Friday, November 5, 2021

மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயனடைவதோடு மாணவர்களும் பயன்பெறுகிறார்கள்” எனும் தலைப்பில் குழுமப் பள்ளிகளுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் நீவிர் ஆற்றும் சொற்பொழிவு.

 

   அவந்தி வாசுதேவன்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நாம் நாடு எனும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே.”

ஆம், நம் நாடை எதிர்காலத்தில் காப்பது நாமே; அதை இப்போதே தொடங்க தொண்டூழியம் செய்வோமே!

      இந்த மாபெரும் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், அனைவருக்கும், நம் நாவினில் வசித்திருக்கும் தமிழ்மொழியுக்கும் என் முதற்கண் வணக்கங்கள்! நான் இங்குப் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு: “மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயனடைவதோடு மாணவர்களும் பயன்பெறுகிறார்கள்”.

      சிஙப்பூர் ஒரு நாடாகப் பெரிதும் வளர்ந்து வந்துள்ளது. நம் நாடு இப்போதைய இளைஞர்களின் வளர்ப்பிற்கும் பெரும் பங்கு அளித்து வருகிறது. சிஙப்பூரில் இளைஞர்களைத் தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுப்படுத்த பல முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன - பள்ளிகளில் கட்டாய தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுப்படுத்துவது, மாணவர்கள் தொண்டூழியம் செய்தால் தொண்டூழிய புள்ளிகள் அளிப்பது. “இளைஞர்களின் தொண்டூரிய உதவியினால் நாடு பயனடையும்.” என்றுக் கூறியே ஆசிரியர்களும் அரசாங்கமும் மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். ஆனால், இது முழுதும் உண்மையா? மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் மட்டும்தான் பயனடைகிறதா? அதன்மூலம், மாணவர்களும் சற்றும் பயனடைவதில்லையா? ஆம், தொண்டூழிய சேவையினால், நாடு பயனடைகிறது. ஆனால், இதுமட்டும்தான், மாணவர்கள் தொண்டூழ்க்ஷியம் செய்ய வேண்டியதற்கான காரணமாகுமா? வாருங்கள், இந்தத் தலைப்பை நாம் மேலும் அலசி ஆராய்வோம்.

      ஆம், மாணவர்கள் தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுப்படுவது சமூகத்திற்குப் பயனளிக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மாணவர்களின் இளம் மூளைகளிலும் மனதிலும் ஏற்படும் யோசனைகள், நம் நாட்டையே மாற்றி அமைக்கும் வாய்ப்பைக்கொடுத்துள்ளன. பெரியவர்களால் பார்க்க முடியாத உணரமுடியாத பிரச்சனைகளுக்கும், நாட்டைப் புத்தாக்கமாக மேம்படுத்துவதற்கும் தீர்வுகாண மாணவர்களால்தான் முடியும். இம்மாணவர்கள், அவர்களுடைய வாழ்வில், சிறிது நேரத்தை: மாதத்திற்கு ஒன்றோ இரண்டோ நாட்கள், செலவழித்து தொண்டூழியம் செய்தால், சமூகம் பயனடைவது நிச்சயம்தான். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள்.” என்பதற்கேற்ப, நம் நாட்டுக்குப் பங்காற்றுவது நம் கடமை, என்பது உண்மையே. நம்மை வளர்த்த நாட்டுக்கு, நம்மால் முடிந்தவரை பங்காற்ற, பணமோ, பேரோ, புகழோ, இல்லாவிட்டாலும், நேரத்தைச் செலவழித்து, தொண்டூழியம் செய்து, உதவியைத் திருப்பிக்கொடுக்கலாம். எனவே, மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயணடைகிறது. மாணவர்கள் வளர்ந்த பிறகும், நாடு தொடர்ந்து பயனடையும். “இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள்" என்பது இங்குக் கண்டிப்பாக உண்மையே. இது என் அடுத்த கருத்துக்கு இட்டுச் செல்கிறது. 

தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம், மாணவர்கள் பல பண்புகளையும் திறன்களையும் வளர்த்துக்கொள்கின்றனர்அதில் தலைமைத்துவ திறனும் ஒன்றாகும். மாணவர்கள் சமூகத்தில் இருக்கும் வெவ்வேறு நபர்களின் தனித்தனி பிரச்சனைகளை அறிந்து அதை எவ்வாறு சரி செய்வது, அந்நிலையை எவ்வாறு மேம்படுத்துவது என்று யோசித்து, அந்த நடவடிக்கைகளை நடத்தி உதவும்போது, மாணவர்களால் தலைமைத்துவதிறனை வளர்த்துக்கொள்ள முடிகிறது. இரண்டாவதாக, தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, மாணவர்கள், மற்றவர்களிடம் கருணை காட்டி உதவி செய்யக் கற்ற்க்கொள்கிறார்கள். கருணையுள்ளம் படைத்திருப்பது, வாழ்கையில் முன்னேறப் பெறும் உதவியாக விளங்கும் பண்பாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

கருணை என்னும் பண்பு, வாழ்வில் யாரை சந்தித்தாலும், பிரச்சனை இல்லாமல் ஒன்று சேர்ந்து வேலை செய்ய வழிவகுக்கும். மேலும், மாணவர்கள் தொண்டூழிய நடவடிக்கைகளில் அவ்வப்போது ஈடுபடுவதன்மூலம், நேரத்தை ஒழுங்காகச் சமாளிக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ளலாம். பள்ளிக்கும் சென்று, பள்ளிப் பாடங்களையும் படித்து, வீட்டுப்படமும் செய்து, தொண்டூழியமும் செய்து வருவதால், மாணவர்கள் தம் நேரத்தை ஒழுங்கான் வகையில் செலவழிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். எனவே, மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் மாணவர்களும் பயன்பெறுகிறார்கள்.

      சிரித்து வாழு, சிரித்து வாழு, பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. உழைத்து வாழு, உழைத்து வாழு, பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே.” நம்மை இவ்வளவு வளர்த்த சமுதாயத்தின் உழைப்பை மதித்து, நாமும் உழைத்துச் சமூகத்திற்கு உதவி செய்வது நம் கடமையாகும். நம் சமுதாயம் நமக்கு அளித்த கல்வி சேவைகளும் சுகாதார சேவைகளும், பாதுகாப்பான சூழலும், நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாருக்குமே இருக்காது. இந்த வசதிகள் இல்லாத வசதி குறைந்தோருக்கு நாமே உதவி செய்யவேண்டும். இது மாணவர்களுக்கும் பயன் அளிக்கும் என்றால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிப்பதுபோல்தானே அல்லவா?

      எனவே, தொண்டூழியம் நடவடிக்கைகளில் ஈடுப்படும்போதுப் சமூகம் மட்டுமில்லாமல் மாணவர்களும்கூட பயனடைகிறார்கள் என்றால் ஏன் மாணவர்களாகிய நாம், அனைவரும் தொண்டூழியத்தில் ஈடுபடக்கூடாது? இன்று முதல் நாம் அனைவரும், நம் எதிர்காலத்தை எண்ணி, மணமாற தொண்டூழியம் செய்வோம், நாட்டுக்குப் பங்களிப்போம், அதே சமயத்தில் நம்மையும் வளர்த்துக்கொள்வோம்.

      வாழ்க்கையெனும் ஓட்டப்பந்தயத்தில் நாம் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயல்கிறோம். ஆனால், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த ஓட்டப்பந்தயத்தை முடிக்க முயற்சிக்க வேண்டும். கீழே தளர்ந்து விழுவோரை கைகொடுத்து எழுப்ப வேண்டும், பின்தொடர்வோரை வேகமாக் ஓட ஊக்குவிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒன்றினைந்து இணங்கினால் இன்னும் வேகமாக ஓட்டப்பந்தயத்தில் வெற்றிகாணலாம். அது சமூகத்திற்கு மட்டுமில்லாமல், நமக்கும் பயனளிக்கும். அதுபோல்தான், தொண்டூழியம் செய்வதும். மாணவர்கள் செய்யும் தொண்டூழிய நடவடிக்கைகளால் சமூகம் பயனடைவதோடு மாணவர்களும் பயன் பெறுகிறார்கள் என்ற உண்மையை மறுப்பது, முழுப் பூசனியை சோற்றில் மறைப்பதுபோல் ஆகும்.

ஏன் தொண்டூழியம் செய்யவேண்டும்?

நாட்டுக்குநம்மை வளர்த்த நாட்டுக்குச் சேவை ஆற்றுவோம்

நமக்கு - நம் சொந்த திறன்களையும் பண்புகளையும் மேம்படுத்திக்கொள்வோம்

நாட்டுக்கும் நமக்கும் பயனளிக்கும் தொண்டூழியத்தை ஏன் செய்யாமல் இருக்கவேண்டும்?

No comments: