்சரியம்! இணையத்தில் இருந்த அனைவரும் நான் செய்த தவற்றைப்
புரிந்து கொண்டு, என்னை
மன்னித்துவிட்டனர். பலர் என் நேர்மையைப் பாராட்டினர். “நல்ல வேளை! கடைக்குச்
செல்லாமல் இருந்தது எனக்குக் கவலையாக இருந்தது.” போன்ற பல கருத்துகள் இருந்தன. என்
முகத்தில் புன்னகை பூத்தது. மாமாவின் கடையில் மக்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது.
வியாபாரமும் செழித்தது. என் மாமா? முகத்தில்
அப்போது தான் புன்னகை பூத்து, “அடுத்தமுறை,
சரிபார்த்துவிட்டு, புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்று
மலர்! ஆனால், உன்
தவற்றை உணர்ந்து, ஏற்பட்ட
பாதிப்புகளைப் போக்க முயற்சிகளை மேற்கொண்டது நன்று!” என்று மாமா கூறினார்.
அன்றிலிருந்து, நன்மதிப்பு வளர பல வருடங்கள்
எடுக்கும் என்றாலும், அதை ஒரு
நொடியிலேயே சேதப்படுத்த முடியும் என்று கற்றுக்கொண்டேன். நான் அறியாது செய்த
தவறினால், என்
மாமாவின் நன்மதிப்பே பாதிக்கப்பட்டது. அன்று நடந்த மறக்க முடியாத சம்பவம், இணையத்தில் பதிவேற்றுவதற்கு முன்பு
சரிபார்ப்பதன் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது.
- முற்றும்
-
Tuesday, July 8, 2025
‘பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.
KARUPPAIYA BARANI NIVEDHAAYear 4- 405 - 2025 |
“சிங்கை நாடு!
என்ற
பாடல்வரிகளோடு நான் என் உரையைத் தொடங்குகிறேன். மாணவர்கள், ஆசிரியர்கள்,
சிறப்பு விருந்தினர் பிரதமர் திரு
லாவ்ரன்ஸ் வாங் முதலிய அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தையும் தேசியதின
நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
இப்போட்டியில்
பங்கேற்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரி, நான் இழுத்தடிக்கமல் என்
தலைப்பைப்பற்றி விவரிக்கிறேன். சிங்கப்பூர், நம் நாடு,
இல்லம், உறைவிடம், பள்ளி,
என்ற எத்தனை பெயர் கொண்டு அழைத்தாலும் போதாது. உலக வரரைபடத்தில்
கண்ணுக்கே தெரியாத சிறு புள்ளியாக இருந்தாலும், கல்வி,
மருத்துவம், வணிகம் முதலிய பல்வேறு
தொழில்களில் அதிவேகத்தில் முன்னேறுகிறது நம் சிங்கப்பூர். இப்படிப்பட்ட நாட்டின்
குடிமக்களாக இருக்க நாம் தினமும் பெருமை கொள்கிறோம், தலை
நிமிர்ந்து நடக்கிறோம். ஆனால், சிஙப்பூரை நிம்மதி மிகுந்த
வெற்றிகரமான தேசமாக வைத்துக்கொள்வதில் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பங்குண்டு.
அதன் ஒரு முக்கிய கூறே சமூக ஒற்றுமையும் நல்லிணக்கமும். இவற்றைக் கடைப்பிடித்து
வாழ்வது நம் அனைவரின் தலையாய கடமையாகும். என்னைப் போன்ற மாணவர்களுக்கும்கூட இதில்
முக்கியப் பங்குள்ளது. ஆம், நமக்கும் ஒரு மிகப்பெரிய
பங்குள்ளது, சரிதானே நண்பர்களே? இப்பங்கைப்பற்றி
நான் இவ்வுரையில் மேலும் விளக்குகுகிறேன்!
”சின்ன சின்ன
பிள்ளைகளை நம்பி,
இந்த நாடே இருக்குது
தம்பி!
சின்னஞ்சிறு கைகளை நம்பி,
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி!”
என்ற
பாடல்வரியை நான் பலமுறை கேள்வியுற்றுள்ளேன். சிறுவயதில் கேட்டபோது, அவற்றின்
உண்மையான மகத்துவம் எனக்குப் புரியவில்லை, ஆனால்,
நான் வளர வளர இவ்வரிகளில் உள்ள உண்மையை நான் மெல்ல மெல்ல உணரத்
தொடங்கினேன். இக்காலத்து இளையர்களும் பிள்ளைகளுமேதான், நாளைய
சமுதாய தலைவர்களாகவும் மாறுகிறார்கள். அதனால்தான், மாணவர்களாகிய
நாம், பள்ளிப்பருவத்திலேயே இன
நல்லிணக்கத்தைப் பற்றியும் பிற இனக் கல்லாச்சாரங்களைப்பற்றியும் நன்கு அறிந்து
புரிந்துகொள்ளவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள நம் சீன, மலாய்,
தமிழ் முதலிய அனைத்து இன நண்பர்களையும் பிரித்துப் பார்க்காமல்,
ஒரே தராசில் வைத்து வேறுபாடில்லாமல் நட்பு பாராட்ட வேண்டும்.
சிறுவயதில்
நம் மனதில் இவ்வெண்ணங்கள் வளர்ந்துவிட்டால்,
நாம் வளர வளர இதே நல்லெண்ணத்தோடும்
பாகுபாடின்மையோடும் எல்லாரோடும் பழகுவோம். ‘தொட்டில் பழக்கம்
சுடுகாடு வரை” என்று கூறுவர், அதுபோல
நாமும் இந்த நல்ல வழக்கத்தைச் சிறுவயதிலிருந்தே கடைப்பிடித்தால், நம் இறுதிக்காலம் வரை இன நல்லிணக்கத்திற்கு நம்மால் முடிந்த பங்கை ஆற்ற
இயலும். நம்மில் ஒருவர்கூட முன்வந்து, இன வேறுபாடுகளை
எதிர்த்தாலே போதும், அது நம் சமுதாயத்தையே மாற்றியமைக்கும்.
இரண்டாவதாக, மாணவர்களாகிய நமக்கு இக்காலத்தில் கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறன் கற்பித்து வளர்க்கப்பட்டிருக்கும். எனக்குத் தெரியும், நீங்கள் அனைவரும் என்ன யோசிக்கிறீர்கள் என்று. தகவல் தொழில்நுட்பத் தொடர்புத்திறனிற்கும், சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருத்தலில் மாணவரின் பங்கிற்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தானே யோசிக்கிறீர்கள்? நான் கூறுகிறேன், கேளுங்கள். தொழில்நுட்ப வளர்ச்சியடந்த இவ்வுலகில், நொடிக்கு நொடி நமக்குத் தகவல்கள் வருகின்றன. ஆனால், அவற்றில் எவை பொய் எவை உண்மை என்பதை நம்மில் பலர் ஆராயத் தவறுகிறோம். அதிலும் சிலர் ஆராயாமலே பல செய்திகளைப் பரப்புகிறார்கள். இதனால், தகவல்கள் மாறுபட்டு, மக்கிளிடையே பொய்யான எண்ணத்தை உருவாக்குகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இவ்வாறு நடப்பது மிகவும் அபாயமான ஒன்றாகும். ஒரு இனத்தைப்பற்றி தவறான, பொய்யான செய்தி ஒன்று வெளிவந்து, அதை அனைவரும் நம்பிவிட்டால், அவர்கள் மனதில் இவ்வினத்தைப்பற்றிய கெட்ட அபிப்பிராயம் ஏற்பட்டுவிடும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படும் எண்ணங்களும் நிலைப்பாடுகளும்தான், இறுதியில் இனவெறியாகவும் இனவெறுப்பாகவும் வெடிக்கின்றன. ஆனால், நமக்கோ, பொய்யான செய்தியையும் உண்மையான செய்தியையும் வேறுபடுத்த கற்பிக்கப்பட்டுள்ளது. நாம் தவறான தகவல்களின் வலையில் சிக்கிக்கொள்ளாமல், அவ்வாறு பரவும் தவறான தகவல்களைப்பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தலாம். ஓர் இனத்தை அவமானப்படுத்தும் எண்ணத்தோடு பரப்பப்படும் ஏதேனும் ஒரு பொய்யான செய்தியை நாம் கண்டால், அதைப்பற்றி நம் பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் கூறி, அதைப் பரப்ப வேண்டாம் என்று கூறலாம். இது ஒரு சிறிய செயலாக தெரிந்தாலும், “சிறு துளி, பெரு வெள்ளம்” என்ற பழமொழிக்கேற்ப, நாம் ஒவ்வொருவரும் இச்சிறிய செயலைச் செய்தால், அது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இறுதியாக, மாணவர்களாகிய
நாம் அனைவருக்கும் ஒரு குரல் உள்ளது, நீதி மனப்பாண்மை
உள்ளது. பள்ளியில் ஒவ்வொரு நாளும் நாம் நியாயத்தைக் கடைப்பிடிப்பது பற்றியும்,
தவறு நடப்பதைப் பார்த்தால் தட்டிக்கேட்க வேண்டும் என்பது பற்றியும்
கற்கிறோம். அது கற்றலோடு மட்டும்
நின்றுவிடாமல், நம் வாழ்வில் இடம்பெற வேண்டும். நம் முன்
யாரோ தன் மற்ற இன நண்பனைக் குறைத்துப் பேசுவதையோ
இனரீதியாக அவமானப்படுத்துவதையோ நாம் கண்டால், அதை எதிர்த்து
நின்று துணிச்சலாகக் கேள்வி கேட்க வேண்டும்; நடக்கும் தவறைத்
தடுக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் தவறு செய்யாமல்
இருந்தால் மட்டும் போதும்; தவற்றைத் தட்டிக்கேட்பது என்
கடமையல்ல என்று எண்ணுவோர் பலருண்டு. ஆனால், அது மிகத்தவறான
எண்ணப்போக்கு. கண்ணெதிரே நடக்கும் அநீதியைத் தடுப்பது ஒவ்வொரு மனிதனுடைய
கடமையாகும். மாணவர்களாகிய நாமும் பள்ளி, கடைத்தொகுதி,
உணவகம் என்று பார்க்காமல், எங்கு இனரீதியாக
தவறு நேர்ந்தாலும் அதைத் தட்டிக்கேட்க வேண்டும்.
சரி, இவ்வுரையில்,
மற்ற இனத்தவரை மதித்து நடப்பதைச் சிறு வயதிலிருந்தே பழக்கமாக்குவது,
இனந்தொடர்பாக வரும் பொய்யான செய்திகளை முடக்குவது, இனத்தவறுகளைத் தட்டிக்கேட்பது ஆகியவை இன மற்றும் சமூக ஒற்றுமை
நிலைத்திருக்க மாணவர் செய்யும் பங்கு என்று பகிர்ந்துகொண்டுள்ளேன். இதுவரை என்
உரையைக் கேட்ட அனைவருக்கும், நான் மனதார நன்றி நல்கி
விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!
****
'பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவரின் பங்கு’ எனும் தலைப்பில் ஒரு சிற்றுரை எழுதவும்.
Lithra Ramamoorthy - Year 4 - 408 - 2025
இனிய மாணவர்களே; வருங்கால தலைவர்களே! மற்றுமுள்ள பார்வையாளர்களே! உங்களஉங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்களைத் தெரிவித்து எனது சொற்பொழிவைத் தொடங்க விரும்புகிறேன். இப்போது, நான் உங்கள் அனைவரையுமே சற்றுச் சிந்திக்க வைக்கும் விதத்தில் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். உங்களில் எத்தனை பேரின் பெற்றோர் “மலாய் தோழிகளை வைத்துக்கொள்ளாதே,” அல்லது, “சீனக்காரர்கள் இப்படித் தான்,” அல்லது, “இந்தியர்களுடன் பழகாதே,” போன்ற கருத்துகளைக் கூறிக் கேட்டிருக்கிறீர்கள்? இது போன்ற கருத்துகள் இப்பொழுது சிறியதாகத் தெரியும்; “வீட்டிற்குள் பேசுவதுதானே? அதில் என்ன தவறு இருக்கிறது?” என்று பலர் யோசித்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற சிறிய சிறிய கருத்துகள் சிறு துளி பெருவெள்ளமாய்ச் சேர்ந்து, நமது சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் சூழலை எழுப்புவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, இந்தச் சிற்றுரையின் மூலம், நமது நாட்டிற்கு வருங்கால தலைவர்களாக விளங்கப்போகிற மாணவர்களாகிய உங்களிடம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமை நிலைத்திருக்கச் செய்வதில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கப் போகிறேன்.
முதலாவதாக, “மாணவர்களாகிய நாம் எதற்காகப் பங்காற்ற வேண்டும்? அதற்குத்தான் அரசாங்கம் இருக்கிறதே,” என்ற கேள்வி இந்நேரம் உங்களில் பலரது மனங்களில் எழுந்திருக்கும் என்று நம்புகிறேன். இதற்குப் பதிலளிக்க, மானவர்களாகிய நாங்கள் தான் போன தலைமுறைகளின் தவறான எண்ணங்களை உடைத்து, வரும் தலைமுறைகளுக்குச் சிறந்த முன்னோடிகளாக விளங்கவேண்டும். அதனுடைய முதல் படி, நமது வீட்டிற்குள்ளே ஆரம்பமாகுகிறது. மற்ற இனத்தவரிடம் கோபமாகவோ எரிச்சலுடனோ நடந்துகொள்ளும் பெரும்பாலான இளையர்கள் உண்மையில் அதுபோன்ற கருத்துகளைக் கொள்வதில்லை. பெற்றோர் அல்லது மூத்த உறவினர்கள்கள் தான் அதுபோன்ற தவறான கருத்துகளை அவர்களது மனங்களில் பதியும் சூழலை உருவாக்குவர். இதனைத் தடுத்து நிறுத்துவது, மாணவர்களாகிய நமது தலையாய கடமையாக விளங்கவேண்டும். வீட்டினுள் மற்ற இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளைப் பேசும்போது, அதனைச் சுட்டிக்காட்டி, வேரோடு அறுக்க வேண்டும். அதன் மூலம், இது போன்ற தவறான கருத்துகளைப் பரப்புவதை நிறுத்தலாம். சில நேரம், நாமே மற்ற இனத்தவரைத் தவறாக பேசுகிறோம் என்று உணரவே மாட்டோம். ஆனால், அவை நம் அன்றாட கலந்துரையாடல்களில் இலைமறை காய்போல் ஒளிந்திருந்தும், அவற்றைச் சுட்டிக்காட்டி, கண்டிப்பதுதான் சமூக ஒற்றுமைக்குப் பங்காற்ற நமக்கு வழிவகுக்கும்.
இரண்டாவதாக, தவறான கருத்துகளை ஒழிப்பது மட்டும் போதாது; புதிய நல்லக் கருத்துகளைப் பரப்பவேண்டும். அடுத்த படியாக, வீட்டுக்குள் மட்டுமின்றி, வெளியுலகத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மீது ஆர்வம் கொள்ளவேண்டும். மற்ற இனத்தவரிடம் போய் பேசி, பழகி, அவர்களின் கலாச்சாரம் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! அப்போது, அவர்கள் மீது இருந்த உங்களது தவறான அபிப்பிராயங்கள் எவ்வளவு வேகமாக களைபிடுங்கப்படும் என்று நீங்களே பார்ப்பீர்கள். பெரும்பாலான தவறான கருத்துகள்; புண்படுத்தும் வார்த்தைகள் ஏதோ ஒரு அறியாமையிலிருந்துதான் எழுகின்றன. அந்த அறியாமையைக் கோபமாகக் காட்டாமல் ஆர்வமாகக் காட்டப் பழகுங்கள்! “உணவு வாசனை மிகவும் அதிகமாக இருக்கிறது, எனக்குப் பிடிக்கவில்லை,” என்று நினைக்காமல், “இவ்வுணவு வகையில் எவற்றைச் சேர்த்திருக்கிறீர்கள்? நான் சுவைத்துப் பார்க்கலாமா?” என்று கேட்டுப் பழகுங்கள்! இதன் மூலம், ஒருவரைப் பற்றி இன்னொருவர் ஆர்வம் கொண்டு, கலாச்சாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் சமுதாயத்தை உருவாக்கலாம்.
கடைசியாக, “நான் அடுத்த படியாக பங்காற்ற விரும்புகிறேன்! எவ்வழிகள் உள்ளன?” என்று உங்களில் பலரிடம் ஆர்வம் தோன்றியிருக்கும் என்று நம்புகிறேன். முதலில், உங்கள் பள்ளிகளிலே சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். பள்ளியில் நண்பர்களிடம் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வழிகளைப் பகிர்ந்துகொள்வதோடு, பிறர் மற்ற இனத்தவர்மீது தவறான அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கும்போது, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் புதிய நல்ல கருத்துகளை எடுத்துரைக்கலாம். இதன் மூலம், அவர்கள் தவற்றை உணர்ந்து, தமது தவறான கருத்துகளை விட்டுவிடுவார்கள். மேலும், தமது இனத்தைப் பற்றிய தவறான கருத்துகளால் புண்பட்டு துடுப்பில்லாமல் நீரில் தத்தளிக்கும் ஒருவரிடம் கைகொடுக்கலாம். இதுபோன்ற செயல்கள் சிறியதாகத் தெரியும். ஆனால், அவை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கலாம். அனைவரும் இதுபோன்ற சிறிய படியை முன்வைத்தால் போதும், நம் சமுதாயம் மேலும் ஒற்றுமையாகத் திகழும். மாணவர்களுள் சிலர் சமூக ஊடகங்களில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அதுபோன்றவர்கள் சமூக ஊடகங்களில் இன நல்லிணக்கத்தை உண்டாக்கும் தகவல்களைப் பகிர்வதன் மூலம், மற்ற மாணவர்களுக்கு இத்தகவல்கள் விரைவாகப் போய் சேரும்; விழிப்புணர்வை உருவாக்கலாம்.
சுருங்கக்கூறின், மாணவர்களாகிய
நாம், பல இனத்தவரும் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை
நிலைத்திருக்க செய்வதில் பங்காற்ற பல வழிகள் உள்ளன. வீட்டிலிருந்து ஆரம்பித்து,
பள்ளியில் தொடர்ந்து, சமுதாய அளவிற்கு கூட
விழிப்புணர்வைக் கொண்டு செல்லும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் நிறைந்திருக்கிறது.
“ஊருடன் ஒத்து வாழ்” என்ற ஔவையின் எளிய,
அழகிய பொன்மொழியை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் நடந்துகொண்டால்,
நமது சமூகம் விதவிதமான அழகிய பூக்களைக் கொண்ட பூந்தோட்டத்தைப் போல்
திகழும். என் சிற்றுரையை இதுகாறும் செவிமடுத்ததற்கு என் அன்பார்ந்த நன்றிகளைத்
தெரிவித்து, பணிவுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
*****
-
மொழி மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படைத்துக்கொண்ட மொழி இல்லை என்றால், இன்றைய நாகரிக வளர்ச்சியே இல்லை. உலகின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கு...
-
நான் கடவுளிடம் கேட்க விரும்புபவை R. அஸ்வினி . உயர் நிலை 4 உயர்தமிழ். 22.4.2009 கடவுள்! இந்த நான்கு எழுத்து வார்த்தைக்குள் தான் எத்தைனை அர்த...
-
சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல ...