Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

 

MENEHA RAVICHANDRAN - 2021 

நான் நாற்காலியில் அமர்ந்திருந்தாலும் எனது கைகளும் கால்களும் அசைவதை நிறுத்தவில்லை. பொருமையில்லாமல் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை உணவகத்தின் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து எனது நண்பர்களின் வருகையை ஆவலாக எதிற்பார்த்துக்கொண்டிருந்தேன். இந்தப் பரபரபுக்கு ஒரு காரணம் உண்டு. தவழ்ந்து செல்லும் வயதிலிருந்து இப்போது உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வரை நானும், கமலாவும் அவள் ச்கோதரி மாலாவும் உயிர்த் தோழிகள். எங்கள் பதினைந்து கால நட்பில் துன்பம் சோகம், மகிழ்ச்சி, ஆர்வம் என அனைத்தையும் ஒன்றாகவே அனுபவித்த எங்களிடையே எதுவுமே வராது என்ற நம்பிக்கையில் இத்தனை காலமாக நான் வாழ்ந்து வந்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக தங்களின் தந்தைக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக் கிடைத்து விட்டதால், கமலாவும் மலாவும் வெளிநாட்டுக்கு நிரந்தரமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. நாங்கள் மூவரும் நகமும் சதையும் போல் இணைபிரியாமல் இருப்போம். அப்படி இருக்கையில் நகத்தையும் சதையையும் பிரிக்க முயற்சித்தால் அந்த வலியை நினைத்துதான் பார்க்க முடியுமா? அந்த அளவிதற்கு துன்பத்தை அனுபவித்தாலும், எங்களது கடைசி நினைவு ஒரு சந்தோஷமான நிகழ்வாக இருக்கட்டும் என எண்னி நாங்கள் கடைசி ஒரு நாளாவது உணவகத்துக்குச் சென்று நேரம் செலவிடலாம் என எண்ணினோம்.

அவர்களின் வருகையை எதிர்பார்த்தப்படியே, நான் அமர்ந்திருந்த நாற்காலியை தவிர, கமலாவுக்கும் மாலாவுக்கும் இரண்டு இடங்களை ஒதுக்கிவைத்திருந்தேன். இவ்விரண்டு இடங்களை தவிர உணவகம் முழுவதும் வாடிக்கையாளர்கள்தான். குடும்பன்களின் பேச்சொலியும் சிறுவர்களின் கலகலப்பான சிரிப்பொலியும் எனது செவிகளுக்கு பாய்ந்தன. உணவக ஊழியர்கள் அவசர அவசரமாக உணவு பொருட்களைக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள். ஜன்னல் வழியே பொறுமையில்லாமல் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த நான், கமலாவும் மாலாவும் உணவகத்தின் அருகே நடந்து வருவதை கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். இவ்வளவு நேரம் வாடியிருந்த எனது முகம், ஆதவனைக் கண்ட தாமரையை போல் மலர்ந்தது. எனது இதழ்களில் சிறிதான ஒரு புன்னகை தோன்றியது.

அந்த சமயம் பார்த்து யாரோ ஒரு நபர் காலியாக இருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் அவசரமாக அமர்ந்தார். ஆள் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தார். குறைந்தது ஆறு அடி உயரமாவது இருக்கும். அடர்த்தியான தாடியும் க்ருப்பான முடியும் அவருக்கு பயங்கரமான தோற்றத்தைக் கொடுத்தன. கமலாவும் மாலாவும் நான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்தனர் என்பதை அவர்களின் காலடி சத்தத்தை வைத்தே திரும்பிப்பார்க்காமல் கூட அறிந்தேன். இது வரை சிரித்து குதூகலமாக பேசிக்கொண்டிருந்த அவர்கள், அந்த நபரைக் கண்டவுடன் மௌனமானார்கள். அவரை

வேறு இடத்தைத் தேடி அமரச் சொல்லலாம் என நினைத்துப் பார்க்கக் கூட தயக்கமாக இருந்தது. அவரின் முரடான தோற்றத்தை வைத்துப் பார்த்தால், அவரை கோபப்படுத்தாமல் இருப்பது தான் எங்களுக்குப் பாதுகாப்பு என தோன்றியது. ஆனால் மறு பக்கமோ, இந்தச் சிறிதாக பிரச்சினையினால் நாங்கள் மூவர் சேர்ந்து அனுபவிக்கும் கடைசி நாள் என் வீணாகவேண்டும் என்றும் தோன்றியது. வேறு இடத்திற்கு நகர்வதாக இருந்தாலும், மூன்று இடங்கள் சேர்ந்து வேறு எங்குமே இல்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் என் மனதில் நடக்கும் போராட்டத்திற்கு நடுவில், நாங்கள் மூவர் அங்கு இருப்பதை, அந்த நபர் உணர்ந்துவிட்டார். “ஏதாவது பிரச்சினை உண்டா?" என்று அவர் என்னிடம் கேட்டவுடன், வியப்பில் எனது மனதிலிருந்த எண்ணங்கள் எல்லாம் களைந்தன.

தனது தோற்றத்துக்குச் சமந்தமே இல்லாத அவரது மென்மையான, இனிமையான குரல் எனது செவிகளுக்குப் பாய்ந்தது. சற்று முன்னர் அவரது தோற்றத்தைக் கண்டு எனது மனத்தில் அடங்கிய பீதி, அவரது குரலைக் கேட்டவுடன் கொஞ்சம் அகன்றது. ஆழ்மனத்தில் இருந்த ஒவ்வொரு சொட்டு தைரியத்தையும் திரட்டிக்கொண்டு நான் எங்களது சூழ்நிலையை அவரிடம் விளக்கத் தொடங்கினேன். எனது வாயிலிருந்து ஒவ்வொரு வார்த்தையும் வெளியேற, எனது மனதின்படக் படக்" என்ற தாளம் வேகமானது. "ஒரு நடரிடம் பேடி இவ்வளவு தயக்கமாஎன் நானே என்ண திட்டிக்கொண்டேன். நான் கூறவேண்டியதெல்லாம் சொல்லி முடித்த பின்பு, எப்படி பதில் கூற போகிறாரோ என்று அஞ்சியவாறு மூச்சுவிடாமல் காத்திருந்தேன்.

கொஞ்சம் கூட எதிர்பாராத விதமாக, அவர் நான் கூறியதை கேட்டுவிட்டு சிரித்தப்படியே , "இதை முன்பே நீ கூறியிருக்கலாமே!” என முகத்தில் புன்னகையுடன் கூறினார். இவ்வளவு நேரம் பயத்தில் மூச்சை அடக்கி வைத்திருந்த நான், அவரது பதிலைக் கேட்டவுடன் நிம்மதியில் பெருமூச்சு விட்டேன். எங்களிடம் விடைபெற்றுவிட்டு தனியாக இருக்கும் நாற்காலிக்கு அவர் செல்ல, அந்த இருபது நிமிடங்களில் நடந்து சம்பவங்களைப் பற்றி யோசித்துப் பார்த்தேன்.

வெறும் தோற்றத்தை வத்து மட்டுமே அந்த நபரைப் பற்றி மிகவும் தவறான எண்ணத்தை எனக்குள்ளே நான் உண்டாக்கிக் கொண்டதை நினைத்துப் பார்த்தாலே என் முகம் வெட்கத்தில் தக்காளியை போல் சிவந்தது. ஒரு புத்தகத்தைப் பற்றி வெறும் புத்தக அட்டையை வைத்து மட்டும் அறிய முடியுமா? அதேபோல் தான் மனிதர்களும். எவ்வளவு இனிமையான அழகான தோற்றத்தைக் கொண்டவரும் தீயவராகவும் இருக்கலாம், எவ்வளவு பயங்கரமான தோற்றம் உடையவரும் மிகவும் சாந்தமானவராகவும் இருக்கலாம். அந்த நாளை எனது நண்பர்களுக்காக நான் ஒதுக்கி வைத்திருந்தாலும், இந்த முக்கியமான பாடத்தை எனக்கு கற்பித்த அந்த சம்பவத்தை நான் என்றும் மறக்கமாட்டேன்.

 

No comments: