Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காக காத்துககொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர் அவற்றுள் ஒன்றை தம வசமாக்கிக்கொண்டார். அந்த சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது.


GA LAAVANYA - 2021

 ரியா, நீயும் மகாவும் எங்கே இருக்கிறீர்கள்? நான் மருத்துவமனையின் முதல் மாடியில் இருக்கும் உணவகத்தில் காத்துக்கொண்டிருக்கிறேன் சீக்கரம் வாருங்கள்!” என்று நான் தொலைபேசியில் ரியாவுடன் தொடர்புகொண்டேன். என் நா நம நமத்தது. என் வாயில் எச்சில் ஊறியது. பற்பல உணவுகளின் மணம் என் மூக்கைத் துளைத்தது. மருத்துவமனையாக இருந்ததால் தாதியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள், நோயாளிகளை சந்திக்க வந்தவர்கள் என்று பரபரப்பாக இருந்தது. ஊசி கூட வைக்க முடியாத அளவிற்கு கூட்டமாக இருந்தது. முன்பே நான் அங்கு சென்று விட்டதால் என் நண்பர்களுக்காக சில இடங்களை ஒதுக்கி வைத்து விட்டு அவர்களது வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன்.

என் கால்கள் நிற்க முடியாமல் அசைந்துகொண்டே இருந்தன. கடிகார முள் என் கண்களுக்கு ஆமை வேகத்தில் நகருவதுபோல் இருந்தது. தட்டு மேசையில் வைக்கப்படும் சத்தம்உலோக முள்கரண்டியும் கரண்டியும் இடிக்கும் சத்தம் என் செவியில் விழுந்தன. சிங்கப்பூரில் பிரபலமான உணவுநாசி லமாக்" முன்பைவிட மிகவும் கடுமையான மனம் என் மூக்கை துளைத்தது. கடைக்கண் வாயிலாக ஓர் ஆடவர் நான் ஒதுக்கி வைத்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தது எனக்குத் தென்பட்டதுஅந்த ஆடவர் சோற்றைக்கூட விழுங்க ஒரு வினாடி ஒதுக்காமல் மீண்டும் மீண்டும் அள்ளி சாப்பிட்டார். அவருடைய கண்கள் கடிகாரத்தையும் சாப்பாட்டையும் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே இருந்தார். “வணக்கம், நான் இந்த இருக்கையை ஒதுக்கி உள்ளேன். வேறு இடம் தேடி உணவை உண்ண முடியுமா?” என்று மெதுவாக பணிவுடன் கேட்டேன். “நான் ஓர் அவசரத்தில் இருக்கிறேன். நான் இந்த இருக்கையில் உட்கார முடியுமா? என்னை மன்னித்துவிடு,” என்று பதிலளித்தார்மறு பதிலளிப்பதற்கு ரியாவும் மகாவும் புன்னகை பூத்த முகமாக என்னை அழைத்தனர்.

யார் அவர்? நமக்காக இடங்களை ஒதுக்கியுள்ளாய் என்று சொன்னாய்?” என்று மகா முணுமுணுத்தாள். “அவர் ஓர் அவசரத்திலிருந்த மாதிரியிருந்ததுமேலும், நாம் மருத்துவமனையில் இருக்கிறோம். அவருடைய உற்றார் உறவினர்களுக்கோ, ஆருயிர் நண்பனுக்கோ அல்லது தெரிந்தவருக்கோ என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று பதற்றமான முகத்துடன் விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரை நாம்  தொந்தரவு செய்ய வேண்டாம்,” என்று அவர் காதுகளில் விழாது முணுமுணுத்தேன். “மிகவும் நன்றி!” என்று அந்த ஆடவர் சிரித்துவிட்டு அந்த உணவகத்தை விட்டு ஓட்டமும் நடையுமாக புறப்பட்டார்.

எவ்வளவு நேரம் ஆயிற்று!” என்று என் தோழி லதா சிரித்தாள். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ரியாவும், மகாவும் நானும் இப்பொழுது லதாவின் குறிப்பிட்ட மருத்துவமனை அறையில் இருந்தோம்லதாவின் இதயம் சீராக வேலை செய்வதில்லை. முதலில் அவளுக்கு இன்றும் ஒரே வாரம்தான் வாழ இருந்தது. எங்கள் மனம் நொந்து போனது. கண்களிலிருந்து கண்ணீர் மழை பெய்தது. என்னுடைய ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் லதா நான் வெற்றி அடைந்த போது என்னை மனசார பாராட்டினாள். தோல்வி அடைந்தபோது என் மனம் ஆறும் வரை என்னை ஊக்குவிப்பாள். அப்படிப்பட்ட தோழியை இழந்து விடுவேன் என்ற செய்தி கிடைத்தபோது என் வயிற்றில் மண்ணை கொட்டியது போல் இருந்தது. இரட்டையரில் ஒருவரை இழப்பதைபோல் இருந்தது. ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தமது இதயத்தை லதாவிற்கு தானம் செய்கிறார் என்ற தகவல் காட்டில் தீ பத்தி வைத்தது போல எல்லாருடைய காதுகளுக்கும் இந்த செய்தி எட்டியது. இன்று அவள் உடல் உறுப்பு சிகிச்சை பெறும் நாள். ஆனால், அதே நேரத்தில் இந்த சிகிச்சை வெற்றி அடையவும் சதவீதம் 20%. சந்தோஷப் படுவதா அல்லது சோகக் கடலில் தத்தளிப்பதா என்று தெரியாமல் நான் தவித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், மனம் நொந்து போகும் வழியில் பேசாமல் புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் சிரித்த முகத்துடன் உரையாடிக் கொண்டிருந்தோம்.

சிகிச்சை அறையின் வெளியே காத்திருங்கள்,” என்று ஒரு தாதியர் நம் மூவரையும் அறையைவிட்டு வெளியேற சொன்னாள். நமது கடைசி ஆறுதல் நிரம்பிய வார்த்தைகளை பொழிந்து விட்டு அறையை விட்டுப் புறப்பட்டோம். ஓர் ஆடவர் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது என் கண்களில் தென்பட்டது. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலுண்டு போர்களமே..” என்ற மெல்லிய குரலில் பாடுவது எனக்கு கேட்டது. நம்மைக் கண்டவுடன் கண்ணீரைத் துடைத்துவிட்டு அந்த பாடலை நிறுத்தினார். மயான மௌனம் நிலவியது. பேசலாமா அல்லது பேசமுடியாதா என்ற ஒரு சூழ்நிலை நிலவியது. பதற்றம், சோகம் போன்ற உணர்வுகள் அந்த இடத்தில் உள்ள அனைவரது மனதிலும் சுழன்றுகொண்டிருப்பதை கணிக்க முடிந்தது. “அந்தக் குரல் மிகவும் இனிமையாக இருந்தது,” என்று ஒரு சிறு புன்னகையுடன் மௌனத்தை நான் களைத்தேன். “அது என் அம்மாவின் குரல், அவர் எப்பொழுதுமே பாடிக் கொண்டே இருப்பார். இதுதான் அவருடைய பிடித்த பாடல் வரி. புற்றுநோயின் கைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாலும், என்னை ஒருபோதும் பதட்டப்பட வைக்காமல் புன்னகை பூத்தவாறு இருப்பார்”  என்று அந்த ஆடவர் திக்கித்திக்கி பேசினார். அந்த ஆடவர் அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. அவர்தான் நான் உணவகத்தில் பிடித்து வைத்திருந்த இடத்தை தம் வசமாக்கிக் கொண்டார்நான் பதில் அளிப்பதற்குள் ஒரு சிறு புன்னகையுடன், கை கூப்பியவாறுமிகவும் நன்றி, இன்று காலை எனக்கு அந்த இடத்தை விட்டு கொடுத்த காரணத்தால் தான் என் அம்மாவின் கடைசியான சில வார்த்தைகளை கேட்க முடிந்தது. அது என்றுமே நான் மறக்க மாட்டேன்,” என்று மூச்சுவிடாமல் கை கூப்பி நன்றி கூறிக் கொண்டே இருந்தார்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது

என்ற குறளின் அர்த்தம் முழுமையாக எனக்கு புரிந்தது. ஒரு இருக்கையை விட்டு கொடுத்ததால் ஒருவர் தமது அம்மாவுடன் கடைசியாக பேச முடிந்தது. ஒரு சிறு உதவி அவ்வளவு பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐந்து நிமிடம். பத்து நிமிடம். முப்பது நிமிடம் என்று காலச்சக்கரம் மிகவும் மெதுவாக சுழன்றது. சிகிச்சை வெற்றி பெற்றதா? ஏதாவது நடந்து விட்டதா? என்ற பற்பல கேள்விகுறிகள் என்னுடைய எண்ண ஓட்டத்தில் இருந்தது. மூன்று மணி நேரம் கடந்தது. தாதியர்களும் மருத்துவர்களும் சிகிச்சை அறையை விட்டு வெளியேறினர். அவர்கள் முகங்களில் எந்த ஒரு உணர்வும் காட்டவில்லை. என் கைகள் நடுங்கின. ரியா பதட்டத்தில் நகங்களை கடித்துக்கொண்டிருந்தாள். மகா என் முதுகை தழுவி கொண்டிருந்தாள். அந்த ஆடவர் செய்திக்காக ஆவலாக காத்துக் கொண்டிருந்தார். “லதாமாலதி உறுப்புதானம் சிகிச்சை வெற்றி அடைந்தது. லதாவை நாளை சந்திக்கலாம்,” என்று மருத்துவர் கூறிவிட்டு புறப்பட்டார். நாம் மூவரும் உச்சி குளிர்ந்து அங்கும் இங்கும் துள்ளி கொண்டிருந்தோம். ஓரக்கண்ணில் அந்த ஆடவர் ஒரு சோகமான புன்னகையோடு நம்மை பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன்.  “கவலைப்படாதீர்கள் உங்கள் அம்மா இறக்கவில்லை அவருடைய இதயம் லதாவின் உடலில் துடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் என் அம்மா எப்பொழுதுமே கூறுவார் ஒருவரின் வாழ்வு அவர் சாகும் வரை அல்ல அவர் நம் இதயத்தில் வாழும் வரை. உங்களது அம்மா என்றுமே உங்களது மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார். மேலும் அவர் ஓர் உயிரை காப்பாற்றி விட்டு இந்த உலகத்தில்லிருந்து விடை பெற்றுள்ளார். அவர் செய்த பாராட்டுக்குரிய செயலை எண்ணி பெருமை படுங்கள்!” என்று ஊக்கமூட்டும் விதத்தில் பேசினேன்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்நன்றி கொன்ற மகற்கு

என்று என் அம்மா அடிக்கடி கூறுவார். நீங்கள் செய்தது என்றுமே மறக்க மாட்டேன். என் அம்மா உன்னுடைய தோழி மூலம் வாழ்கிறார். அதுவே எனக்குப் போதும் என்று நன்றி மறுபடியும் கூறியவாறு மனத்திருப்தியுடன் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார்.

அன்று வீட்டுக்கு சென்றபோது அன்று நிலவிய எல்லாவற்றையும் என் அம்மாவிடம் எடுத்துரைத்தேன்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை

சான்றோன் எனக்கேட்ட தாய்

என்ற திருவள்ளுவர் குரலுக்கு ஏற்ப என்னை சந்தோஷத்தில் மிதக்க வைத்து விட்டாய்,” என்று என் அம்மா என்னைக் கட்டி அணைத்துக் கொண்டார். அந்த தருணத்தில் என் அம்மாவை நன்கு ஒருமுறைக்கு இருமுறை பார்த்தேன். அன்றைய சம்பவம் என் அம்மாவின் முக்கியத்துவத்தை என்னிடம் காட்டியது. ஒவ்வொரு நிமிடமும் பொன்னானது. பிளவுகள் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளாமல் அவருடன் சந்தோஷமான நேரங்களை செலவிட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. என் அம்மா, தெய்வம் எனக்கு தந்த வரத்திற்கு சமம். இன்று மறப்பதில்லை. நாளை மறக்க போவதும் இல்லை. ஏனென்றால், வாழ்க்கை எப்படி நிகழும் என்று உறுதி இல்லை. இந்த சம்பவம் அது எனக்கு பெரிதும் உணர்த்தியது.

No comments: