Friday, November 5, 2021

ஓர் உணவகத்திற்குச் சென்ற நீ, உன் நண்பர்களுக்காகச் சில இடங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களது வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தாய். அப்போது அவசரமாக வந்த வாடிக்கையாளர் ஒருவர், அவற்றுள் ஒன்றைத் தம் வசமாக்கிக்கொண்டார். அந்தச் சம்பவத்தையும் அதன்பின் நடந்தவற்றையும் பொருத்தமான வர்ணனைகளோடு விளக்கி எழுது

NAGARAJ DHANUSRI – 401 

காரம், புளிப்பு, இனிப்பு என்று அறுசுவை உணவிந் நறுமனம் எனது மூக்கை துளைக்க, பசி வயிற்றைக் கிள்ளியது, யோசனை அனைத்தும் உண்ணப்போகும் உணவில் மட்டுமே இருந்தது - எந்த உணவை வாங்கலாம், அது எவ்வளவு  ருசியாக இருக்கும் என்று கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தேன். எனதருகே என்னைப் போலவே வாயில் எச்சில் ஊறக் காத்துக்கொண்டிருந்த எனது நண்பர்களைப் பார்த்து, நகைத்தேன்.

       வாருங்கள்! என்னால் பசியை அடக்கவே முடியவில்லை!”என்று எங்கள் முன்னருந்த உணவகத்தினுள் நுழைந்தோம். அன்று, எனது தோழி கலாவின் பிறந்தநாள். அதைக் கொண்டாடவே, நான் எனது தோழிகளான மாலா மற்றும் சுமதியோடு கலாவிற்குப் பிடித்த உணவகத்திற்கு அவளை அழைத்து வந்திருந்தோம். கலாவினது முகத்தில் அன்று முழுதும் சிரிப்பு தென்படவேண்டும் என்ற நோக்கத்தோடு இருந்தோம்.

       உணவகத்தினுள் உள்ளே நுழைந்த மறுநொடியே மூவரும் ஒன்றாகஎன்று சுகத்தில் பெருமூச்சு விட்டோம். வகை வகையான உணவு வகைகள் கண்கள் முன் அணிவகுத்து நிற்பதையும் குடும்பம் குடும்பம் குடும்பமாக மேசைகள் நிரம்பி வழிந்ததையும் பார்த்த போதே என்னுள் மகிழ்ச்சி மலர்ந்தது. ஒரு கணத்தைக்கூட தாமதிக்காமல் காலியான மேசைக்காக எனது கண்கள் அலைந்தன. ஓரத்தில் தென்பட்ட காலியான ஒன்றைப் பார்த்து, அதை நோக்கிச் சென்றோம்.

       ஒரு வழியாக சாப்பிட ஆரம்பிக்கலாம் என்று, எங்களுக்குத் தேவையான உணவு வகையைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். “கலா, நீயும் மற்ற இருவரோடு சேர்ந்து சென்று, என்னென்ன உணவு வகைகளை வாங்கப் போகிறீர்கள் என்று தேர்ந்தெடுக்கம் உணவு பட்டியலை நோட்டமிட்டு வருகிறீர்களா? நான் இந்த மேசையில் வேறு எவரும் அமராமல் கவனித்துக்கொண்டிருக்கிறேன்,” என்று கூற, அவர்கள் கிளம்பினர்.

       பேசுவதற்கு ஆளின்றி, பொழுதைக் கழிக்க கையிலிருந்த தொலைப்பேசியை நான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். “இன்னும் எவ்வளவு நேரம் எடுப்பார்கள்,” என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அக்கணத்தில், ஏதோ அவசரத்தில் ஒரு மாது விரைந்து எனது மேசையை நோக்கி வந்தார். அறக்கப் பறக்க, பரபரப்புடன் வந்த அவர், கலாவினது இடத்தில் அமர்ந்தார்.

       நான் அவரிடம் அங்கிருந்து எழுந்து போகச் சொல்லத் தொடங்க, அவரது தோற்றத்தைப் பார்த்துத் தயங்கினேன். தலைமுடி கலைந்து, வியர்வைத் துளிகள் வழிய, அவரது முகத்தில் ஓர்வித உளைச்சல் தென்பட்டது. அவரின் கண்களில் சோர்வும் களைப்பும் தெள்ளத் தெளிவாக இருந்தது.  பார்க்கவே பரிதாபமாக இருந்தது, எனக்கு.

       சரி, ஒரு இடத்தை மட்டும் தானே ஆக்கிரமித்துக்கொண்டார், கலாவிற்கு மற்றோரு இருக்கையைப் பார்த்துக்கொள்ளலாம்,” என்று நினைத்துக்கொண்டு அமைதி காத்தேன். அந்த மாது அவசரத்தில், எதிரே அமர்ந்திருந்த என்னைக்கூட அவர் முழுதாக பார்க்கவில்லை. வந்த வேகத்தில் சென்று, தனக்கு வேண்டிய உணவை வாங்கச் சென்றார்.

       அந்த நேரம் பார்த்து, எனது நண்பர்கள் திரும்பினர். கையில் பட்டியலோடு வந்தவர்கள், கலாவின் இடத்தில் இருந்த அம்மாதுவின் பையைப் பார்க்க, முகங்களில் குழப்பம் தெரிந்தது. என்னைப் பார்த்து, “யாருடைய பை அது? நீ இது கலாவினது இருக்க என்று கூறி மற்றவர்களை இங்கே உட்காரவிடாமல் ஏன் செய்யவில்லை?” என்றனர். நான் அந்த மாதுவின் களைப்பையும் தோற்றத்தையும் பற்றிக் கூற கலாவும், “சரி, பரவாயில்லை. நான் வேறு இருக்கையில் அமர்ந்துகொள்கிறேன்,” என்று ஒத்துக்கொண்டாள்

       அவளது பெருந்தன்மையை நினைத்து பெருமைப்பட்ட நான், அவளைப் பார்த்து புன்னகைத்தேன். அவளுக்கு துணை கொடுக்க நானும் வேறு இருக்கையைத் தேடிச் செல்ல எழுந்த மறுகணம், “டமால்" என்ற பேரொலி எனது செவிகளை எட்டியது.

       உணவகம் முழுவதும் சத்தம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க சுற்றும் முற்றும் கண்டுகொண்டிருந்தனர். நானும் தேடிக்கொண்டிருந்த போது, ஏன் சத்தம் ஒலித்தது என்பதை அறிந்துகொண்டேன்.

       காசாளரின் அருகே, ஒரு பெரும் கூச்சல் நிலவிக்கொண்டிருந்தது. ஒரு மாதுவின் குரல் கீச்சென்று கோபத்தில் எவரையோ ஏசிக்கொண்டிருந்தது. நானும் கலாவும் ஒருவரை ஒருவர் குழப்பத்தோடு பார்க்க, என்ன நடந்தது என்றுப் பார்க்க அருகில் சென்றோம்.

       அதற்குள் அங்கு திரண்ட கூட்டத்தினுள்ளே எட்டிப்பார்த்த போது, கலாவின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த மாது நின்றுக்கொண்டிருந்தார். அவரது வதனம் நீரின்றி வாடிய பூபோல் காட்சியளித்தது. விழியில் நீர் தளும்ப, முகம் சிவது நின்றுகொண்டிருந்தார். அவருக்கு எதிரே, மற்றொரு வயதான மாது ஒருவர் இருந்தார். தனது ஆடை முழுவதும் கரையோடும், நெருப்புக் கணல்போன்ற பார்வையோடும் மற்றொரு மாதுவைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தார்.

       உனக்கு அறிவே இல்லையா? இது எவ்வளவு விலை மதிப்பற்ற ஆடையென்று தெரியுமா? உனது மூடத்தனத்தால் அது முற்றிலும் வீணாகிவிட்டது! உனது கவனக்குறைவால் எனது  பணம் முழுவதும் வீணாகிவிட்டது!” என்று, வார்த்தைகளை ஆயுதமாய் வீசி எறிய, நொடிக்கு நொடி உணவை சிந்திய மாதுவின் கண்களிலிருந்து நீர் கடலென ஊற்றியது.

       அவரின் கைகளும் உதடுகளும் நடுநடுங்க, அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. “என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று மெல்லிய குரலில் கூறியதை மற்ற மாது ஒரு நாழிகைக் கூட செவிமடுக்கவில்லை. மாறாக, நிற்காமல் அவரை கொடிய வார்த்தைகளால் எறிக்க, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, அம்மாது துடித்துக்கொண்டிருந்தார்.

       சுற்றி நின்றிருந்தவர்களில் ஒருவர் கூட அவருக்கு உதவ முன்வரவில்லை. எல்லோரும், ஏதோ நாடகம் பார்ப்பது போல் வைத்த கண் வாங்காமல் அழுதுகொண்டிருந்தவரையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

       உங்களுக்குத் தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன், ஆனால் என்னை தயவசெய்து இப்போது செல்ல அனுமதியுங்கள்...என்னுடைய முக்கியமான ஆராய்ச்சித் தாள் ஒன்றை நான் கூடிய விரைவில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் என்னுடைய நான்கு வருட உழைப்பெல்லாம் வீண்...என்மேல் கருணை காட்டுங்கள்என்று தேம்பித் தேம்பி அழுக, மன்றாடினார்.

       என்னால் அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டு இன்னும் ஒரு நொடி கூட பிணம் போல் நிற்க முடியவில்லை. அந்த மாதுவின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்க கேட்க சினம் என்னை தீயாய் வாட்டியது

       நீங்கள் ஒரு மனிதன் தானே! உங்களது ஆடை எவ்வளவு விலையை கொண்டிருந்தாலும், உங்களது மனத்தில் ஈரமே இல்லையா? கல் நெஞ்சம் கொண்ட நீங்கள் இந்த பாவமான மாதுவின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டால்தான் என்ன?! அவர்தான் பணத்தைக் கட்டிவிடுகிறேன் என்று தானே சொல்கிறாரே?!” என்ற வார்த்தைகள் எனது உதடுகளைத் தாண்டிச் செல்ல, அம்மாதுவின் சினம் என்மேல் திசைத்திருப்பப்பட்டது. மற்ற மாதுவோ, கடவுளைப் பார்ப்பது போன்று என்னைப் பார்த்தார்.

       மூத்த மாதுவின் கன்னங்கள் மேலும் சிவந்தன. “வயதில் மூத்தவர்களிடம் இப்படியா பேசுவது!” என்று கேட்க, நான் அவருடன் சரிக்கு சமம் வாதாடினேன். எனது தரப்பில்தான் ஞாயமுள்ளது என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன், ஆனால் தனித்து நின்று இவரை ஜெய்க்கமுடியாது என்றும் அறிந்திருந்தேன்.

       மற்றொரு குரல் எனதருகே ஒலிக்க, நான் திரும்பிப்பார்த்தேன். ஜடமாக நின்றுகொண்டிருந்த கூட்டம் அனைத்தும் என் பின்னால் நின்றது. இதுவரைக்கும் அமைதி காத்தவர்கள், ஏதோ மந்திரம் செய்தது போல், ஒன்றின்பின் ஒன்றாக தங்களது பணப்பைகளிலிருந்து முடிந்த தொகையை அந்த மாதுவின் முகத்தில் வீசி எறிந்தனர். “இங்கு பார்! உனது கேவலமான ஆடையின் விலையை இது ஈடுகட்டிவிடும். உன்னைப்போல் ஆட்கள் உள்ளதால்தான் அன்பு, கருணை போன்ற வார்த்தைகளுக்கு இப்போது மதிப்பேயில்லை. உனது கேவலமான பணத்தாசைக்கு இது நாங்கள் அளிக்கும் பிச்சை!” என்று கூட்டத்தில் இருந்த முதியவர் கூற, மாதுவின் முகம் பேயறைந்தது போல வெளுத்துக் கிடந்தது. எதையும் கூறாமல் இப்போது அவர் சிலையாய் உரைய, மற்ற மாது எங்களிடம் கண்ணீர் மல்க நன்றி கூற, எனது மனதில் திருப்தி நிலவியது. மீண்டும் மீண்டும் நன்றியை அவர் தெரிவிக்க, நான், “மனிதர்களாக இருந்தால் அடிப்படையான பண்பு கருணை என்பதை எல்லொருக்கும் ஞாபகம் தான் படுத்தினேன். எனக்கேன் நன்றி? அந்தப் பண்பை வெளிக்காட்டியவர்களுக்கே அது சேரும், நீங்கள் உங்களது ஒப்படைப்பில் வெற்றி பெறுவீர்கள் என்று வாழ்த்தம் அவர் புன்னைகைத்தார்.

No comments: