Wednesday, November 24, 2021

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. கேரன் பெனீட்டா 107 - 2021

“டிம்மி! டிம்மி!” என்று காதை பிளக்கும் வண்ணம் அலறிக் கொண்டிருந்தேன். நான் கத்திக்கொண்டே இருந்தது கண்டிப்பாக அடுத்த நாள் என்னை குரல் இல்லாமலேயே ஆக்கிவிடும் என்று என்னை உறுதியாக நினைக்க வைத்தது. அன்று குளிர்காற்று என்னை முத்தமிட்டு சென்றது. எங்கும் பச்சே பசேலென இருந்தது. அங்கும் இங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின. மாலை மங்கி இலேசாக இருள் வானைக் கௌவத் தொடங்கியது. என் நாய்க்குட்டி, டிம்மியுடன், பூங்காவில் நடக்க இது என்ன ஒரு அருமையான நாள் என்று நினைத்திருந்தேன். ஆனால் வழியில் கண்ட நண்பனிடம் ஐந்து நிமிடம் பேசிய நான் அந்நேரத்தில் என் செல்லப்பிராணி தொலைந்து போய் விடும் என்று சிந்தித்தே பார்க்கவில்லை. என்னுடன் நெருக்கமாகப் பழகியிருந்த என் தாத்தா இறப்பதற்கு முன் எனக்கு அளித்த கடைசிப் பரிசு டிம்மிதான். தாத்தா இறந்த பிறகு அதனுடன்தான் என் முழு நேரத்தை செலவழித்தேன். எப்போதும் என் அறுகிலேயே இருக்கும் டிம்மி இப்பொழுது காணாமல் போனது என் வயிற்றில் இடி விழுந்தது போலிருந்தது. “கண்டிப்பாக யாராவது டிம்மியை நான் கவனிக்காதபோது தூக்கியிருப்பார்கள்!” என்று எண்ணிப் பதறினேன். அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த என்னால் சோர்வைத் தாங்க முடியவில்லை. என் முகம் சிவந்திருந்தது. என் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வீழ்ச்சியைப் போல் வழிந்தது. “டிம்மி அடுத்த நிமிடமே என் கைகளில் இருக்க வேண்டும்!” என்று கடவுளிடம் என் மனதில் கெஞ்சினேன். யாரை வினவினாலும் டிம்மியை பார்க்கவில்லை என்று பதிலளித்தனர். அப்பொழுது நிறைய நீர் ஒரு ஆறுபோல் ஓடுவதைச் செவி மடுத்தேன். திரும்பிப் பார்த்த நான், என் அருகே ஒரு பெரிய கால்வாய் இருப்பதை அறிந்தேன். கருப்பு நிறமான ஒரு பை கால்வாயின் நேரில் என் கண்ணுக்கு புலப்பட்டது. உற்றுப் பார்த்த நான் அந்த பையினுள் எதோ நகர்வது போல் இருப்பதை உணர்ந்தேன்! “யாரோ டிம்மியை பையினுள் அடைத்து வைத்து விட்டார்களா ? என்ற கேள்வி என் மனதில் எழும்பியது. என் இதயம் “படக் படக் “ என்று பதற்றத்தில் தாளம் போடுவது என் கைக்கடிகாரத்தின் “டிக் டிக் “ ஒலியை விட சத்தமாக இருப்பதை போல் இருந்தது. என் சிந்தனைகள் பயத்தில் அங்கும் இங்கும் அலை பாய்ந்தது. “டிம்மியை காப்பாற்ற ஒரே வழிதான் உள்ளது,” என்று எண்ணினேன். நான் எதிர்பாராததைச் செய்தேன் ஒரு கணம் கூட செலவழிக்காமல் கால்வாயினுள் இறங்கி நீரினுள் குதித்தேன்! வேகமாக ஓடிக் கொண்டிருந்த நீர் என்னைத் தள்ள கடினமாக உழைத்து நீச்சலடித்தேன். “டிம்மி!” என்று அலறியபடியே என் அருகில் நீருடன் ஓடிக்கொண்டிருந்த கருப்பு பையை நீட்டி பிடித்து கொண்டபின் ஆனந்த கண்ணீர் வடித்தேன். என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது. டிம்மியை பையிலிருந்து மீட்க பையைத் திறந்தேன். கருப்பு பையினுள் ஒரு காலணிதான் இருந்தது என்று அறிந்த எனக்கு யாரோ ‘டமார்!’ என்று தலையில் அடித்ததுப் போலிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. டிம்மி என்னிடம் இல்லை! கால்வாயிலிருந்து வெளியே வர முயன்ற நான் அப்பொழுதுதான் என் முட்டாள்தனத்தை புரிந்துகொண்டேன். நான் நீரின் வேகத்தைப் பற்றி யோசிக்காமல் கால்வாயினுள் குதித்திருந்தேன். நீர் என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. அச்சம் என் மனதை கௌவியது. எப்படி நீரிலிருந்து வெளியே வருவது என்று தெரியவில்லை. பயத்தால் என் இரதம் பனிக்கட்டியைப்போல் உறைந்தது. “காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!” என்று நான் காது பிள்ளைக்கும் வண்ணம் அலறினேன். ஏன் நான் சிந்திக்காமல் கால்வாயினுள் இறங்கினேன் என்று வருந்தினேன். அப்பொழுது, “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு” என்ற திருக்குறள் என் ஞாபகத்திற்கு வந்தது. நல்ல வேலை சில பேர் கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்தி மீட்புக் குழுவை அழைத்தனர். அவர்கள் உடனே என்னைக் காப்பாற்றினார்கள். நான் சிந்தித்து செயல்படாததற்கு என்னைக் கண்டித்தார்கள். என்னை அவர்கள் காப்பாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கவே பயமாக இருந்தது. டிம்மியை இன்னும் காணவில்லை என்ற வருத்தமும் நான் செய்த முட்டால் செயலினாள் எனக்கு என் மீது ஏற்பட்ட கோபமும் சேர்த்து கண்ணீராக வெளிவந்தது. அப்பொழுது என் கையை யாரோ தொடுவதுப் போல் இருக்க நான் திரும்பிப் பார்த்தேன். என்னால் என் கண்களை நம்ப முடியவில்லை. ஓர் ஆடவர் டிம்மியை தன் கையில் ஏந்தியவாறு நின்றுகொண்டிருந்தார்! “நீ முன்பு என்னிடம் ஒன நாய்க்குட்டியைப் பார்த்தாயா என்று வினவியிருந்தாய். அதன் பிறகு அதை ஒரு புதரினருகில் பட்டாம்பூச்சியுடன் விளையாடுவதைக் கண்டேன்,” என்று கூறினார். வானிலிருந்து வந்த தெய்வம் போல் அவர் எனக்குத் தோற்றமளித்தார். நான் என் நன்றியைப் பலமுறை தெரிவித்த பிறகு டிம்மியை ஆரத்தழுவிக்கொண்டேன். அந்த சம்பவம் என் மனதில் பசுமரத்தாணியைப்போல் பதிந்தது. அன்றிலிருந்து நான் எப்பொழுதும் ஒரு செயலைச் செய்வதற்கு முன் இரண்டு முறையாவது சிந்தித்து பார்க்க முடிவு செய்தேன். மேலும் டிம்மியை இன்னும் கவனத்துடன் பார்த்துக்கொள்ள தொடங்கினேன். ~முற்றம்~

உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. பெயர்: மகேஷ் காயத்ரி வகுப்பு: 108 (2021)

பொறாமை. பொறாமை என்பது நம் அனைவரிடத்திலும் உள்ள ஓர் உணர்வு தான். ஆனால், அதை நாம் மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதும் வெளிக்காட்டாததும் நம் கையில் உள்ளது. மற்றவர்கள் நம்மைவிட எதிலாவது சிறந்து விளங்கினாலோ நம்மை வென்றுவிட்டாலோ நம்முள் சிலர், “அடாடா! அவர்கள் நம்மைவிட இதில் நன்றாகச் செயல்படுகின்றனரே!” என்று நினைத்துச் சற்று பொறாமையடைவோம். இதற்குப்பதிலாக, வேறு சிலர் அவர்களது வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல் நினைத்து மகிழ்ச்சியடைந்து அவர்களை வாழ்த்துவார்கள். அவர்களுள் பொறாமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். அத்துடன், நட்பினுள் பொறாமை ஏற்பட்டால் நிறைய சண்டை தான் ஏற்படும். சற்றுமுன் நகமும் சதையும் போல இருந்த நண்பர்கள் பொறாமையினால் நாயும் பூனையும்போல் சண்டைபோட்டு நிலைமை மோசமானால் எதிரிகளாகக் கூட ஆகிவிடுவார்கள். இந்தச் சதிக்கெல்லாம் காரணம் பொறாமையே! “ட்ரிங்! ட்ரிங்!” பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் வகுப்பைவிட்டு உணவகத்தை நோக்கி சிட்டாய்ப் பறந்தனர். புன்னகைத் தவழ்ந்த முகத்துடன் எனது இணைபிரியாத் தோழி, மாலதி, என்னிடம், “மாயா! நீ வருகிறாயா?” என்று கேட்டாள். நானும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்த முகத்துடன் என் தலையை ஆட்டினேன். என் கையடக்கத் தொலைப்பேசியையும் பணப்பையையும் எடுத்துக்கொண்டு மாலதியுடன் உணவகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். மாலதியும் நானும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புவும் நாரும் போல நெருங்கிய நண்பர்கள் ஆவோம்! நாங்கள் இருவரும் பணக்கார குடும்பங்களிலிருந்தே வந்தோம். அவளும் நானும் எப்போதுமே சிறந்த மதிப்பெண்கள் எடுப்போம். சொல்லப்போனால், எங்கள் இருவரையும் இரட்டை சகோதரிகள் என்றே கூறலாம். ஆனால், மாலதியோ மிகவும் அழகானவள். அவளது கருப்பு நிற தலைமுடி, பழுப்பு நிற கண்கள் எல்லாம் அவளை ஒரு ராணியைப்போல் அலங்காரப்படுத்தின. மற்றவர்கள் என்னையும் ஓர் அழகானவள் என்று தான் கருதுகின்றனர். இருந்தாலும் மாலதியின் அழகே வேற விதம்! இன்னொன்று! அவளுக்கு எப்பொழுதுமே மேடை மீது நின்றுபேசும்போது அவள் மனதினுள் பீதி குடிக்கொள்ளும். இதை அவள் உணர்ந்தாலும் அவளுக்கு அனைவர் முன் நின்று பேசுவதற்கு ஆசையுண்டு. அந்த அச்சத்தை மட்டும் மாலதியால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனக்கோ மேடையில் பேசுவது என்பது இயல்பானது என்றே கூறலாம். இதையறிந்த அசிரியர்கள் பலர் என்னை போட்டிகளில் கலந்துகொள்ள வைத்திருகின்றனர். அவை அனைத்தும் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தன. மேலும், அவற்றில் கலந்துகொள்வது எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கும். “மாயா, நீ நேற்று உன் குடும்பத்துடன் எங்கேயோ சென்றதாக கூறினாயே. எங்கே?” என்று வினவினாள், மாலதி. நானும் பதிலளிக்க வார இறுதியில் நடந்த நகைச்சுவையான சில விஷயங்களைப் பற்றி பாட்டிகள் போல் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல நாங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாரே வயிறு குலுங்க சிரித்தோம். சிரிப்பு மருந்தைக் குடிப்பதுபோல் இருந்தது! எங்களது வகுப்பு மாணவர்கள் சிலர் எங்களைச் சுலித்த முகத்துடன் பார்த்து, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க நான் “‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நானும் மாலதியும் நல்ல மாணவர்களாக ஆசிரியர் கற்றுக்கொடுத்ததைச் செய்துகொண்டிருக்கிறோம்!” என்றேன். அடுத்த கணமே, நானும் மாலதியும் கண்ணீர் வரும்வரை சிரிக்காரம்பித்தோம் . இந்தப் பதிலைக் கேட்ட எங்கள் வகுப்பு மாணவர்கள் வெறுப்புடனும் கோவைப்பழம்போல் சிவந்த முகத்துடனும் வேறெங்கேயோ சென்றனர். எங்கள் ஆங்கில அசிரியர் எங்களிடம் வந்தபின்னே நாங்கள் பிசாசுகள்போல சிரிப்பதை நிறுத்தினோம். “மாயா, மாலதி! நீங்கள் சிரிப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. உங்களை தொந்தரவு செய்வதற்கு என் மன்னிப்பு. ஆனால், மாயா நான் உன்னிடம் சற்று பேசவேண்டும்!” என்றார், ஆசிரியர். இதைக் கேட்டவுடன் என்னுடைய கண்கள் அகல விரிந்தன. என் இதயம் ‘படக், படக்’ என்று தாளம்போட நான் என்ன தவறுசெய்தேன் என யோசித்தவாரே ஆசிரியரை அச்சத்துடன் பின்தொடர்ந்தேன். “மாயா, நீ ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவி. மேலும், நீ பல பேச்சு போட்டிகளில் பங்கெடுத்து வென்றிருக்கின்றாய். அதனால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்வாயா? நீ நம் பள்ளிக்குப் பெருமை கொண்டு வருவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று என் ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்பொழுது உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் என் ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி என்னுடைய தன்னிப்பட்ட தகவல்களை அளித்தேன். எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அவ்வளவு குஷி! நான் மானைப்போல் துள்ளி குதித்தவாறே மீண்டும் மாலதியிடம் சென்றேன். அவளது முகத்தில் ஈயாடவில்லை. “இன்னொரு போட்டியா?” என்று அவள் முறைத்தவாறு கேட்டாள். நானும், “ஆம்! நீ சந்தோஷமாகத் தானே இருக்கிறாய்?” என்று வினவினேன். அவள் கண்கள் கோபக் கனல்களைச் சுட்டெரித்ததுப்போல் இருந்தது. அவள் என்னைப்ல பொரிந்து தள்ளினாள். “ஏ, மாயா? நான் எதற்கு நீ போட்டியில் கலந்துகொண்டால் மகிழ்ச்சியடையனும்? நான் எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை!” என்று காதைப் பிளக்கும் வண்ணம் கத்தினாள். நான் வியப்பில் வாயைப் பிளந்தவாறு திகைத்து நின்றேன். “இனி, நாம் நண்பர்களே இல்லை!” என்று கூறியப்படி அவள் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். மாலதி, என் நெருங்கிய தோழி, என் சகோதரிபோல் இருந்தவள். என் பிரிய தோழி, என்னைவிட்டு விலகிச்சென்றுவிட்டாள். துக்கம் என் தொண்டையை அடைத்தது. முத்துக்கள் போல் கண்ணீர்த் துளிகள் என் முகத்திலிருந்து வழிந்தோடின. நான் அவற்றைத் துடைத்துவிட்டு வகுப்புக்குச் சென்று மாலதி ஓர் உண்மையான தோழியில்லை என உணர்ந்தேன். உண்மையான நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள், உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவார்கள் முக்கியமாக அவர்களுள் பொறாமை இருந்தால் வெளியே காட்டி நட்பை முறிக்க மாட்டார்கள்! மெதுவாக, என் துக்கம் சினமாக மாறியது. நான் மாலதியைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிட்டு என் படிப்பில் கவனம்செலுத்தினேன். அவளைப் பற்றி நினைத்து படிப்பில் பின்தங்கி விடக்கூடாது என்பதே என் ஒரே எண்ணம். அந்தப் பேச்சுப் போட்டியில் நான் மீண்டும் முதல் பரிசை வென்றேன். இந்த நிகழ்வுகளிலிந்து நான் கற்றுக்கொண்டது, பிறர் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதே. மாலதி பொறாமையாக இருந்திருந்தாலும் அவள் அதைக் காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருந்திருப்போம். ‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ என்று திருவள்ளுவர் போதித்ததற்கேறப பொறாமைக் கொள்வதை நாம் கட்டுப்படுத்திக்கொண்டும் சினம், பேராசை மற்றும் தீங்கு விளைவிப்பது ஆகிய மற்ற மூன்றையும் தவிர்த்துக் கட்டுப்படுவதே சிறந்ததாகும். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதற்கேற்பவும் பொறாமை, சினம் போன்றவையில்லாத நட்பே நல்ல நெருக்கமான நட்பாகும். மாலதியுடன் எனக்கு நடந்தது ஒரு சிறபற்ற அனுபவமாக இருந்தாலும் நான் பலவற்றை உணர்ந்துகொண்டேன். இதுதான் என் பெற்றோர் கூறிய, ‘அனுபவம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பதற்கு அர்த்தம் போல!

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. - JANANI BALAMURUGAN 104- 2021

“ஜனனி! உன் அறையைச் சுத்தப்படுத்து! தீபவாளி வருகிறது!" என்று அம்மா சமையலறையிலிருந்து கூகுரலிட்டார். "சரி அம்மா!" என்று எரிச்சலுடன் கூறிவிட்டு என் அறையை சுத்தப்படுத்தத் தொடங்கினேன். தொடக்கநிலையிலிருந்து வைத்திருந்த புகைப்படங்கள், கடிதங்கள் முதலியவற்றை கண்டேன். அந்தக் கோப்பை எடுத்தபோது, அதிலிருந்து ஒரு புகைப்படம் விழுந்தது. அப்புகைப்படம் கசப்பான நினைவுகளை என் கண்முன் நிறுத்தியது. அப்படத்தில் நானும் மாலாவும் சிரித்துக்கொண்டிருந்தோம். தொடக்கப்பள்ளியின் இறுதி நாள். எங்கள் மலர்ந்த முகங்களைக் கண்டு எனது கண்ணிலிருந்து ஒரு கண்ணீர் விழுந்தது. என் எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன… நானும் மாலாவும் நகமும் சதையும் போல இருந்தோம். என் சகோதரியாக அவளை நான் கருதினேன். ஆறு வருடங்களாக நெருங்கிய தோழிகளாக இருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் இடைவேளையின்போது பள்ளி உணவகத்தில் அமர்ந்து கல கலவென்று சிரித்தவாறு நேர்த்தை செலவழித்தோம். தொடக்கப்பள்ளி முடிந்ததும் நாங்கள் பிரிந்தோம். நட்பைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்ள நினைத்தோம். எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் பொறாமை அவளை அதன் கட்டுக்குள் இழுத்தது. அதன்பிறகு எங்களின் நட்பு … தொடக்கப்பள்ளி இருதியாண்டு தேர்வில் நான் சிறப்பாக செய்தேன். எனது மதிப்பெண்களைக் கண்டு நான் ஆனந்தக் கண்ணீர் விட்டேன். ஆனால் மாலாவோ, அவளவு நன்றாகச் செய்யவில்லை. என் மகிழ்ச்சியை நான் அடக்கிக்கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னேன். இருப்பினும் அவள் அன்று பள்ளியைவிட்டு அழுகையுடன் சென்றாள். புது உயர்நிலைப்பள்ளியில் நான் வகுப்புத் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தேன். மாலாவும் தனது பள்ளியில் வகுப்புத் தலைவியாக இருக்க ஆசைப்பட்டாள். ஆனால் அவள் நியமிக்கப்படவில்லை. நான் எனக்குப் பிடித்த இணைப்பாட வகுப்பில் சேர்ந்தேன். மாலா அவள்ளது பள்ளிப் பாடல் குழுவை சேர விழைந்தாள். ஆனால் மறுபடியும் தோல்வியடைந்தாள். நான் வகுப்பினரிடம் உரையாடி சீக்கிரம் நண்பர்களைக் கண்டறிந்தேன். ஆனால் மாலா பள்ளியில் தனிமையில் வாடினாள். இருப்பினும் அவளுக்கு ஆதரவாக இருந்தேன். குறுஞ்செய்தி அனுப்பி, தொலைபேசியில் உரையாடி, அவளுக்கு உற்சாகம் அளித்தேன். என்னைச் சந்தித்தப்போதெல்லாம், இன்முகத்துடன் பேசினாள். சிறுவயதில் இருந்த மாலா மாறாததுபோல் இருந்தது. ஆனால் அவளுள்ளிருந்த கோபமும் பொறாமையும் என்னிடம் அவள் காட்டவில்லை. சூரியன் தன் செங்கதிர்களால் பூமியைச் சுட்டெரித்தான். நான் சனிக்கிழமை அதிகாலையில் எழுந்து என் நீச்சல் போட்டிக்குத் தயாரானேன். பள்ளியை நான் பிரதிநிதித்து பங்கேற்கும் முதல் போட்டி அது. பல நாட்களாக நான் அதற்கு அல்லும் பகலும் தயார் செய்துகொண்டு வந்திருந்தேன். அங்குள்ள அதிகாரி, "கோ!" என்று கூறியவுடன், நான் அசூர வேகத்தில் நீந்தினேன். என்னை ஒருமுகப்படுத்தி கவனத்தை நீந்துவதில் செலுத்தினேன். வெற்றி கோட்டை தாண்டினேன். பார்வையாளர்கள் கரவொலி எழுப்பினர். முதல் பரிசை வென்றுவிட்டேன்! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து பரிசைப் பெற்றேன். வீட்டிற்குச் சென்றதும் என் இணையத் தளத்தில் என் வெற்றியைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். காலம் உருண்டோடியது. மறுநாள், நான் என் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த புகைப்படத்தைப் பார்த்தேன். நிறைய நண்பர்கள் எனக்கு ஊக்கமளித்தனர். ஆனால் ஒரு குறிப்பு என் முகத்தை வாட வைத்தது. "ஜனனி மிகவும் கர்வம் கொண்டவள்! அவள் எப்பொழுதும் என்னைப்பற்றி கேவலமாக பேசுவாள்!" என்றது ஒரு குறிப்பு. அதை யார் எழுதியிருந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அது உண்மையன்று! முன்பு இணையப்பக்கத்தில் போட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். வெவ்வேறு மக்கள் என்னைப்பற்றி அவமதிக்கும் குறிப்புகளை எழுதியிருந்தார்கள். என் மனம் சுக்குநூறாக உடைந்தது. எனது முகம், உடம்பு, நண்பர்கள், குணம் அனைத்தையும் பற்றி புண்படுத்தும் குறிப்புகள் இருந்தன. என் கண்களிலிருந்து கண்ணீர் அருவிநீர் போல் வழிந்தோடியது. எனது உயர்நிலைப்பள்ளி நண்பர்கள் அக்குறிப்புகளை நம்பவில்லை. ஆனால் திடீரென்று என் தொடக்கப்பள்ளி தோழர்கள் என்னைவிட்டு விலகினார்கள். மாலாவிடம் இதைப்பற்றிக் கேட்டப்போது, அவள் தனக்கு ஒன்றும் தெரியாததுபோல் இருந்தாள். நாட்கள் போகப் போக, என் தொடக்கப்பள்ளி நண்பர்கள் என்னிடம் பேசவில்லை. நான் சோகத்தில் வாடினேன். ஆனால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாட்கள் உருண்டோடின. ஒரு வாரம் கழித்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நெடுங்கால தோழி கவிதா ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள். மாலா என்னைப்பற்றி தவறாகப் பேசியாதாகக் கூறினாள். முதலில் நான் அதை நம்பவில்லை. என் நெருங்கிய தோழி ஏன் அவ்வாறு செய்வாள்? ஆனால் கவிதா மாலா என்னைப்பற்றி அவமதிக்கும் வகையில் பேசி, பொய்த் தகவல்களை பரப்பும் குறுஞ்செய்திகளைப் புகைப்படங்கள் எடுத்து எனக்கு அனுப்பினாள். அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன். எனது கவலைகளுக்குக் காரணம் மாலா தான். அந்தச் செய்தி என் மனதை உடைத்தது. தேம்பித் தேம்பி அழுதேன். அழுதும் மனம் ஆறுதல் அடையவில்லை. அன்று உலகமே இருண்டது போல் இருந்தது. இவ்வளவு நாட்களாக அவளுக்கு உதவி, தோழியாக இருந்த என்னை அவள் கைவிட்டுவிட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு குறிப்பும் என் மனதைக் குத்தும் கத்திப்போல் இருந்தது. துரோகத்தின் வலியை நான் அன்றுதான் முதன்முறையாக உணர்ந்தேன். "ஏன் மாலா இவ்வாறு செய்தாள்? நான் என்ன தவறு செய்தேன்?" என்று மீண்டும் மீண்டும் எண்ணியவாறு கண்ணீர்விட்டு உறங்கினேன். மறுநாள் மாலாவிடம் அதைப்பற்றி கேட்க ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பதில் வரவில்லை. ஒரு வாரம் கடந்தது. பதில் வரவில்லை, ஆனால் எனது வலி அங்கேயே இருந்தது. ஒரு மாதம் கடந்தும் பதில் வரவில்லை. அதன்பிறகு நான் அவளிடமிருந்து விலக முடிவெடுத்தேன். என் இணையத்தலங்களிலிருந்து அவளை நீக்கினேன். என் உயர்நிலைப்பள்ளி நண்பர்களுடன் நெருக்கமானேன். என் வாழ்க்கையை மீண்டும் இன்பமாக வாழ முயற்சித்தேன். என் தொடக்கப்பள்ளி நண்பர்களிடம் பேசி, சிக்கலை எடுத்துரைத்தேன். அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து, மன்னிப்புக்கூறி, எனக்கு ஆதரவு அளித்தார்கள். என் வாழ்க்கை மீண்டும் மகிழ்ச்சியாக இருந்தது. "ஜனனி! சாப்பிடவா!" என்று என் அம்மாவின் குரல் என்னை நிகழ்காலத்திற்கு இழுத்துவந்தது. மணி எட்டு. சாப்பிடும்போது மாலாவைப் பற்றி யோசித்தேன். அப்பொழுது அன்று ஆசிரியர் கூறிய ஒரு பழமொழி என் நினைவுக்கு வந்தது. "போகவிட்டு புறம் சொல்லி திரியவேண்டாம்" என்ற பழமொழிப்படி மாலா நடந்திருந்தால், அவளும் நானும் இன்றும் தோழிகளாக இருந்திருப்போம். ஆனால் அவளது பொறாமை அவளைத் தவறான பாதையில் அழைத்துச் சென்றது. இருப்பினும், நான் அவளை ஏன் வெறுக்கவேண்டும்? தோழிகளில்லை என்றாலும் நாங்கள் எதிரிகளாக இருப்பது சரியல்ல. நான் என் கைத்தொலைபேசியை எடுத்தேன். அவளது எண்ணை ஒரு நண்பரிடமிருந்து கேட்டறிந்து மாலாவிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். "எப்படி இருக்கிறாய், மாலா?" அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன்.

உன் நண்பர் எப்போதும் எதிலும் பிடிவாதமாக நடந்துகொள்வார். ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அது தவறென்பதை அவருக்கு உணர்த்தி அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுபற்றி விளக்கி எழுதுக. - SAMIKSHA GIRISH 105 -2021

“திங்கட்கிழமை வகுப்பு முடிவதற்குள் எல்லா கட்டுரைகளும் என் மேசைமீது இருக்கவேண்டும், ” என்று ஆசிரியர் கூற என் முகம் வாடியது. 'மறுபடியும் கட்டுறையா?' என்று நான் நினைத்துக்கொண்டே தலைப்பைப் படித்தேன். 'பிடிவாதம்' என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் என் எண்ணங்கள் கிளர்ந்தன. பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் என் நினைவுக்கு வந்தது. நான் வகுப்பைவிட்டு முன்நோக்கி நடக்க, என் எண்ணங்கள் பின்நோக்கி சென்றன… 'மாறன்! அந்தக் கைத்தொலைப்பேசியைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக இருக்கிறது! எனக்கும் ஒன்று வேண்டும்,' என்று என் தோழன், கவின் கூறினான். அன்று வெள்ளிக்கிழமை கதிரவன் உச்சி வானத்திற்கு வந்துவிட்ட நடுப்பகல் நேரம். அப்போது மதிய உணவு உண்பதற்கான இடைவேளை நரம் என்பதால், பள்ளி உணவகத்தில் கூட்டம் அலைமோதியது. எங்கும் ஒரே ஆரவாரமும் ஆர்ப்பாட்டமுமாய் இருந்தது. சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு கடைகளிலிருந்து உணவு வாங்க வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற சில மாணவர்கள் எங்கு நடந்துகொண்டிருப்பதைக்கூட கவனிக்காமல் கைத்தொலைபேசியில் மூழ்கியிருந்தார்கள். சிலர் மேசைகளில் உட்கார்ந்து மும்முரமாக தங்கள் வீட்டுப்பாடத்தைச் செய்துகொண்டிருந்தார்கள். மற்ற சிலர் புன்னகைத் தவழும் முகங்களுடன் தங்கள் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். நான் கவினுடன் மேசையில் உட்கார்ந்து, என் உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் அண்மையில்தானே நீ புதிய கைத்தொலைபெசியை வாங்கினாய்? அது இன்னும் சரியாகத்தான் வேலை செய்கிறது அல்லவா? பிறகு ஏன் உனக்கு புதிய கைத்தொலைபேசி தேவை?' என்று நான் வினவினேன். புதிய பொருள்களைப் பயன்படுத்தினால்தான் மற்றவர்கள் என்னிடம் பேசி பழகுவார்கள், என்று அவன் கூறிவிட்டு, நான் பதிலளிக்கும் முன் 'போகவேண்டும்' என்று சோல்லி சென்றுவிட்டான். கவின் மிகவும் பிடிவாதமான ஒருவன் ஏன்று நான் அறிந்திருந்தேன். அவனுக்கு ஏதாவது வேண்டுமானால், அது தன் கையில் கிட்டும்வரை அவன் விடமாட்டான் என்று எனக்குத் தெரியும். உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. என்று திருவள்ளுவர் கூறியதற்கேற்ப ஒரு நல்ல நண்பனாக இருந்து அவனிடம் பிடிவாதமாக இருப்பது தவறு என்று எடுத்துசொல்ல நான் பலமுறை முயற்சி செய்திருந்தேன். ஆனால், ஒவ்வோரு முறையும், என்னுடைய வார்ததைகள் செவிடனின் காதில் ஊதிய சங்குபோல் வீணாகி போயின. மறுவாரம், நான் பள்ளிக்கு வரும்போது, கவின் எல்லோரிடமும் தன் புதிய கைத்தொலைபேசியை காட்டுவதை நான் கண்டேன். அவனுடைய பிடிவாத குணத்தைத் தாங்க முடியாமல் மறுபடியும் அவன் விரும்பியதை வாங்கித் தந்த அவனுடைய பெற்றொரை எண்ணி வருந்தினேன். அவர்கள் இப்படி செய்துகொண்டே இருந்தால் பிற்காலத்தில் கவின் என்ன ஆவான்? என் மனத்தில் பல எண்ண அலைகள் தோன்றின. அப்பொது, என்னைக் கண்ட கவினின் முகம் சூரியனைக் கண்ட தாமரையைப் பொல மலர்ந்தது. 'பார்! எனக்கு கைத்தொலைபேசி கிடைத்துவிட்டது! நான் இப்போது மட்டில்லா ஆனந்தத்தை அடைந்துவிட்டேன்!' ஏன்று உற்சாகமாக கூறினான். ஆனால், நான் சிரிக்கவில்லை. அவனுடைய செயல் தவறு என்று அறிந்ததால், 'கவின்...' என்று சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், நான் பேசி முடிப்பதற்குள் அவன் இன்னொரு தோழனிடம் சென்று தன் புதிய கைத்தொலைபேசியை காட்டத் தொடங்கினான். அந்த இரவு, நான் என் மெத்தை மீது படுத்துக்கொண்டு பள்ளியில் நடந்ததைப் பற்றி நினைத்துக்கொஙண்டிருந்தேன். அவனை எப்படி திருத்துவது? என்ற கேள்வி மனத்தில் தோன்றியது. அப்போது, 'கவின்' என்று யாரோ கூறுவது என் செவிகளுக்கு எட்டியது. நான் சத்தம் வந்த திசையை நோக்கி நடக்க, அவ்வார்த்தை கூறியது என் அம்மாதான் என்று உணர்ந்தேன். 'இன்று காலை கவினின் அம்மாவுடன் நான் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டேன். அவர் கண் கலங்கி விட்டார், தெரியுமா? அவர் அண்மையில் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் இப்போது வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறார். ஆனால் எதுவும் கிடைப்பதில்லை என்று சொன்னார். தன் கணவரின் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றும், அவர்கள் இருவருக்கும் மிகவும் மன உளைச்சளாக இருப்பதாகவும் கூறினார். அது மட்டுமில்லாமல், கவினின் பிடிவாத குணம் உயர்ந்திருக்கிறது என்றும் அவர் சொன்னார். சென்ற வாரம் அவன் ஒரு புதிய கைத்தொலைபேசியை வாங்கித் தரும்படி அடம்பிடித்தான். இப்போது, அவன் விலை உயர்வான ஒரு பையை வாங்கித் தரும்படி கூறுகிறான் என்று அவர் விளக்கினார். விரும்புவது எல்லாவற்றையும் வாங்கித்தர முடியாது என்று அவர்கள் சொல்லும்போது, அவன் கேட்காமல் பிடிவாதம் செய்கிறான் என்று அவர் கூறினார். தங்களிடம் பணமில்லை என்பதை எப்படி எடுத்துறைப்பது என்று அவர் வருந்துகிறார், ' என்று அம்மா அப்பாவிடம் கூறுவதை நான் செவிமடுத்தேன். அப்போது, எனக்கு எண்ணம் மின்னலெனப் பளிச்சிட்டது. கவினைத் திருந்தவைக்க என்ன செய்யவேண்டும் என்று நான் புரிந்துகொண்டேன். மறுநாள், நான் வகுப்புக்குள் நுழைந்தவுடன் கவின் என் அருகில் வந்து, அவனுடைய பெற்றோர் புதிய பையை வஅங்க முடியாது என்று சொன்னதைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தான். அப்போத் நான் அவனைத் தடுத்து நிறுத்தினேன். 'கவின், தான் சோல்வதைக் கவனமாகக் கேள்,' என்று ஆரம்பித்து என் அம்மா கூறிய செய்திகளை அவனிடம் சொன்னேன். நடந்ததைக் கேட்ட அவன் வாயைப் பிளந்து சிலையாய் இருந்தான். முத்துக்கள் போல கண்ணீர் சொட்டுகள் அவன் கண்களிலிருந்து வடிந்தன. அவனுடைய உலகமே இருண்டது போல இருந்தது. எ...என் அம்மா வேலையிலிருந்து நீ...நீக்க...நீக்கப்பட்ட செய்தி எனக்குத் தெரியவில்லை! இவ்வளவு நாளாக என் பிடிவாத குணத்தால் அவரும் என் தந்தையும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். நான் நிலைமையைப் புரிந்துக்கொள்ளாமல் இப்படி ஓரு முறையில் நடந்துகொண்டேன்!' என்று அவன் அணலில் விழுந்த புழுபோல துடித்தான். 'நீ நடந்துகொண்ட முறை தவறு என்று புரிந்துகொண்டாய் அல்லவா? இன்று வீட்டிற்கு சென்றவுடன் பெற்றோரிடம் மன்னிப்புக்கேள். மீண்டும் இதுபோல பிடிவாதமாக நடந்துகொள்ளாமல் தேவையுள்ளதை மட்டும் கேளு, சரியா?' என்று நான் அறிவுரை கூறினேன். அவன் அவமானத்தில் தலை குணிந்து நின்றான். அந்த நாளிலிருந்து, அவன் பிடிவாதமாக நடந்துகொள்வதை நிறுத்தினான். அந்தச் சம்பவம் உண்மையாகவே அவனுக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. இதைப் பற்றியே கட்டுரை எழுதலாம் என்று முடிவு செய்து, நான் வீட்டிற்குச் சென்றேன்.

காணாமல் போன உன் செல்லப்பிராணி உனக்கு மீண்டும் கிடைத்துவிட்டது. இந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக . SHAMITA BALAKRISHNAN 109 -2021

“மணி! இங்கே வா!” என்று நான் என்னுடைய செல்லபிராணியான நாயை அன்புடன் அழைத்தேன். நான் என்னுடைய நாயைக் கண்ணை இமைக் காப்பதுப்போல் காத்துவந்தேன். ஆனால் சில நாட்களுக்கு முன்பு தான் நான் என்னுடைய நாயைப் பாதுகாப்பதின் முக்கியத்துவத்தை அறிந்தேன். அச்சம்பவம் எனக்கு ஒரு நல்ல பாடத்தைப் புகட்டியது. மணியைக் கண்டவுடன் சில நாட்களுக்கு முன் நடந்த அச்சம்பவம் என் நினைவிற்கு வந்தது. “ராதா! எவ்வளவு நேரம் தான் கைத்தொலைபேசியையே பார்த்துக்கொண்டிருப்பாய்? இப்படி செய்தால் சீக்கிரமாகவே நீ முக்குக்கண்ணாடி போட அவசியமாகும். மணியைச் சற்று நேரம் பூங்காவிற்கு அழைத்துச் செல்!” என்று எனது தாயார் கத்தினார்.இன்னும் வீட்டிலே இருந்தால் அம்மா திட்டுவார். நாம் கீழே சென்றால்தான் அவர் நிறுத்துவார்,” என்று நான் முகம் சுளித்துக்கொண்டே கோபமாக மணியை அழைத்து பூங்காவிற்குச் சென்றேன். மாலை மங்கி இலேசான இருள் கௌவத் தொடங்கியது. காற்றில் மரங்கள் தலை அசைத்தன. அனைவரும் கலகலப்பாக இருந்தனர். அனால் என் முகம் மட்டும் வாடியிருந்தது. மணியோ புத்துணர்ச்சியுடன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு மணி என்னையும் பூங்காவில் ஓட வைத்தது. விருப்பமில்லாத நான் வேறு வழியில்லாமல் மணியுடன் பூங்கா முழுவதும் ஓடினேன். ஆனால் என் கோபமோ அதிகரித்தது. “நான் எதற்கு மணியைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்? நான் யாரையும் தொந்தரவு செய்யாமல் வீட்டில் தானே இருந்தேன்?” என்று கோவைப்பழம் போல் சிவந்துகொண்டவாறே நினைத்தேன். அனால் மணி என் கோபத்தைச் சற்றும் பொருட்படுத்தாமல் விளையாட்டுத் தனமாகவே இருந்தது. அப்போது மின்னலென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் ஓர் ஓரமாகச் சென்று என் கைத்தொலைபேசியைப் பார்த்துக்கொண்டே மணியையும் கவனிக்கலாம். இதே இடத்தில் தானே மணி விளையாடும்? ஆனால் நான் அவ்வாறு நினைத்தது எவ்வளவு தவறு என்பது எனக்குப் பிறகு தான் புரிந்தது. நான் உடனே இந்த யோசனையின்படி நடந்து கொண்டேன். ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டே, ஒரு கண் கைத்தொலைபேசியையும், ஒரு கண் மணியையும் பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் நேரம் செல்ல கண்கள் இரண்டும் கைத்தொலைபேசியைப் பார்த்து மணியைக் கவனிக்காமல் இருந்தேன். எவ்வளவு நிமிடங்கள் சென்றதோ தெரியவில்லை. ஆனால் நான் கடைசியாக ஓர் ஒளிக்காட்சியைப் பார்த்து வீடு திரும்ப எண்ணினேன். “மணி! வா, போகலாம்!” என்று மணியைக் கூப்பிட்டேன். ஆனால் பதிலுக்கு மணி குரைக்கவில்லை. திரம்பிப் பார்த்த நான் மணியைப் பார்க்கவில்லை. அப்போதுதான் மணி காணவில்லை என்பதை உணர்ந்தேன். ஒரு கணம் என் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆனால் மணி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்து அங்கும் இங்கும் அலைந்தேன். “மணி! மணி!” என்று தொண்டைக்கிழிய கத்தினேன். என் மனத்தில் பதற்றம் அதிகரித்தது. ஏன் நான் மணியைக் கவனிக்கவில்லை? என் பொறுப்பில் தானே அம்மா அதை விட்டார்! ஆனால் ‘பதறாத காரியம் சிதறாது’ என்று என்னுடைய ஆசிரியர் நிறைய முறை கூறியுள்ளார். அதற்கேற்ப பதறாமல் நிதானமாக யோசித்தால் மணி மீண்டும் கிடைக்கும். இவ்வாறு எண்ணிக் கொண்டே நான் பூங்காவைச் சுற்றி நடந்து மணியைத் தேடினேன். இருப்பினும் எவ்வளவு முறை தேடியும் மணியைக் காணவில்லை. என் மனத்தில் அச்சம் குடியேறியது. முன்பு என் தோழி, ஒரு நாய் இவ்வாறு தொலைந்தபோது உணவில்லாமல் இறந்ததைப் பற்றிக் கூறினாள். இந்த கதையைப் பற்றி நினைத்தபோது என் இதய துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. என் கண்கள் குளமாயின. செய்வதறியாது திகைத்து நின்றேன். அப்போது ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று பாரதியாரின் பாட்டு என் நினைவிற்கு வந்தது. நான் மனத்தில் உறுதி கொண்டால்தான் மணி நிச்சயமாக மீண்டும் கிடைக்கும். அப்போது வட்டாரத்தைச் சுற்றி சுவரொட்டிகள் ஒட்டினால் யாராவது மணியைப் பார்த்தால் நம்மிடம் கூறுவர் என்ற யோசனை தோன்றியது. மணி நமக்கு உறுதியாகத் திரும்பி வரும். இதைப் பற்றி எண்ணிக்கொண்டே வீடு திரும்பினேன். வீட்டுவாசலில் அம்மா எனக்குக் காத்துகொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் நான் தாரைத் தாரையாக அழத் தொடங்கினேன். “அம்மா, மணியைக் கா…” என்று ஆரம்பித்தபோது மணி வீட்டிலிருந்து என்னிடம் ஓட வந்தது. “மணி?” என்று ஆச்சரியமும் இன்பமும் கலந்து மணியைக் கட்டி அணைத்தேன். போன உயிர் திரும்பி வந்தது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் உடனே நடந்ததையெல்லாம் அம்மாவிடம் கூறி மன்னப்பு கேட்டேன். அம்மாவும் நடந்ததைப் புரிந்துகொண்டு நான் தவற்றை உணர்ந்ததே போதும் என்று கூறினார். “லொல் லொல்!” என்று மணி குரைக்கும் சத்தத்தைக் கேட்டு நான் நிகழ்காலத்திற்கு வந்தேன். அச்சம்பவத்திலிருந்து நான், என்றும் நம் பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும் மணியை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றும் உணர்ந்தேன். இனிமேலாவது மணியைக் காணாமல் போகாமல் பார்ததுக்கொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டேன். நல்ல வேளை அன்று மணி மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்பியது. இச்சம்பவமும் இதிலிருந்து நான் கற்றுகொண்ட பாடமும் என் மனதில் அழியா வடுக்களாக ஆழம் பதிந்தது.

உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக - ZAFIRAH BINTE SABIR MOHAMED 104 - 2021

அன்று சூரியன் தனது பொன்னொளிக் கதிர்களை உலகெங்கும் பரப்பினான். பறவைகளின் 'கீச் கீச்' என்ற ஒலியைக் கேட்டு நான் எழுந்தேன். அவசர அவசரமாக எனது காலைக்கடன்களை முடித்து பள்ளிக்குப் புறப்பட்டேன். அன்றுதான், உயர்நிலை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல்முறையாக உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றனர். எனக்கு மிகவும் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. என் தோழி மாலாவிற்கும் அதே பள்ளி கிடைத்திருந்தது. நாங்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளைப் போல் நெருக்கமாக பழகினோம். அதே உயர்நிலை பள்ளிக்கு மாலாவும் வருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. சந்தோஷத்தில் நான் மானைப் போல துள்ளிக் குதித்துப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு நான் மாலாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். நானும் அவளும் ஒரே வகுப்பில் இருந்தோம். பள்ளியின் முதல் வாரம் பள்ளியைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள பல விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் போட்டிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனக்கும் மாலாவுக்கும் சிறுவயதிலிருந்தே போட்டிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாங்கள் அதில் ஆர்வத்துடன் ஈடுபடுவோம். அதேபோல் இப்போட்டிகளிலும் கலந்துகொள்ள எங்களுக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. மாலாவுக்கு எப்போதும் தான் மட்டும்தான் வெற்றி அடைய வேண்டும் என்ற ஒரு தவறான குணம். அக்குணத்தை தவிர்க்கச் சொல்லி நான் அவளிடம் பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. நான் அவளுக்கு மீண்டும் ஒரு முறை அவ்வாறு ஒரு குணத்தை கைவிடச் சொல்லி எடுத்துரைத்தேன். ஆனால், எனது அறிவுரை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. போட்டிகளும் ஆர்வமூட்டும் நடவடிக்கைகளும் தொடங்கின. பல போட்டிகளில் மாலா வெற்றி அடைந்தாள். நானும் சில போட்டிகளில் வெற்றி அடைந்தேன். அது மாலாவுக்கு பிடிக்கவில்லை. அனைத்துப் புகழும் அவளுக்கு தான் கிடைக்க வேண்டும் என்று எண்ணினாள். அதனால், நான் சில போட்டிகளில் கலந்து கொள்ளாமல் விலகினேன். மாலாவுடைய குணத்தை மாற்றுவது மிகவும் முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது, ஒரு நாள் ஓட்டப்பந்தயப் போட்டி ஒன்று வந்தது. மாலாவுக்கு ஓட்டப்பந்தயங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால், அவள் அதில் கலந்துகொண்டாள். எனக்கு ஓடுவது என்றாலே பிடிக்காது. அதனால், நான் அப்போட்டியிலிருந்து விலகினேன். மாலா அப்போட்டியில் வெற்றி அடையக் கடுமையாக உழைத்தாள். போட்டியின் நாளும் வந்தது. அனைத்து போட்டியாளர்களும் திடலில் இருந்தனர். அவர்கள் போட்டி ஆரம்பிப்பதற்கு முன் ஆயத்த பயிற்சி செய்து கொண்டிருந்தனர். நான் மாலாவிடம், "உன்னால் முடியும்!" என்று கூச்சலிட்டேன். அவளும் தன்னம்பிக்கையுடன் இருந்தாள். போட்டி தொடங்கியது. மாலா மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் வெற்றி எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தாள். அப்போது தான் இன்னொரு மாணவியும் மாலாவுக்குச் சரிக்கு சமமாக ஓடினாள். அது மாலாவுக்குப் பிடிக்கவில்லை. தான் மட்டும் தான் வெற்றி அடைய வேண்டும் என்று எண்ணினாள். அவள் உடனே தன்னுடைய கையை நீட்டி அம்மாணவியை விழ வைத்தாள். அதைப் பார்த்த என்னால் எனது கண்களை நம்பவே முடியவில்லை. எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சிலை போல் நின்றேன். இறுதியில் மாலா தான் வெற்றி அடைந்தாள். மாலாவுக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால், அவள் குறுக்கு வழியில் வெற்றி பெற்றது சரியில்லை என்பதை நான் உணர்ந்தேன். என் மனதில் பல கேள்விகளும் எண்ணங்களும் ஓடிக்கொண்டிருந்தன. 'நான் இந்த உண்மையை எனது ஆசிரியரிடம் கூறவா? வேண்டாமா?' 'மாலா என்னுடன் உள்ள நட்பை துண்டித்துவிட்டால்?' என்ற பல கேள்விகள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. இறுதியில், ஆசிரியரிடம் உண்மையைச் சொல்ல முடிவெடுத்தேன். ஏனென்றால், எச்சூழலிலும் உண்மையை மட்டும் தான் கூற வேண்டும் என்று எனது அம்மா எப்போதும் கூறுவார். ஆசிரியரிடம் நான் மாலா குறுக்கு வழியில் வெற்றி அடைந்ததைப் பற்றிக் கூறினேன். என் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உண்மையைக் கூறிய என்னை என் ஆசிரியர் மெச்சினார். அவர் மாலாவை அவ்வாறு செய்ததற்கு கண்டித்தார். நான் தான் அந்த உண்மையைக் கூறினேன் என்பது மாலாவுக்குத் தெரிய வந்தது. கோபத்தில் அவளுடைய முகம் கோவைப் பழம் போல் சிவந்தது. அவளுக்குக் கிடைத்த புகழ் இப்போது எனக்கு கிடைத்ததை எண்ணி அவள் மிகவும் பொறாமை கொண்டாள். அவளுக்குக் கிடைத்த பாராட்டுகளை, உண்மையைக் கூறி நான் அனைத்தையும் கெடுத்துவிட்டதாக எண்ணிப் பொறாமையில் என்னுடன் உள்ள நட்பைத் துண்டித்துக்கொண்டாள். என் இணைபிரியா தோழி, மாலா என்னுடன் உள்ள நட்பைத் துண்டித்துக்கொண்டதை எண்ணி சோகமடைந்தேன். என்னால் பாடங்களில் கவனம் செலுத்த இயலவில்லை. உலகமே இருண்டுவிட்டது போல இருந்தது. பீறிட்டு வரும் துக்கத்தை மென்று விழுங்கினேன். என் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள சிரமப்பட்டேன். என் ஆசிரியர் என் அம்மாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததைப் பற்றி கூறி என்னை பாராட்டினார். 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற திருக்குறளுக்கு ஏற்ப என் அம்மா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் என்னை மெச்சினார். நான் அவரிடம் எனது வருத்தத்தைப் பற்றி கூறினேன். அவர் என்னிடம், "நீ கவலைப்படாதே. ஒரு நாள் மாலா தான் உன் மீது பொறாமை கொண்டது தவறு என்பதை உணர்ந்து உன்னுடன் மீண்டும் பழக ஆரம்பிப்பாள்," என்று கூறினார். என் அம்மாவின் சொற்கள் எனக்கு ஆறுதலாக இருந்தது. அச்சம்பவம் என் மனத்தில் கல்லில் செதுக்கிய எழுத்துக்களைப் போல பதிந்தது.

உன் நண்பர் எப்போதும் எதிலும் பிடிவாதமாக நடந்துகொள்வார். ஆனால், அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அது தவறென்பதை அவருக்கு உணர்த்தி அவரிடம் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுபற்றி விளக்கி எழுதுக - Darshana Ganesan 105 - 2021

“அவன்தான் பிடிவாதமாக எல்லாவற்றையும் ஒரே காலில் நின்று கேட்டுக்கொண்டிருக்கிறான் என்றால் நீங்களும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு கொடுத்துக்கொண்டிருக்கிறீகள்? சிறிது புத்திமதி கூறவேண்டியதானே?” என்று எப்போதும் போல ரவியின் அம்மா ரவியின் அப்பாவை வினவினார். ரவியின் அம்மா எதிர்பார்த்தது போலவே அவர், “விடு விடு , சின்னப் பையன் தானே” என்று கூறி வேலைக்குப் புறப்பட்டார். ரவியின் அப்பா நீங்கள் நினைப்பது போல பணக்காரர் அல்ல. அவர் ஒரு சாதாரண மனிதர். மிகவும் கடினமாக வேலை செய்யும் மனிதர். அவர் நெகிழி பொருட்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்பவர். ஒரு காக்கிச் சட்டையையும் காலச்சட்டையையும் தான் அவர் எப்போதுமே அணிந்து காணப்படுவார். அதில் வேலை செய்யும் இடத்திலிருந்து கறைகள் ஏராளமாகப் படிந்து இருக்கும். ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளாமல், இருப்பதை வைத்துக்கொண்டு இது போதும் நமக்கு என்று வாழ்வார். அவருக்கு மிகவும் பிடித்த பாடல், “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. வாழ்வென்றால் போறாடும் போர்களமே,” என்றும் அது அவருடைய வாழ்கைக்கு மிகவும் பொருந்தும் என்றும் என்னிடமும் ரவியிடமும் அடிக்கடி கூறுவார். ஆனால் தன்னுடைய அப்பாவின் குணங்கள் சுத்தமாகவே இல்லாதவந்தான் ரவி. ரவி மிகவும் பிடிவாதமாக எல்லாவற்றுக்கும் நடந்துகொள்வான். ஒரு பொருள் அவனுக்கு வேண்டும் என்றால், அது கிடைக்கும் வரை அடம்பிடிப்பான். என்னதான் இவனின் குடும்பம் வசதியில்லாத குடும்பமாக இருந்தாலும், வேண்டியவற்றை எப்படியாவது வாங்கிக்கொள்வான். என் பெயர் கதிர். ராமு என்னுடைய நெருங்கிய நண்பன். நாங்கள் மேகமும் வானமும் பொல நண்பர்கள். அவனில்லாமல் நான் இல்லை. நான் இல்லாமல் அவனில்லை. எல்லா நட்பு பொல நாங்களும் சில சமயங்களில் சண்டைபோடுவோம். பெரும்பாலும் எங்களிடையே நடக்கும் சண்டைக்கு காரணம் அவனுடைய பிடிவாதத்தனம். அவன் பிடிவாதமாக நடந்துகொள்வது என்னை கடுப்பாக்கும். ஆனால் நண்பந்தானே என்கிற காரணத்தால் அமைதியாக இருப்பேன். ஒரு நாள், ரவியும் அவனுடைய குடும்பமும் தீபாவளிக்குத் துணி வாங்கச் செல்லும்போது, அவனுடைய கண்களில் படக்கூடாத ஒரு பொருள், அவனுடைய பார்வையை ஈர்த்தன. அது அவனை “வா, வா” என கூப்பிடுவது போல இருந்தது. அவன் உடனே தன்னுடைய அப்பவின் சட்டையை இழுத்து, “அம்மா, அப்பா, எனக்கு அந்த விளையாட்டுக் கருவி வேண்டும்!” என்று அடம்பிடித்தான். ரவியின் அப்பா அந்த பொருளின் மதிப்பைப் பார்த்தார். அவ்வளவுதான்! அவருடைய கண்கள் பிதுங்கின. நெஞ்சுவலியே வந்து விடுவது போலிருந்தது. அவருடைய மனத்திற்கு தெரியும், இதை இப்போது கண்டிப்பாக வாங்கித் தர முடியாது என்று. ஆனால், அவரால் தன்னுடைய மகனிடம் முடியாது என்று சொல்லமுடியவில்லை. “இங்குப்பாருப்பா கண்ணா! இதை நான் உன் பிறந்தநாளுக்கு வாங்கித்தரேன்!” என்று மெல்லிய குரலில் கூரினார். ரவியின் முகம் வாடியது. அவன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டான். நீண்ட நேரம் அடம்பிடித்த பிறகு, சரி! அன்று அவன் கோபமாக கூறினான். “ஆனால், நீங்கள் இதை வாங்கியே ஆகனும்!” என்று அடம்பிடித்தான். தன் மகன் இவ்வாறு நடந்துகொண்டதைப் பார்த்து, ரவியின் அம்மா அவனை கண்டித்தார். “பரவாயில்லை விடு,” அன்று ரவியின் அப்பா ரவியின் அம்மாவிடம் கூறினார். பிறகு, மூவரும் அந்த இடத்தைக் காலிச்செய்தனர். ரவியின் அப்பாவிற்குத் தெரியும். அவர் நீண்ட நேரம் வேலை பார்த்தால் ஒழிய ரவிக்கு விளையாட்டுக் கருவியை வாங்கித் தர இயலாது. ஆகையால் தான் பெற்ற மகனுக்காகத்தானே இவ்வளவு உழைக்கிறார், இன்னும் சிறிது கடினமாக உழைப்பதில் ஒன்றும் ஆக போவதில்லை என்று 10 மணி நேரம் பார்த்துக்கொண்டிருந்த வேலையை 12 மணினேரம் பார்க்க ஆரம்பித்தார். அவருடைய மனைவி வேண்டாம் என்று கூறியும் அவர் மறுத்து நீண்ட நேரம் வேலைக்குச் சென்றார். ரவியின் அம்மா ரவியிடம் இந்த விளையாட்டுக் கருவியை வாங்கினால், அவனுடைய அப்பாவுக்கு இன்னும் கஷ்டம் என்று எடுத்து கூறியும் அவன் அந்தக் கருவி வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றான். அவர், ரவியின் பிடிவாத்த்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது என்று எண்ணியபடியே பெருமூச்சு விட்டார். ஒரு வாரம் சென்றது. இரண்டாவது வாரமும் சென்றது. மூன்று வாரங்களாக ரவியின் அப்பா தினமும் நீண்ட நேரமாக தொழிற்சாலையில் வேலை செய்தார். அன்று எதிர்பாராத விதமாக இரவு நேரத்தில் தொலைப்பேசி மணி ஒலித்தது. அதில் ஒருவர், ரவியின் அப்பா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார், சீக்கிரம் கிளம்பி அங்கு வாங்கள் என்று ரவியின் அம்மாவிடம் சொன்னார். ரவியின் அம்மாவிற்கு உலகமே இருட்டியது போல இருந்தது. ரவி அதைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் ஒரு கணம் திகைத்துப் போய் சிலையாய் நின்றான். பிறகு இருவரும் என்ன ஆகிவிட்டதோ ஏது ஆகிவிட்டதோ என்று அறியாமல் மருத்துவமனைக்கு ஓடோடி சென்றனர். அங்கு மருத்துவர், “உங்களுடைய கனவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம், அவர் தொழிற்சாலையில் நீண்ட நேரம் வேலைப்பார்த்ததே ஆகும். அங்கிருக்கும் கெடுதலான புகைமூட்டம் அவருடைய நுரையீறலைப் பாதித்துவிட்டது.” என்று சொன்னார். உடனே குற்ற உணர்ச்சி ரவியின் மனதைத் தாக்கியது. அவன் மட்டும் பிடிவாதமாக இல்லாவிட்டால் இதெல்லாம் நடந்திருக்காது. “மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்” என்று உலகநீதியில் சும்மாவா சொல்லியுள்ளார்கள். ரவி அழ ஆரம்பித்தான். அவன் தன் அப்பவிற்கு ஒன்றும் ஆகக்கூடாது என வேண்டினான். “நாம் நேசிப்பவர்கள் எல்லாரும் நம்மோடு நிலைத்துவிட்டால், நினைவின் மொழியும் பிரிவின் வலியும் தெரியாமல் போய்விடும்” என்று அவன் படித்தது ஞாபகம் வந்தது. அது போன்று ஒன்றும் ஆகக்கூடாது என அவன் வேண்டாத கடவுள் இல்லை. இனிமேல் பிடிவாதமாக இருக்கக்கூடாது என்றும் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தான். அப்போது மருத்துவர் வெளியே வந்து, “கவலைப்படுவது போல இப்போது ஒன்றும் இல்லை! சரிசெய்து விட்டேன். அவர் சிறிது நேரம் உறங்கட்டும். பிறகு நீங்கள் அவரிடம் பேசலாம்,” என்று தெய்வம் போல வந்து கூறிச் சென்றார். அப்போது அடைந்த மகிழ்ச்சி இதுவரை ரவி அடைந்த்ததே இல்லை. “தெய்வங்கள் எல்லாம் தோற்றுப் போகும் தந்தையின் அன்பின் முன்னே!” என்ற பாடல் வரிகள் உண்மையிலையே ரவி அப்போது உணர்ந்தான். என்னதான் ரவி அடம்பிடித்தாலும் அவனின் அப்பா ரவிக்கு எல்லாவற்றையும் செய்துள்ளார். ரவி தன் வாழ்நாள் முழுவதுமே தன் தந்தக்கு நன்றிக்கடன் பட்டுள்ளான்.

Friday, November 19, 2021

உன் நெருங்கிய தோழி உன் மேல் கொண்ட பொறாமையால், உன்னைவிட்டு விலகக் காரணமாக அமைந்த நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளுடன் விளக்கி எழுதுக. - பெயர்: மகேஷ் காயத்ரி - வகுப்பு: 108 (2021)

பொறாமை என்பது நம் அனைவரிடத்திலும் உள்ள ஓர் உணர்வு தான். ஆனால், அதை நாம் மற்றவர்களிடம் வெளிக்காட்டுவதும் வெளிக்காட்டாததும் நம் கையில் உள்ளது. மற்றவர்கள் நம்மைவிட எதிலாவது சிறந்து விளங்கினாலோ நம்மை வென்றுவிட்டாலோ நம்முள் சிலர், “அடாடா! அவர்கள் நம்மைவிட இதில் நன்றாகச் செயல்படுகின்றனரே!” என்று நினைத்துச் சற்று பொறாமையடைவோம். இதற்குப்பதிலாக, வேறு சிலர் அவர்களது வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல் நினைத்து மகிழ்ச்சியடைந்து அவர்களை வாழ்த்துவார்கள். அவர்களுள் பொறாமை இருந்தாலும் அதை வெளிக்காட்ட மாட்டார்கள். அத்துடன், நட்பினுள் பொறாமை ஏற்பட்டால் நிறைய சண்டை தான் ஏற்படும். சற்றுமுன் நகமும் சதையும் போல இருந்த நண்பர்கள் பொறாமையினால் நாயும் பூனையும்போல் சண்டைபோட்டு நிலைமை மோசமானால் எதிரிகளாகக் கூட ஆகிவிடுவார்கள். இந்தச் சதிக்கெல்லாம் காரணம் பொறாமையே! “ட்ரிங்! ட்ரிங்!” பள்ளி இடைவேளை மணி ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் வகுப்பைவிட்டு உணவகத்தை நோக்கி சிட்டாய்ப் பறந்தனர். புன்னகைத் தவழ்ந்த முகத்துடன் எனது இணைபிரியாத் தோழி, மாலதி, என்னிடம், “மாயா! நீ வருகிறாயா?” என்று கேட்டாள். நானும் சூரியனைக் கண்ட தாமரையைப் போல மலர்ந்த முகத்துடன் என் தலையை ஆட்டினேன். என் கையடக்கத் தொலைப்பேசியையும் பணப்பையையும் எடுத்துக்கொண்டு மாலதியுடன் உணவகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். மாலதியும் நானும் தொடக்கப்பள்ளியிலிருந்தே புவும் நாரும் போல நெருங்கிய நண்பர்கள் ஆவோம்! நாங்கள் இருவரும் பணக்கார குடும்பங்களிலிருந்தே வந்தோம். அவளும் நானும் எப்போதுமே சிறந்த மதிப்பெண்கள் எடுப்போம். சொல்லப்போனால், எங்கள் இருவரையும் இரட்டை சகோதரிகள் என்றே கூறலாம். ஆனால், மாலதியோ மிகவும் அழகானவள். அவளது கருப்பு நிற தலைமுடி, பழுப்பு நிற கண்கள் எல்லாம் அவளை ஒரு ராணியைப்போல் அலங்காரப்படுத்தின. மற்றவர்கள் என்னையும் ஓர் அழகானவள் என்று தான் கருதுகின்றனர். இருந்தாலும் மாலதியின் அழகே வேற விதம்! இன்னொன்று! அவளுக்கு எப்பொழுதுமே மேடை மீது நின்றுபேசும்போது அவள் மனதினுள் பீதி குடிக்கொள்ளும். இதை அவள் உணர்ந்தாலும் அவளுக்கு அனைவர் முன் நின்று பேசுவதற்கு ஆசையுண்டு. அந்த அச்சத்தை மட்டும் மாலதியால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனக்கோ மேடையில் பேசுவது என்பது இயல்பானது என்றே கூறலாம். இதையறிந்த அசிரியர்கள் பலர் என்னை போட்டிகளில் கலந்துகொள்ள வைத்திருகின்றனர். அவை அனைத்தும் எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக அமைந்தன. மேலும், அவற்றில் கலந்துகொள்வது எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தை அளிக்கும். “மாயா, நீ நேற்று உன் குடும்பத்துடன் எங்கேயோ சென்றதாக கூறினாயே. எங்கே?” என்று வினவினாள், மாலதி. நானும் பதிலளிக்க வார இறுதியில் நடந்த நகைச்சுவையான சில விஷயங்களைப் பற்றி பாட்டிகள் போல் அரட்டையடித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல நாங்கள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவாரே வயிறு குலுங்க சிரித்தோம். சிரிப்பு மருந்தைக் குடிப்பதுபோல் இருந்தது! எங்களது வகுப்பு மாணவர்கள் சிலர் எங்களைச் சுலித்த முகத்துடன் பார்த்து, “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்க நான் “‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழிக்கேற்ப நானும் மாலதியும் நல்ல மாணவர்களாக ஆசிரியர் கற்றுக்கொடுத்ததைச் செய்துகொண்டிருக்கிறோம்!” என்றேன். அடுத்த கணமே, நானும் மாலதியும் கண்ணீர் வரும்வரை சிரிக்காரம்பித்தோம் . இந்தப் பதிலைக் கேட்ட எங்கள் வகுப்பு மாணவர்கள் வெறுப்புடனும் கோவைப்பழம்போல் சிவந்த முகத்துடனும் வேறெங்கேயோ சென்றனர். எங்கள் ஆங்கில அசிரியர் எங்களிடம் வந்தபின்னே நாங்கள் பிசாசுகள்போல சிரிப்பதை நிறுத்தினோம். “மாயா, மாலதி! நீங்கள் சிரிப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. உங்களை தொந்தரவு செய்வதற்கு என் மன்னிப்பு. ஆனால், மாயா நான் உன்னிடம் சற்று பேசவேண்டும்!” என்றார், ஆசிரியர். இதைக் கேட்டவுடன் என்னுடைய கண்கள் அகல விரிந்தன. என் இதயம் ‘படக், படக்’ என்று தாளம்போட நான் என்ன தவறுசெய்தேன் என யோசித்தவாரே ஆசிரியரை அச்சத்துடன் பின்தொடர்ந்தேன். “மாயா, நீ ஆங்கிலத்தில் சிறந்து விளங்கும் மாணவி. மேலும், நீ பல பேச்சு போட்டிகளில் பங்கெடுத்து வென்றிருக்கின்றாய். அதனால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்வாயா? நீ நம் பள்ளிக்குப் பெருமை கொண்டு வருவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று என் ஆசிரியர் என்னிடம் தெரிவித்தார். எனக்கு அப்பொழுது உல்லாச வானில் சிறகடித்துப் பறப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டது. நான் என் ஆசிரியரிடம் என் விருப்பத்தைக் கூறி என்னுடைய தன்னிப்பட்ட தகவல்களை அளித்தேன். எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை! அவ்வளவு குஷி! நான் மானைப்போல் துள்ளி குதித்தவாறே மீண்டும் மாலதியிடம் சென்றேன். அவளது முகத்தில் ஈயாடவில்லை. “இன்னொரு போட்டியா?” என்று அவள் முறைத்தவாறு கேட்டாள். நானும், “ஆம்! நீ சந்தோஷமாகத் தானே இருக்கிறாய்?” என்று வினவினேன். அவள் கண்கள் கோபக் கனல்களைச் சுட்டெரித்ததுப்போல் இருந்தது. அவள் என்னைப்ல பொரிந்து தள்ளினாள். “ஏ, மாயா? நான் எதற்கு நீ போட்டியில் கலந்துகொண்டால் மகிழ்ச்சியடையனும்? நான் எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுக்கவில்லை!” என்று காதைப் பிளக்கும் வண்ணம் கத்தினாள். நான் வியப்பில் வாயைப் பிளந்தவாறு திகைத்து நின்றேன். “இனி, நாம் நண்பர்களே இல்லை!” என்று கூறியப்படி அவள் என்னைவிட்டுச் சென்றுவிட்டாள். மாலதி, என் நெருங்கிய தோழி, என் சகோதரிபோல் இருந்தவள். என் பிரிய தோழி, என்னைவிட்டு விலகிச்சென்றுவிட்டாள். துக்கம் என் தொண்டையை அடைத்தது. முத்துக்கள் போல் கண்ணீர்த் துளிகள் என் முகத்திலிருந்து வழிந்தோடின. நான் அவற்றைத் துடைத்துவிட்டு வகுப்புக்குச் சென்று மாலதி ஓர் உண்மையான தோழியில்லை என உணர்ந்தேன். உண்மையான நண்பர்கள் உங்களைவிட்டுப் பிரிய மாட்டார்கள், உங்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவார்கள் முக்கியமாக அவர்களுள் பொறாமை இருந்தால் வெளியே காட்டி நட்பை முறிக்க மாட்டார்கள்! மெதுவாக, என் துக்கம் சினமாக மாறியது. நான் மாலதியைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிட்டு என் படிப்பில் கவனம்செலுத்தினேன். அவளைப் பற்றி நினைத்து படிப்பில் பின்தங்கி விடக்கூடாது என்பதே என் ஒரே எண்ணம். அந்தப் பேச்சுப் போட்டியில் நான் மீண்டும் முதல் பரிசை வென்றேன். இந்த நிகழ்வுகளிலிந்து நான் கற்றுக்கொண்டது, பிறர் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதே. மாலதி பொறாமையாக இருந்திருந்தாலும் அவள் அதைக் காட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இன்னும் நண்பர்களாகத் தான் இருந்திருப்போம். ‘அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்’ என்று திருவள்ளுவர் போதித்ததற்கேறப பொறாமைக் கொள்வதை நாம் கட்டுப்படுத்திக்கொண்டும் சினம், பேராசை மற்றும் தீங்கு விளைவிப்பது ஆகிய மற்ற மூன்றையும் தவிர்த்துக் கட்டுப்படுவதே சிறந்ததாகும். ‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்பதற்கேற்பவும் பொறாமை, சினம் போன்றவையில்லாத நட்பே நல்ல நெருக்கமான நட்பாகும். மாலதியுடன் எனக்கு நடந்தது ஒரு சிறபற்ற அனுபவமாக இருந்தாலும் நான் பலவற்றை உணர்ந்துகொண்டேன். இதுதான் என் பெற்றோர் கூறிய, ‘அனுபவம் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்பதற்கு அர்த்தம் போல!

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

கொண்டாரெட்டி இனியா - 208 - 2021 “சிங்கை நாடு, எந்தன் வீடு !’’ என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடலாம்!” ஆனால், அது பாட்டு மட்டும் கிடையாது, நம் சிங்கப்பூரைப் பற்றிய நம் எண்ணங்கள் அந்த முத்து முத்தான எழுத்துகளில் பதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் உலக வரைப்படத்தில் ஒரு ஊசியின் முனையைவிட சிறிதாக இருந்தாலும் நாம் கடந்த வருடங்களில் வளர்ந்த வளர்ச்சியே மற்ற நாடுகள் நம்மை ஆச்சரியத்துடன் பார்க்க செய்கின்றது. இந்த மண்ணில் பல மக்கள் வாழ்கிறோம், சுமார் 5 மில்லியன் குடிமக்கள். நம்முடைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் நம்மை சுற்றியிருப்பதைப் பார்த்து ரசிக்க கூட நேரமில்லை. இருப்பினும், சுற்றி பார்க்கும் அரிய தருனங்களில் சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளைப் பார்க்கிறோம். விளையாட்டு வசதிகள் அதிகமாக கானப்படும் இப்பேட்டைகள் மக்களுடைய உடல் ஆரோக்கியத்திர்க்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் பெரிய பங்கு வகிக்கின்றது என்பதைக் கவனிக்கலாம். இவ்வசதிகள் நம் குடிமக்கள் வாழ உதவியாக உள்ளன என்பதை என் தாழ்மையான கருத்து. அரசாங்கம் நிறுவிய விளையாட்டு வசதிகள் மக்களுக்கு எவ்வகையில் பலன் தருகின்றன என்று இக்கட்டுரையில் கவனிப்போம். முதலாவதாக, பல குடியிருப்புப் பேட்டைகளில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கபட்டிக்கின்றன. “விளையாடும் நேரத்தில் விளையாடு, படிக்கும் நேரத்தில் படி, ” என்பது நம் நாட்டில் போதியளவு வலியுறுத்தப்படவில்லை என்று நான் கருதுகிறேன். சிங்கையில் பல பெற்றோர் குழந்தைகளுக்குப் படிப்பின் முக்கியத்துவத்தை அறிவுறுத்திவிட்டு விளையாடுவது தவறு என்று சொல்கின்றனர். என் கண்ணோட்டத்தில் இது மிக தவறு என்று சொல்கின்றனர். மற்ற நபர்களைச் சந்திக்காமல் இளம் வயதிலிருந்தால் பெரியவரானதும் மற்ற கலாச்சாரம், வேறினத்தவர், மாற்றுத்திறனாளிகள் இவர்கள் யாரையும் அறியாத்தால் பாகுப்பாடுமிக்க மனம் உண்டாகலாம். இதைத் தவிர்க்கவே விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. இன்று, பல வடிவத்திலும் பல வண்ணங்களிலும் புதிய விளையாட்டு மைதானங்கள் நம் நாட்டின் பல குடியிருப்பு பேட்டைகளில் கட்டப்படுகின்றன. விளையாட்டு மைதானங்களில் சறுக்கு, ஊஞ்சல், போன்ற பல விளையாட்டுகள் சிறுவர்களையும் குழந்தைகளையும் காந்தமாய் ஈர்க்கின்றன. ஓடும் பாம்பை மிதிக்கும் வயதில் குழந்தைகள் குதூகலத்துடன் விளையாடும்போது அவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. சுற்றி வளரும் பச்சை பசேலென்ற செடிகளையும் பச்சை இலை, தழைகளைப் பார்க்கும்போது மனம் சாந்தமடைவதோடு கண்களும் குளிர்ச்சி பெருகின்றன. அதோடு, ஓடியாடி விளையாடும்போது சிறுவர்களுக்கு ஒருவிதமான உடற்பயிற்சியும் கிடைக்கும். சூரிய வெளிச்சத்தின் கீழ் விளையாடும்போது உடலுக்கு ‘விட்டமின் டி’ என்ற சத்து கிடைக்கும் மற்றும் சுத்த காற்றைச் சுவாசிக்கும்போது உடல் புத்துணர்ச்சி பெரும். வட்ீ டிலேயே அடைந்து சிறை வாழ்க்கையை வாழும் சிறுவர்கள் வெளியே வந்து விளையாடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சொன்னால் அது மிகையாகாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பது போல சிறுவயதிலிருந்தே நல்ல பழக்கங்களை பெற்றோர் ஊக்குவிக்க, பிள்ளைகளை விளையாட அழைத்துச்செல்ல வேண்டும். விளையாட்டு மைதானம் என்பது எந்த குழந்தையும் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நண்பர்களை கொடுக்கும் என்பது முற்றிலும் உண்மை. “வாழ வைப்பவன் இறைவன், வாழ தெரிந்தவன் மனிதன், விழ வைப்பது துரோகி, தூக்கி விடுபவன் நண்பன் ” என்பதுக்கு ஏற்ப நண்பர்கள் வாழ்வில் அவ்வளவு பெரிய முக்கிய பங்கை வகிக்கின்றனர். சமூகத்தில் ஒரு தனிப்பட்ட குழுவிடம் மட்டும் பழகாமல் எல்லோரிடமும் சிரத்தையுடன் பழகினால்தான் நல்லிணக்கம் வளரும்! சமுகம் என்பது ஐந்து விரல்கள் போன்று, ஒவ்வொறு விரலுக்குத் தனிப்பட்ட தகுதிகள் இருந்தாலும் எல்லா விரல்கள் இருந்தால்தான் நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் செய்யலாம், ஒரு பேனாவை வைத்து எழுதுவதிலிருந்து உந்துவண்டி ஓட்டும் வரை. ஒற்றுமையே பலம்! அடுத்ததாக, அடுக்குமாடி கட்ட்டங்களின் கீழ்த்தளத்தைப் பற்றி பார்ப்போம். இந்த இடம் பார்க்க சிறியதாகயிருந்தாலும் முதியோர்களுக்குப் பிடித்த இடமாக விளங்குகிறது. கீழ்த்தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் மேசைகளில் அச்சடிக்கப்பட்ட சதுரங்கக அட்டை முதியோருக்கு நல்ல பொழுதுபோக்காக விளங்குகிறது. பல முதியோர்கள் தனியாகவே வாழ்வதால் தனிமை ஒரு அசுரனைப்போல் தாக்குகிறது. சதுரங்க விளையாட்டு அறிவை கூர்மையாக்குவதோடு சமூக நல்லிணக்கத்தை மேம்படுகிறது. சதுரங்கம் இரு- நபர் விளையாட்டு என்ற காரணத்தால் மற்ற பெரியவர்களுடன் விளையாடும்பொழுது நட்பு மலரும், அவரைப் பற்றி நன்கு அறியலாம். வேறுபாடுகளைத் தாண்டி பல உறவுகளை அமைப்பதற்கு இவ்விளையாட்டு வழியளிக்கிறது. அடுத்து, பூப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுக்காக அமைக்கப்பட்ட இடங்கள். பல மக்கள் எல்லா நாட்களிலும் இங்கே வந்து விளையாடுவர். பரபரப்பான வாழ்க்கை சூழலால் நம்மில் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம், பள்ளியால் பாடச்சுமை கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போல கிடக்காமல் வெளியே சென்று விளையாட இந்த இடங்கள் ஊக்குவிக்கின்றன. பூப்பந்தும் கூடைப்பந்தும் விளையாடும்போது உடல் ஆரோக்கியம் பல மடங்க மேம்பாடு. “நோய் வருமுன் காக்க வேண்டும்.” என்பதற்கு ஏற்ப நோயிலிருந்து பாதுகாத்து உடலை தெம்பாகவும் நலமாகவும் வைக்க உடற்பயிற்சி இன்றியமையாதது என்பது வெள்ளிடைமலை போல இருக்கிறது. இவ்விளையாட்டுகளை விளையாடும்போது வட்டாரத்தில் வசிக்கும் பல நபர்களைச் சந்தித்து அவர்களுடன் பேசியும் விளையாடியும் பிணைப்பு வலுவடையும் சமூகத்தில் பல வேறுபாடுகளிருந்தும் சில சில கண்ணும் காணாத விஷயங்களில் ஒரே விருப்பங்கள் இருக்கும், உதாரணத்துக்கு விளையாட்டு மீதிருக்கும் நாட்டம். கடைசியாக, குடியிருப்பு பேட்டைகளிலிருக்கும் சமூக மன்றங்கள் பல விளையாட்டு வசதிகளை வழங்குகின்றன. அதாவது, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் மக்கள் ஈடுப்படலாம். இது நல்ல உடற்பயிற்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும். “நாடு என்பதை நாடு, நாடாவிட்டால் எது வடுீ ? “ என்பதற்கு ஏற்ப நம் அரசாங்கம் நமக்கு செய்துகொடுத்த வசதிகள் எல்லாவற்றையும் பாராட்ட வேண்டும். சிலர் அரசாங்கம் முயற்சி போட்டு விளையாட்டு வசதிகள் அமைக்கவில்லை என்று கூறலாம். ஆனால், இக்கருத்தை நான் மறுக்கிறேன். ஏனெனில், அரசாங்கம் சமூக நலனைக் கருதியும் நம்முடைய வாழ்க்கைமுறையும் கவனத்தில் வைத்தே நமக்காக, ஒரு காசு கூட கட்டாமல் அனுபவிக்ககூடிய விளையாட்டு வசதிகளை அமைத்த்தோடு சுற்று வட்டாரத்திலிருப்பதால் சுலபமாக பயன்படுத்தும்படியும் அமைத்திருக்கிறது. கடைசியாக, சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள பலதரப்பட்ட விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவமளித்து மக்கள் வாழ உதவியாக உள்ளன என்று சொன்னால் அது சற்றும் மிகையாகாது என்பது திண்ணம்! “நன்றி மறப்பது நன்றன்று, நன்றல்லது அன்றே மறப்பது நன்று ” என்பதை மறவாமல் நாம் நம் நாட்டின் வசதிகளுக்கு நன்றியுணர்வோடு இருப்போம். “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, நீநாட்டிற்கு என்ன செய்தாய் என்று கேள்! ” நாம் எல்லோரும் பொறுப்புடன் இவ்வசதிகளைப் பயன்படுத்துவோம்! நன்றி.

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

Janarakshini_ 2021 சிங்கபூரில் இருக்கும் குடியிருப்பு பேட்டைகளில் பலவிதமான விளையாட்டு வசதிகள் உள்ளன. எல்லா வயதிற்கும் உட்பட்டு இந்த விளையாட்டு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. நமது குடியிருப்பு பேட்டைகளை சுற்றி நடக்கும்போது, நிறைய மக்கள் அங்குமிங்கும் உரையாடிக்கொண்டும் உடற்பயிற்சி செய்துகொண்டும் இருப்பதை காணலாம். "ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் சமுதாயங்களில் எப்பொழுதும் ஒற்றுமையாக காணப்படுகிறார்கள். இதற்கு ஒரு காரணம், எல்லாரும் இணைந்து பயன்படுத்தும் இந்த விளையாட்டு வசதிகளே என்று நம்புகிறேன். நமது குடியிருப்பு பேட்டைகளில் எல்லாரும் இணைந்து பயன்படுத்தும் வசதிகளில் பிள்ளைகளுக்கான விளையாட்டு திடல், உடற்பயிற்சி பூங்கா, பூபந்தாட்டம் அல்லது கூடைபந்தாட்டம் திடல்களும் உள்ளன. இந்த வசதிகள் சமூக நல்லிண்க்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கின்ற்ன என்பது நிச்சயம். முதலாவதாக, தொடக்கப் பள்ளி ஒன்று அல்லது இரண்டாம் மாணவர்கள் நிறையபேர் பிள்ளைகளுக்கான விளையாட்டு வசதிகளில் நிறைய நேரத்தை செலவிடுகின்றனர். இவர்களின் பெற்றோர்கள், விளையாட்டு திடலில் விளையாடுவது பிள்ளைகளுக்கு உடற்பயிர்சியாக விழங்கும் என்ற நோக்கத்துடன் தான் அவர்களை அங்கு அனுப்புகிறார்கல். இவர்களின் பெற்றோர்கள், விளையாட்டு திடலில் விளையாடுவது பிள்ளைகளுக்கு உடற்பயிர்சியாக விழங்கும் என்ற நோக்கத்துடன் தான் அவர்களை அங்கு அனுப்புகிறார்கல். ஆம். நாமும் பார்த்திருக்கிரோம். விளையாட்டு மைதானத்தில் பிள்ளைகள் உற்சாகதுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதோடும் விளையாட்டு வசதிகளில் விளையாடுகின்றனர். இது பிள்ளைகளுக்கு போதுமான உடற்பயிற்சியையும் மகிள்ச்சியையும் தருகிறது. உடற்பயிற்சியைவிட, நிறைய மாணவர்களுள் நட்பு மலர்கிறது. நீண்ட நாள் அதே இடத்தில் விளையாடும் பிள்ளைகள் ஒருவருடன் ஒருவர் நட்பு கொள்வர். "குணம்நாடிக் குற்றமும்நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" என்ற குறளுக்கு ஏற்ப்ப, நிறைய மாணவர்கள் மற்ற பிள்ளைகளுடன் பழகி வந்து அவர்கள் பற்றி நன்றாக தெரினந்தவுடன் அவர்களுடன் நட்புக்கொள்வர். அவ்வாறு தோன்றும் நட்பு சில சமயங்களில் நீண்ட காலமாக இருக்கும். இவ்வாறு தான் பிள்ளைகளுக்கான விளையாட்டு வசதிகள் மாணவர்களிடையே நட்பையும் நல்லினக்கத்தையும் உருவாக்குகின்றது. மாணவர்கள் வளர, நிச்சியமாக அவர்கள் பிள்ளைகளின் வசதிகளில் விளையாடுவதை நிறுத்திக்கொள்வர். ஆனாலும், மாணவர்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று நமது அரசாங்கம் பூப்பந்தாட்டாம் மற்றும் கூடைப்பந்தாட்ட திடலை அமைத்துள்ளது. இந்த திடல்கள், மாணவர்களுக்கும் மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் வேலை செல்லும் பெரியவர்களுக்கும் ஒரு உடற்பயிற்சி செய்யும் இடமாக திகழ்கிறது. எனது சமூதாயத்திலே, நிறைய பெரியவர்களுக்கும் மாணவர்களுக்கு பூப்பந்து, கூடைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம், காற்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட பிடிக்கும். அதனால், அவர்கள் இவ்விடங்களுக்கு செல்வார்கள். அங்கே, தன்னைப்போல் ஆர்வ்த்தால் வந்தவர்களை சந்திப்பார்கள். நீண்ட காலமாக அதே இடத்தில் விளையாடும்போது, நட்பு அவர்களுக்கிடையே மலரும். சில சமயங்களில், தெரியாதவர்களுக்கும் ஏதாவது காரணத்தால் மக்கள் அவர்களுக்கு உதவுவார்கள். "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்ற குறலுக்கு ஏற்ப, மக்கள் அவர்களின் உதவியை நினைவில் வைத்துகொண்டு வாய்ப்பு கிடைக்கும்போது அவர்களுக்கு திருப்பி உதவுவர். இது சமூதாயத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும். இதனால்தான் பூபந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், காற்பந்தாட்டம் திடல்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சமூக நல்லினக்கத்தையும் வலுபடுத்த்கின்றன. அடுத்தாக, வயதானவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் உடற்பயிற்சி பூங்காக்கள் அமைத்துள்ளன. இந்த இடங்களில் நிறைய வயதானவர்கள் உடற்பயிற்சி செய்வதை காணலாம். இங்கு சற்று சுலபமான உடற்பயிற்சி வசதிகள் உள்ளதால் வயதானவர்களுக்கு இங்கே உடற்பயிற்சி செய்ய தூண்டும். வேலையிருந்து ஓய்வெடுத்த நிறைய வயதானவர்கள் தங்கள் மாலை நேரங்களில் இங்கு வந்து விடுவர். நான் பார்த்ததில் அங்கு மற்றவர்களை முதியவர்கள் பார்க்கும்போது சுலபமாக உரையாடலைத் தொடங்கி உடற்பயிற்சி செய்தவாறு மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருப்பர். இதனால்தான் நிறைய சமயங்களில் முன்பின் தெரியாதவர்களும் முதியவர்கள் சுலபமாக நட்பு கொள்வர். உடற்பயிற்சி செய்யும் போது உங்களை ஊக்கப்படுத்தி உங்களோடு உடற்பயிற்சி செய்பவர் இருந்தால் அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால்தான் முதியவர்கள் தங்களுக்குள் நட்பை கொண்டுள்ளனர் என்று நம்புகிறேன். இதிலிருந்து உடற்பயிற்சி பூங்காக்கள் சமூக நல்லிணக்கத்தையும் நட்பையும் மேம்படுத்துவதோடு பெரியவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. மேற்கூறிய உதாரணங்களை தவிர நம் அரசாங்கம் நமக்கு நிறைய விளையாட்டு வசதிகளை அமைத்துள்ளது. பூங்கா, ஓடும் திட போன்ற வசதிகளும் சில வட்டாரங்களில் காணலாம். அந்த வசதிகள் நிச்சயமாக மக்களை உடற்பயிற்சி செய்யத் தூண்ட வைக்கும். எப்படி? எனது கருத்தில், நமது அரசாங்கம் இந்த வசதிகளையும் நாம் குடியிருப்பு பேட்டைகளின் நடுவில் கட்டி அமைத்திருக்கிறார்கள். அதனால் மக்கள் வேலை, அல்லது பள்ளி, அல்லது மற்ற சமுதாய வசதிகளுக்குச் செல்லும்போது இந்த விளையாட்டு வசதிகளை தாண்டி செல்வார்கள். மற்றவர்கள் அங்கே உடற்பயிற்சி செய்து தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதை கண்டு அவர்களுக்கும் உடற்பயிற்சி அல்லது விளையாட வேண்டும் என்ற ஆவல் வரும். நமது அரசாங்கம் திட்டமிட்டு வசதிகளை நடுவில் கட்டி இருப்பதால் நிறைய குடிமக்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று தூண்டும். அவர்கள் போல் அங்கு வந்த மற்றவர்களை காணும்போது நட்பு மலரலாம். சில சமயங்களில் குடும்பம் ஒன்றாக செல்லும்போது பெற்றோர்களுக்கு அல்லது பிள்ளைகளுக்கு அறிந்தவரின் குடும்பத்தை காணலாம். இதனால் இரு குடும்பங்களும் ஒருவருக்கு ஒருவருடன் நட்புகொள்வர். பெற்றோர்கள் அவர்களுடன் உரையாடி நட்பு கொள்வதோடு பிள்ளைகளும் அவ்வாறு செய்த நட்பு கொள்வார்கள். இவ்வாறு நிறைய குடும்பங்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகள் வழி நட்பு கொள்கின்றனர். இவ்வாறுதான் நம் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துகிறது. நமது அரசாங்கம் நமக்கு அமைத்திருக்கும் விளையாட்டு வசதிகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு நட்பையும் உருவாக்குகிறது. நிறைய மக்களின் கண்ணோட்டத்தில் இது அவ்வளவு முக்கியமின்றி காணப்படலாம், ஆனால் இதனால் வரும் நட்பும் நல்லிணக்கமும் எதிர்காலத்தில் நமக்கு பெரும் உதவியாக அமையலாம். "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற செயலுக்கு ஏற்ப, நாம் இந்த வசதிகளைப் பயன்படுத்தி நம் ஆரோக்கியத்துவதையும் தை நல்ல நட்புகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் நமக்கு படிப்பு அல்லது வேலையால் நேரம் இல்லாத போது நழுவ விட்ட இந்த வாய்ப்பை பற்றி எண்ணி வருந்த கூடாது. இதனால்தான் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்களை இன்னும் மகிழ்ச்சியாக வாழ விடுகின்றன என்று நம்புகிறேன்.

சிங்கப்பூரின் குடியிருப்பு பே ட்டை களில் உள்ள விளை யாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆர ோக்கியத்த ோடும் சமூக நல்லிணக்கத்த ோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரை க்க.

Janelle_ 205 -2021 சிங்கப்பூரில் குடியிருப்பு பே ட்டை களில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் மக்கள் ஆர ோக்கியத்த ோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். சிங்கப்பூரில் குடியிருப்பு பே ட்டை களில் பல வசதிகள் எல்லா வயதினருக்கும் உள்ளன. அதை மக்கள் தங்களுக்கு நே ரம் கிடை க்கும்ப ோதெ ல்லாம் உல்லாசமாக செ லவழிக்கும் இடங்கள் அவை . அவ்வசதிகள் உடல் ஆர ோக்கியத்தை யும் சமூக நல்லிணக்கத்தை யும் கண்டிப்பாக மே ம்படுத்துகின்றன. முதலாவதாக விளை யாட்டு மை தானங்கள் மற்றும் சிறு உடற்பயிற்சி செ ய்யும் இடங்கள். விளை யாட்டு மை தானத்தில் எந்த வயது சிறு பிள்ளை களும் எந்த இனம் மற்றும் மதமாக இருந்தாலும் கூடி சே ர்ந்து விளை யாடலாம். ஒருவர் ஒருவருடன் விளை யாடும்ப ோது அவர்கள் உரை யாடும் செ ய்வார்கள். இது பிள்ளை களுக்குள் சமூக நல்லிணக்கத்தை மே ம்படுத்தும். அதுமட்டுமல்லாமல் சிறு பிள்ளை களை பாதுகாத்துக்க ொள்ளும் பணிப்பெ ண்களும் விளை யாட்டு மை தானத்திற்கு வருகின்றனர். அவர்களும் ஒருவர் ஒருவருடன் உரை யாடிக்க ொண்டிருக்கும்ப ோது சமூக நல்லிணக்கம் வலுப்படும். மே லும் பிள்ளை கள் ஓடியாடி விளை யாடும்ப ோது அவர்கள் உடற்பயிற்சி செ ய்து உங்கள் உடலை ஆர ோக்கியமாகவும் வை த்துக்க ொள்கின்றனர். அதே ப ோல விளை யாட்டு மை தானத்திற்கு பக்கத்தில் ஒரு சிறு உடற்பயிற்சி செ ய்யும் இடம் இருக்கும். அங்கே யும் எந்த வயது, மதம், இன மக்களும் ப ோகலாம். அது மட்டுமல்லாமல் அவை உடலை ஆர ோக்கியமாக வை க்கவும் சமூக நல்லிணக்கத்தை யும் மே ம்படுத்துகின்றன. இரண்டாவதாக பூங்காக்கள். சிங்கப்பூரின் குடியிருப்பு வே ட்டை களில் பூங்காக்கள் பல இருக்கின்றன. பூக்களின் நறுமணமும் சிலுசிலுவெ ன்று அடிக்கும் காற்றும் மன உளை ச்சலை ப ோக்குகிறது, உல்லாசமாக நே ரம் செ லவழிக்கும் இடமாக இருக்கிறது. எவ்வித மக்களும் அவ்வசதியை பயன்படுத்தலாம். சில நே ரங்களில் பூங்காவுக்குள் பூப்பந்து மற்றும் கூடை ப்பந்து மற்றும் காற்பந்து விளை யாடும் இடங்கள் இருக்கும். அவற்றை விளை யாடுவது தவிர்த்து மக்கள் மெ துவ ோட்டம் செ ல்லலாம் மிதிவண்டி ஓட்டலாம் மற்றும் உடலை ஆர ோக்கியமாக வை த்துக்க ொள்வதற்குப் பற்பலவற்றை ச் செ ய்து மகிழலாம். மக்கள் தங்கள் குடும்பத்தினர ோடும் நண்பர்கள ோடும் கலந்துரை யாடி மகிழ்வது கண்டிப்பாக சமூக நல்லிணக்கத்துடன் வாழ உதவுகிறது. இவ்வாறு கலந்துரை யாடுவது மற்றவர்களை ப் புரிந்துக ொண்டு மதித்துச் செ யல்பட உதவி சமூக நல்லிணக்கத்தை யும் மே ம்படுத்தும். மூன்றாவதாக சமூக மன்றங்கள். சமூக மன்றங்களில் பல்வே று நிகழ்ச்சிகள் நடை பெ றும். இணை ப்பாட வகுப்புகள், விளை யாட்டு வகுப்புகள், உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் நடை பெ றும். மற்றவர்களுடன் கலந்துரை யாட விழாக்களும் ப ோட்டிகளும் நடை பெ றும். எல்ல ோருக்கும் தங்கள் அளவிற்கு ஏற்ப நிகழ்ச்சிகளும் இருக்கும். உடற்குறை வற்ற ோருடனும் உரை யாட பல விளை யாட்டுகள் நடை பெ றும். இவ்வாறு செ ய்வதால் தங்களை ப் ப ோல் இல்லாதவர்கள ோடும் வெ வ்வே று இன, மத மற்றும் வயதினர ோடு பே சி பழகி, உடற்குறை வற்ற ோரின் கஷ்டங்களை அறிந்துக ொண்டு அக்கறை காட்டி சமூக நல்லிணக்கம் மே ம்படுகிறது. அதுமட்டுமல்லாமல் எல்ல ோருக்கும் உடற்பயிற்சி அல்லது விளை யாட்டு வகுப்புகள் இருக்கும். உதாரணத்துக்கு முதியவர்களுக்கு ‘தை சீ’ வகுப்புகள் நடை பெ றும். இதன்மூலம் அவர்கள் மன உளை ச்சலை குறை த்து, நல்ல வழியிலும் அவர்கள் உடற்பயிற்சி செ ய்த தங்கள் நே ரத்தை செ லவழித்து உடலை ஆர ோக்கியமாக வை த்துக்க ொள்கிறார்கள். அதனால் சமூக மன்றமும் உடல் ஆர ோக்கியத்தை யும் சமூக நல்லிணக்கத்தை யும் மே ம்படுத்துகிறது. கடை சியாக நீச்சல் குளங்கள் ப ோன்ற விளை யாட்டு வசதிகள். நீச்சல் குளங்கள் பெ ரும்பாலான குடியிருப்பு பே ட்டை களில் இருக்கின்றன என்று நான் நினை க்கிறே ன். நீச்சல் அடிப்பதாலும் மன அழுத்தம் குறை ந்துவிடும் மற்றும் உடலுக்கு ஒரு நல்ல வழியில் உடற்பயிற்சி செ ய்து புத்துணர்ச்சி பெ றலாம். இது உடல் ஆர ோக்கியத்துடன் வாழ உதவுகிறது. பல மக்கள் நண்பர்கள ோடு நீச்சலடிக்க செ ல்வார்கள், புது மக்களை யும் சந்திப்பார்கள். பிள்ளை கள் பெ ரும்பாலான ோர் மற்றவர்களுடன் நீச்சல் குளத்தில் விளை யாடுவார்கள். அதனால் நீச்சல் குளமும் சமூக நல்லிணக்கத்தை மே ம்படுத்துகிறது. உடலை ஆர ோக்கியமாக வை த்துக் க ொள்வது மிக முக்கியமானது. உடல் ஆர ோக்கியமாக இருந்தால்தான் நாம் உடல்நலமில்லாமல் ப ோவதற்கான வாய்ப்புகள் குறை யும். விளை யாடுவதும் உடற்பயிற்சி செ ய்வதும் தவிர உடலை ஆர ோக்கியமாக வை த்துக்க ொள்வதற்கு பல வழிகள் இருக்கின்றன. உடலை ஆர ோக்கியமாக வை த்துக்க ொள்ளும்ப ோது நமக்கு மகிழ்ச்சி உண்டாகும். அதே ப ோல சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதும் மிக இன்றியமை யாததாகும். ‘கூடி வாழ்ந்தால் க ோடி நன்மை ’ என்ற பழம ொழிக்கு ஏற்ப நாம் சமூக நலத்துடன் வாழும்ப ோது நம்மால் பல நன்மை களை பெ றமுடியும். உதாரணத்திற்கு, நாட்டிற்கு எந்த தீங்கு வந்தாலும் சமூக நல்லிணக்கம் இருந்தால் எல்லாரும் ஒன்றிணை ந்து செ யல்பட முடியும், ஒருவருக்க ொருவர் பெ ரிய வாக்குவாதம் ஏற்படாமல் பார்த்துக்க ொள்ள முடியும், எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். உடல் ஆர ோக்கியமும் சமூக நல்லிணக்கமும் இவ்வளவு முக்கியமாக இருக்கிறப ோது சிங்கப்பூரிலுள்ள விளை யாட்டு வசதிகள் இவற்றிற்கு உதவுகின்றன. விளை யாட்டு மை தானம், சிறு உடற்பயிற்சி இடம், பூங்கா, சமூக மன்றம், நீச்சல் குளம் ப ோன்ற விளை யாட்டு வசதிகள் உடல் ஆர ோக்கியமாகவும் சமூக நல்லிணக்கத்த ோடும் வாழ உதவுகிறது. ஆதலால் நான் இந்த தலை ப்பை முழுமை யாக ஏற்றுக்க ொள்கிறே ன்.

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

பெயர்:சாரா தர்மராசு - 2021 சிங்கார சிங்கை என்னும் பூந்தோட்டத்திலே, நாட்டு மக்களான பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பரக்க சிங்கப்பூர் அரசாங்கம் பல திட்டங்களை அமுலாக்கம் செய்து வழி வகுக்கிறது. “பெற்ற தாயும் பிறந்த நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவை” என்ற கவிதைக்கு ஏற்ப சிங்கப்பூர் ஒரு சிறந்த அரசாங்கத்தைக் கொண்ட ஒரு சாலச்சிறந்த நாடு. ஆனால், அன்மையில் அது பல சவால்களை எதிர்நோக்கியுள்ளது. சிங்கப்பூர் ஒரு மூப்படையும் சமுதாயம் கொண்ட நாடு. இங்கு நிறைய வயதானவர்கள் இருப்பதால், நிறைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்டாயம் நம் அரசாங்கத்திற்கு உண்டு. அவர்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது மிகவும் முக்கியம். அது மட்டும் இல்லாமல், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சிங்கப்பூர்தான் ஆசியாவில் மிகச் சோர்வான நாடு என்று வெளியிடப்பட்டது. இதற்கு மேல், சிங்கப்பூரர்களுக்கிடையே நிறைய நபர்கள் நீரழிவு நோய் பிரச்சினையால் அல்லல்படுகின்றனர். இவ்வளவு சவால்களுக்கும் ஒரே தீர்வு, குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள்தான். சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரொக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவி புரிகிறது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த விளையாட்டு வசதிகள், அடுக்குமாடி வீடுகளுக்கு கீழே உள்ளதால், அதனை பயன்படுத்த வசதியாகவும் ஏதுவாகவும் உள்ளது. வயதானவர்கள் சுலபமாக இந்த விளையாட்டு வசதிகளை சென்றடையலாம். இந்த விளையாட்டு வசதிகள் எல்லா தலைமுறையினரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு விளையாட்டு மைதானம், பதின்ம வயதினருக்கு ஓடியாடி விளையால ஒரு திடல், பெற்றோர்களுக்கு அமர இருக்கைகள், மற்றும் முதியவர்களுக்கு உடற்பயிற்சி செய்யும் இடம் உள்ளது. அதனால், குடும்பத்துடனும் ஒன்றாகச் சேர்ந்து இந்த விளையாட்டு வசதிகளை உபயோகப்படுத்தலாம். இது குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவும் வழி வகுக்கிறது. இந்த பரபரப்பான காலக்கட்டத்தில் நாம் சமூக ஊடகங்கள் மூலம் குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தி மட்டும் அனுப்புகிறோம். ஆனால், இது போன்ற விளையாட்டு வசதிகள் மற்றும் பூங்காக்களில் நாம் நம்முடைய குடும்பத்தினரோடு மனம்விட்டுப் பேசினால் நம்முடைய மன உளைச்சலும் குறையும் உறவும் வலுவாகும். நம்முடைய மன உளைச்சல் குறைவதால் நம்முடைய மன ஆரோக்கியம் மேம்படுகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்ற பழமொழிக்கு ஏற்ப நோயில்லாம, சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால் அதற்கு ஈடாக எந்த செல்வமும் இல்லை. ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த நமது சிங்கப்பூர் அரசாங்கம் இந்த விளையாட்டு வசதிகளை அமைத்துள்ளது. அங்குள்ள உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். மருத்துவர்கள் வாரத்திற்கு இரண்டு முறையாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அதனால், அடிக்கடி உடற்பயிற்சி செய்வதற்கு இந்த வசதி அனுசரணையாக உள்ளது. இவ்வாறு உடற்பயிற்சி செய்வதால் பல அனுகூலங்கள் உள்ளன.அதாவது உடற்பயிற்சி நம் உடலை வலிமையாக வைத்துக்கொள்ளும். நம்முடைய தசைகளை அது வலுப்படுத்தும் மற்றும் இரத்தவோட்டத்தை அதிகரிக்கும். பெரும்பாலான சிங்கப்பூரர்கள் வேலையிடங்களில் பெருவாரியான நேரம் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். அதனால், அவர்கள் மிகவும் சோம்பேறியாக இருக்கிறார்கள். அவர்களைத் துடிப்புடன் வைத்துக்கொள்ளவும், எறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக்குவதற்கும் இந்த உடற்பயிற்சி வசதிகள் துணை புரிகின்றன. மேலும், இந்த கிருமித்தொற்று காலத்தினால் கூண்டில் மாட்டிக்கொண்ட சிட்டுக்குருவிகளைப் போல் நாம் வீட்டில் மாட்டிக்கொண்டோம். ஆனால், மாலை நேரங்களில் புதிய காற்றை சுவாசித்து மன நிம்மதியைப் பெற இந்த உடற்பயிற்சி வசதிகள் உதவுகின்றன. நாம் சற்று நேரம் உடற்பயிற்சி செய்வஉ நம்முடைய மன உளைச்சலை போக்கும் மற்றும் நம் வாழ்வை மெருகூட்டும். சற்று நேரம் நம் வேலைகளிலிருந்தும் பரபரப்பான வாழ்கை முறையிலிருந்தும் விடைபெற்று, நமக்கென நேரத்தை ஒருத்துக்கி உடற்பயிற்சி செய்தால் நமக்கு மனநிம்மது கிடைப்பதுடன் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவோம். அதனால், நம்முடைய மன ஆரோக்கியமும் மேம்படுகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நித்தமும் புது புது அலகாரங்களுடன் பவனி வரும் தொழில்நுட்ப சாதங்கள் பிள்ளைகளையும் இளையர்களையும் தன்வசம் ஈர்க்கிறது. அதனால், பெரும்பாலான நேரங்களில் அவர்கள் அச்சாதங்களையே பயன்டுத்துகிறார்கள். அவர்களை ஆட்டிப் படைக்கும் மந்திர சக்தியாக அது இயங்கி வருகிறது. அதனால், அவர்கள் நண்பர்களுடம் வெளியே செல்லாமல் வீட்டினுள்ளேயே ‘பப்ஜி' விளையாடுகிறார்கள். இது அவர்களுடைய கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும், அவர்கள் ஓடுகிற பாம்பை மிதிக்கும் வயதில் சுறுசுறுப்பாக இல்லாமல் இருக்கிறார்கள். இது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றது. மேலும், சிங்கப்பூரின் கல்வித் திட்டம் அவர்களுக்கு அதீத மன உளைச்சலைக் கொடுக்கிறது. ஒன்பது பாடங்களைக் கரைத்துக் குடிப்பதுடன், துணைப்பாட வகுப்பு, இணைப்பாட வகுப்பு என்று அவர்களுடைய வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறார்கள். இது அவர்களுடைய மன ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதுக்கின்றது. ‘சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியுமா?’ என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த பிஞ்சு வயதில் அவர்கள் படித்து படித்து ஆரோக்கியத்தைக் கெடுத்தால், அவர்கள் படிப்பதில் பயனில்லை. ‘காலை எழுந்ததும் படிப்பு. பின்பு கனிவு தரும் பாட்டு. மால முழுதும் விளையாட்டு' என்ற மகாகவி பாரதியார் மொழிந்தார். இதுதான் பிள்ளைகளுக்கு சரியான வாழ்க்கை முறை. ஆனால், அவர்கள் அதைக் கடைபிடிப்பதில்லை இதையெல்லாம் உணர்ந்த நமது சிங்கை அரசாங்கம் இளையர்களையும் பிள்ளைகளையும் ஈர்க்கும் வண்ணம் விளையாட்டு இடங்களை அமைத்துள்ளது. அதனால், பிள்ளைகள் ஆர்வத்துடன் சென்று விளையாடி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிப்பார்கள். விளையாடுவது மன நிம்மதியைக் கொடுப்பதுடன் மன சோர்வையும் குறைக்கும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பத்தில் வளையுமா?’ என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த சிறு வயதில் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால்தான் அவர்கள் வளர்ந்த பிறகும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த சிறு வயதிலேயே விளையாடி உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டால், அவர்கள் வாழ்நாள் முழுதவதும் அந்தப் பழக்கத்தைத் தொடர்வார்கள். அது மட்டும் இல்லாமல், பொதுவால இந்த விளையாட்டு வசதிகளுக்கு அருகே, அமர்ந்து மற்றவற்களுடன் உரையாடுவதற்கு இருக்கைகள் இருக்கும். அங்கு நிறைய மக்கள் அண்டைவீட்டாருடனும் நண்பர்களுடனும் மாறினாலும் நேரில் முகத்தைப் பார்த்து பேசுவதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வாறு பேசும்போது நம்முடைய பிரச்சினைகளையும் மனக்கஷ்டங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்வோம். நம்முள்ளையே பிரச்சினைகளை வைத்துக்கொள்ளாமல் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும்போது நம்முடைய மன உளைச்சல் குறையும். ‘நல்லிணக்கம் அல்லது அல்லற் படுத்தும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, நல்லிணக்கம் நம்முடைய வாழ்வின் மிக தலையாய அம்சம். சிங்கப்பூருடைய தனி சிறப்பே அது ஒரு பல இன, மத சமுதாயம் கொண்டதுதான். நான்கு இன மக்களும் சந்தோசமாகாவும் நிம்மதியாகவும் வாழும் ஒரு நாடு நம் நாடு. இதற்கு காரணம், இந்த நான்கு இனத்தினருக்கு இடையே உள்ள புரிந்துணர்வுதான். இந்தப் புரிந்துணர்வை ஏற்படுத்துவது விளையாடும் வசதிகளே ஆகும். பல இன மக்களும் ஒன்று சேரும் இடம் அது. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக்கு ஏற்ப, நாம் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது நம்முடைய வாழ்வை உன்னதமாக்குகிறது. நாம் அங்கு ஒன்று சேர்ந்து விளையாடுவதாலும் பேசுவதாலும் நமக்கிடையே உள்ள புரிந்துணர்வு அதிகரிக்கின்றது. நம்முடைய வேற்றுமைகளை உள்ள புரிந்துணர்வு அதிகரிக்கின்றது. நம்முடைய வேற்றுமைகளை மறந்து அவர்களுடன் நன்றாக அங்கே பேசி பழகுகிறோம். அது ஒரு பொது இடம் என்பதால், முன்பின் சந்திக்காதவர்களைக் கூட நாம் சந்தித்து பேசி தெரிந்துகொள்கிறோம். அதனால், அந்த வட்டாரத்தில் நமக்கு இன்னும் அதிகமான நண்பர்கள் கிடைப்பார்கள். இதனால், நம்மால் சமூக நல்லிணக்கத்துடன் வாழ இயலுகிறது. மேலும், அங்கு அமர்ந்து பேசும் வாய்ப்புகளும் நமக்கு கிடைப்பதால் நாம் அந்த வட்டாரத்தில் உள்ளவர்களிடம் பேச முயல்கிறது, பல உறவுகள் மலர்கிறது. பெரும்பாலான நேரங்களில் உடற்பயிற்சி செய்யும் இடமும் விளையாடும் இடமும் அருகில் இருக்கும். அதனால், வயதானவர்களும் சிறு பிள்ளைகளும் பழகுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதனால், தலைமுறை இடைவெளியும் குறைகிறது. அந்த விளையாட்டு வசதிகள் அமைந்திருக்கும் இடங்களில் உணவை பகிர்ந்து உட்கொள்கிறார்கல். உணவைப் பரிமாறும்ப்போது அவர்கள் அன்பையும் பரிமாறுகிறார்கள். நாம் அந்த வட்டாரத்தில் வசிப்பவர்களுடன் நெருங்கி பழகுவது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துகிறது. ‘ ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?’ என்றா பழமொழிக்கு ஏற்ப, தனிமனிதனாக வீட்டிலேயே இருக்கும்போது மகிழ்ந்து பேசலோ, பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவோ நண்பர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால், இதைப் போன்றா விளையாட்டு வசதிகளை பயன்படுத்தி மற்றவர்களுடன் நெருங்கி பழகும்போது ஒரு வட்டாரம் ஒரு ஆனந்தமான சமுதாயமாகிறது ஒரு குடும்பமாகிறது. ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்ற பாடல் போல் அந்த வட்டாரமும் சந்தோசமாகவும் ஒரு கூட்டு குடும்பம் போலவும் சமுக நல்லிணக்கத்துடன் இருக்கும். ஒரு ஆலமரத்தைப் போன்றுதான் இந்த விளையாட்டு வசதி. வித்தியாசமான கிளைகளான மக்கள் இருப்பார்கள், எல்லா கிளைகளும் வித்துயாசமான கிளைகளான மக்கள் இருப்பார்கள், எல்லா கிளைகளும் வித்தியாசமானவை. ஆனால், எல்லா கிளைகளும் சேர்ந்து ஒரு எழில்மிகு மரமாகிறது. இதில் அன்பு, பாசம், நட்பு, ஆரோக்கியம் என்று பல மலர்களும் பூக்கின்றன. ஒரு நீரோடையைப் போல் சலனமின்றி இருக்கும் வாழ்க்கையை, இது போன்ர விளையாட்டு வசதிகள் வானவில்லை போல் வண்ணமயமாக்கின்றன. இன்னும் பத்து இருபது ஆண்டுகள் நாம் இந்த வட்டாரத்தில் இருப்பவர்களுடன் ஆரோக்கியமாகவும் நல்லிணக்கத்துடனும், அன்பும் பாசமும் நிறைந்த வாழ்வை வாழ இந்த விளையாட்டு வசதிகள் துணை புரிகின்றன. அதனால், சிங்கார சிங்கையான பூந்தோட்டத்தில், சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளில், பட்டாம்பூச்சிகளான மக்கள் ஒற்றுமையாகவும் ஆரோக்கியத்துடனும் சிரகடித்துப் பறக்கின்றன.

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

ஷ்ரேஸ்டா சுரேஷ - 207 - 2021 “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று நாம் முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் எப்போதும் ஒரு சமுதாயத்தில் ஒன்றுகூடி வாழ்ந்தால்தான் நன்மைகளை அடைய முடியும். சமூகம் என்பது ஓர் இயந்திரம் போன்றது. இயந்திரத்தில் ஒரு பகுதி பாழைடைந்துவிட்டாலும் அல்லது நின்றுவிட்டாலும் இயந்திரத்தால் நன்றாக இயங்க முடியாது. அது போலவே சமூகத்தில் எல்லோரும் சண்டை சச்சரவு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தால்தான் சமுதாயமும் நன்கு இயங்கும். இதை ஒட்டியே நம் சிங்கப்பூர் அரசாங்கம் குடியிருப்பு பேட்டைகளை அமைத்துள்ளனர். வெவ்வேறு மக்களுக்கு நன்மை அடையும் வகையில் வசதிகளை ஆமைத்துள்ளனர். மேலும் இவை வெவ்வேறு மக்களை ஒன்றினணந்து வாழ வைக்கின்றது. சிங்கப்பூர் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணைக்கத்தோடும் வாழ எப்படி உதவியாக உள்ளது என்பதை இனிக்காண்போம். நமது வாழக்கையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். உடற்பயிற்சி செய்யும்போதுதான் நம்மால் சுறுசுறெப்பாக இயங்க முடியும். நமது சிங்கப்பூர் அரசாங்கம் எப்போதும் நமது நலனைக் கருதிதான் முடிவுகள் எடுக்கும். அதனால் அவர்கள் மக்களின் அத்தியவசமான உடற்பயிற்சியை செய்வதற்காக பல வசதிகளை அமைத்துள்ளனர். முதலாவதாக எல்லா சிங்கப்பூர் குடியிருப்பு பேட்டைகளில் குறைந்தது மூன்று விளையாட்டு கூடங்களாவது இருக்கும். இவை சிறுவர்களை ஈர்க்கும் வகையாக உள்ளன. இந்த விளையாட்டு கூடங்களில், சருக்கு, கல் ஏறுதல் (rock climbing) போன்ற விளையாட்டு வசதிகள் உள்ளன. இவை பிள்ளைகளை ஓடி ஆடு விளையாட செய்கின்றன. மேலும், இவ்விளையாட்டு கூடங்கள் குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகிலேயே உள்ளதால் அடிக்கடி வந்து நண்பர்களோடு விளையாட சிறுவர்கள் தவறுவதில்லை. “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்பதற்கு ஏற்ப, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை சுறுசுறுப்பாக விளையாட விளையாட்டு கூடங்கள் ஊக்குவிப்பதால், எப்போதும் சுறுசுற்ப்பாக இருக்கம் பழக்கத்தை அவர்களிடம் புகட்டுகிறது. சிறுவர்கள் மட்டும் ஓடி ஆடி விளையாடினால் போதாது. ஆடவர்களும் முதியோர்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நோய் வயதை பார்ப்பதில்லை. அதனால் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்வது இன்றிமையாததாகும். பெரியவர்களுக்கும் விளையாட்டு வசதிகள் உள்ளன. எல்லா குடியிருப்பு பேட்டைகளிலும், “ஆக்டிவ் ஸ் ஜூ” கூடங்கள் இருக்கின்றன. அவை ஆடவர்களுக்கு தகுந்த உடற்பயிற்சி வசதிகளை கொண்டுள்ளது. இவற்றில் உடற்பயிற்சி செய்வது இலவசம் என்பதால் தினமும் பல ஆடவர்கள் அங்கே உடற்பயிற்சி செய்வதை நாம் காணலாம். இவை குடியிருப்பு வட்டாரங்களுக்கு அருகிலேயே இருப்பதாலும் உடற்பயிற்சி செய்ய அதிக நேரம் வீண்டிப்பதைப் பற்றி ஆடவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மூத்தவர்களுக்கும் தனியாக பூங்காக்களில் விளையாட்டு வசதிகள் உள்ளன. இவை மூத்தவர்களுக்கு ஏற்றவாறு எளியமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உதவுகின்றன. மேலும் பூங்காக்களில் நிறைய மரங்ளும் செடிகளும் நடப்படுகின்றன. இது பூங்காவில் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவுகின்றது. இவற்றை தவிர்த்து, குடியிருப்பு பேட்டைகளில் ஆங்காங்கே பூப்பந்து கூடம், காற்பந்து திடல், கூடைப்பந்து கூடம் என பல அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை எல்லா வயதினரையும் பயன்படுத்துவதை காண்கிறோம். இவற்றில் பிள்ளைகள் மற்றும் இளைஞர்கள் கூடைப்பந்து, அல்லது காற்பந்து விளையாடுகிறார்கள். ஆடவர்கள் வந்து அங்கே மிதிவண்டி ஓட்டுவதையும் காணலாம். மேலும், அந்த இடத்தில் முதியோர்களுக்கு தாய்ச்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவை எல்லாம் எல்லா வயதினரும் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கின்றன. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதற்கு ஏற்ப, சிங்கப்பூர் மக்கள் அரசாங்கம் அமைத்துள்ள விளையாட்டு வசதுகளை பயன்படுத்தினால் தங்களின் ஊடலை சீராக வைத்துகொள்ள முடியும். சிங்கப்பூரில் பத்தில் மூன்று பேராவது உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகின்றது. இப்பிரச்சனையை தீர்க்க நமது அரசாங்கம் அயராது உழைக்கின்றது என்பதை குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் தெள்ளதெளிவாக காட்டுகின்றன. மக்களின் ஆரோக்கியத்தையும் நலத்தையும் விளையாட்டு பொருட்கள் மூலம் பாதுகாப்பத்தோடு அவை மக்களின் இடையே இருக்கும் பிணைப்பையும் வலுவாக்கிறது. சிங்கப்பூரில் பல இனத்தவர்கள் வாழ்கின்றன்ர். பல இனத்தவரை சேர்ந்த சமுதாயத்தில் நிச்சயமாக வெவ்வேறு விஷயங்களில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால் அதையும் மீறி சிங்கப்பூர் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். “இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யார்” என்பது திருக்குறள். அதற்கு ஏற்ப நமது வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒற்றுமையுடன் வாழ்ந்தால்தான் சண்டே சச்சரவு இல்லாமல் வாழலாம். இதை அடைய சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் உதவுகின்றன. குடியிருப்பு பேட்டைகளிலுள்ள வசதிகள் அனைத்தும் அங்கு வாழும் மக்களால் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. அதனால், ஒரே நேரத்தில் பலரும் ஒன்றுகூடி விளையாடி, உடற்பயிற்சி செய்து மகிழ விளையாட்டு வசதிகள் உதவுகின்றன. விளையாட்டு கூடங்களில், பல இனத்தவரை சேர்ந்த சிறுவர்கள் வந்து ஒன்றாக விளையாடுகிறார்கள். இது சிறுவயதிலிருந்தே சிறுவர்களுக்கு மற்ற இன நண்பர்களை வைத்துக்கொள்ள ஊக்குவிக்கிறது . மேலும் விளையாட்டு கூடங்களிலுள்ள வசதிகளை சிறுவர்ள் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதனால் இது சிறுவர்களிடம் எதையும் மற்றவர்களோடு பகிர்ந்துகொண்டு ஒன்றினைந்து வாழ்வதைப்பற்றி கற்றுக்கொடுக்கிறது. முதுமை காலத்தில், முதியவர்கள் தனிமையில் வீட்டிலேயே இருப்பார்கள். இதை தவிர்ப்பதற்குதான் மூத்தவர்ளுக்கும் விளையாட்டு வசதிகள் உள்ளன. அங்கே மற்ற முதியவர்களைக் காணும்போது அவர்களும் நட்பு கொள்கின்றனர். “முகநக நட்பது நட்பென்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்ற திருக்குறளுக்கு ஏற்ப மனதால் நேசித்தால் எந்த வயதிலும் நட்பு கொள்ளலாம். மேலும் விளையாட்டு வசதிகளில் மற்ற முதியவர்கள் துடிப்புடன் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து அவர்களுக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகின்றது. மேலும், முதியவர்களுக்கான விளையாட்டு பகுதியில் அங்கிருக்கும் வசதிகளை பயன்படுத்தி எவ்வாறு உடற்பயிற்சி செய்வது என்ற வழிமுறைகளை தமிழ், மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் எழுதியிருப்பார்கள். இது வெவ்வேறு இனத்தவர்கள் வந்து உடற்பயிற்சிகளைச் செய்ய ஊக்குவிக்கின்றது. வேறு இனத்தவரை சேர்ந்த முதியவர்கள் ஒன்றாக உடற்பயிற்சி செய்ய செல்வதை நாமும் நாள்தோறும் சமூதாயத்திலும் செய்திகளிலும் காண்கிறோம். வெவ்வேறு இனத்தவர்களை சேர்ந்தவர்களை ஒன்றுகூடி வாழ வைப்பதோடு, சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் பல வயதினரையும் ஒன்றிணைக்கிறது. ஒரே இடத்தில், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு கூடங்கள் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் ஒரே நேரத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக பொழுதைக் கழிக்கின்றனர். குடும்பங்களாக வந்து விளையாட்டு வசதிகளை பயன்படுத்த ஊக்குவிக்கின்றது. குடும்பங்களாக வந்து இவ்விளையாட்டு வசதிகளை பயன்படுத்தும்போது, குடும்பங்களிடையே நல்லுறவு ஏற்படுகின்றது. அண்டைவீட்டாருடன் இருக்கும் உறவை மேம்படுத்துகிறது. இவை எல்லாம் சமூக நல்லினக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது நம் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு துணைபுரியும். ஒன்றிணைந்த சமூதாயம் இருக்கும்போது நாடும் சீராக இயங்கும். ஆனால் சிங்கப்பூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள வசதிகளை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. பரபரப்பு மிகுந்துவிட்ட வாழ்க்கை சூழலில் எல்லோரும் தங்களின் வேலைகளில் மும்மரமாக இருக்கின்றனர். பிள்ளைகள் பள்ளி வேலையினாலும் துணைப்பாடத்திறாலும் மற்ற பிள்ளைகளோடு விளையாட நேரம் இருப்பதில்லை. பெற்றோர்க்கும் அலுவலக வேலையுடன் இருக்கிறார்கள். வேலைக்கும் வீட்டிற்கும் செல்வதற்கே நேரம் உள்ளது.”நேரம் பொன் போன்றது” என்று கூறிவிட்டு எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மட்டுமே. வார இறுதி நாட்களின்போது, குடும்த்தோடு மற்றும் நண்பர்களோடு குதூகலமாக விளையாட்டு வசதிகளை பயன்படுத்தி நேரத்தை கழிக்கின்றனர். மேலும் இக்காலக்கட்டத்தில், உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் அதிக விழிப்புணர்வு இருப்பதால் பலர் விடுமுறைகளில் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு சிங்கப்பூரின் குடிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளை பயன்கடுத்துகிறார்கள். நேரம் கிடைக்கும்கோது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலர் அண்டைவீட்டார்களிடனும் நண்பர்களுடனும் அடிக்கடி சந்தித்து விளையாடுவதையும் காண்கிறோம். “சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்” என்பதை நம் முனைனோர்கள் குறியுள்ளனர். அதற்கு ஏற்ப, சமூதாயத்தில் வாழும் மக்கள் தானாகவே ஆரோக்கியத்தோடு பிறருடன் ஒன்றிணைந்து வாழ மாட்டார்கள். அவர்கள் குடியிருக்கும் இடம், அவர்களை ஒன்றுப்படுத்தும் வகையாக இருக்க வேண்டும். இதை அறிந்த நமது சிங்களப்பூர் அரசாங்கம் விளையாட்டு வசதிகளின் மூலம் மக்களை ஆரோக்கியத்தை கடைப்பிடிக்கவும் சமூக நல்லிணக்கத்தோடு வாழவும் ஊக்குவிக்கின்றது. இவை சமுதாயத்தை வலிமைப்படுத்தி, சந்தோஷமான வாழ்க்கையை சிங்கப்பூர் மக்களுக்கு அமைத்துக் கொடுக்கின்றது.

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க

தமிழினி மகேந்திரன் 206 - 2021 உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாத ஒன்று என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதே நேரத்தில், சமூக நல்லிணக்கமும் வாழ்க்கைக்கும் சமூகத்துக்கும் மிக முக்கியமானது. உடல் நோயில்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் சமூகத்தில் நன்கு இயங்க முடியும். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். அதேப்போல சமூக நல்லிணக்கமும் இருந்தால்தான் சமூகம் சீரும் சிறப்புமாகயிருக்கும். நாடு முன்னேற்றம் அடையும். இதை உணர்ந்துள்ள சிங்கையின் அரசாங்கம், மக்களின் உடல் ஆரோக்கியத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்த குடியிருப்புப் பேட்டைகளில் விளையாட்டு வசதிகளை அமைத்துள்ளது. எனவே, சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன என்னும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். எவ்வாறு இவ்வசதிகள் உதவியாக உள்ளன என்பதை இனிக்காண்போம். சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். பிள்ளைகள் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கு சறுக்கும் பந்து விளையாட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்ற விளையாட்டுகளைப் பலர் சேர்ந்து விளையாடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளி முடிந்த பின்பு கூடைப்பந்தாட்டம் விளையாடுவதை ஒவ்வொரு நாளும் குடியிருப்புப் பேட்டைகளில் பார்க்கலாம். வேலை முடிந்த பின்பு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக விளையாட்டு வசதிகளை மாலையில் பயன்படுத்த பலர் வருவதையும் அடிக்கடி பார்க்கலாம். விளையாடி முடித்த பின்பு மெதுவோட்டப் பாதை போன்ற மற்ற வசதிகளை அவர்கள் பயன்படுத்துவதையும் காணலாம். இறுதியாக, முதியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி மகிழவும் உடல் நலம் குன்றாமல் இருப்பதற்கு விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துவதையும் காண முடியும். ஆகவே, இதன்வழி இவ்வசதிகள் மக்களின் உடல் நலத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் முக்கியமானவை என்பதை உணர முடிகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பொன்மொழிக்கு ஏற்ப நல்ல உடல்நலத்துடன் இருப்பது மிக முக்கியமான ஒன்று. வலுவான உடலுடன் இருந்தால்தான் பல்லாண்டுகளுக்கு நன்றாக வாழ்ந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியும். முக்கியமாக, பல ஆண்டுகளாக ஒய்வு ஒழிச்சலின்றி உழைத்துள்ள மூத்தோர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே அவர்களுடைய உழைப்பினால் சேர்த்துள்ள பணத்தை அனுபவிக்க முடியும். உடல்நலம் நன்றாக இல்லை எனில் வாழ்க்கையை மருத்துவமனையிலேயேக் கழித்துவிட வேண்டியதாகயிருக்கும். அதே நேரத்தில், மற்ற வயதினருக்கும் உடல் ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்று. ஆனால் இப்பரபரப்பு மிகுந்த வாழ்க்கைச் சூழலால் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. தினமும் விரைவு உணவையும் நொறுக்குத் தீனிகளையும் பலர் உண்பதால் சிங்கையில் பலருக்கு உடல் பருமன் அதிகமாக உள்ளது. ஆனால், வாழும் இடத்திற்குப் பக்கத்திலையே விளையாட்டு வசதிகள் உள்ளதால் பலர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். எனவே உடல் பருமன் அதிகம் உள்ளோரும் வாழ்க்கை முறைகளை மாற்றி அமைத்து உடலை வலுவாக்க இவ்வசதிகளைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் உடல் நலத்தை மேம்படுத்துவதோடு மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஏனெனில், உடற்பயிற்சி செய்வது நம்முடைய தசைகள் மற்றும் கைகள் முதலியவற்றை வலுவாக்கி புத்துணர்ச்சியையும் கொடுக்கும். மன உளைச்சலில்லாமல் ஆனந்தத்துடன் வாழ வழி வகுக்கும். மேலும், கூடைப்பந்து போன்ற விளையாட்டு வசதிகளில் விளையாடுகையில் இருதய நோய் போன்ற நோய்கள் வராமல் இருக்கும். உடற்பயிற்சி நம்மை நன்கு தூங்கவும் அனுமதிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர் உடற்பயிற்சி செய்தாலே அவர்களது பிரச்சினைக்குத் தீர்வு கண்டு சமூதாயத்தில் நன்கு இயங்க முடியும். ஆகவே, இவ்விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ உதவியாக உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”என்னும் பொன்மொழிக்கு ஏற்ப மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் கூடி வாழ்ந்தால் மட்டுமே சமுதாயம் மேம்படும். அனைவரும் ஒன்றாக வேலைச் செய்து சிங்கையை சிறந்த நிலைக்குக் கொண்டு போக இயலும். ஒற்றுமையின்மை நிலவினால் எவராலும் மகிழ்ச்சியுடன் வாழ முடியாது. இது போன்ற பிரச்சினையைத் தடுக்க அரசாங்கம் எண்ணற்ற முயற்சிகளை எடுத்துள்ளது. குடியிருப்புப் பேட்டைகளில் விளையாட்டு வசதிகள் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதே ஆகும். ஆகவே, பல இனத்தவர்கள் ஒன்று சேர்ந்து மகிழும் இடமாக இவ்விளையாட்டு வசதிகள் அமைந்துள்ளன. சிறு பிள்ளைகள் இனம், மதம் ஆகியவற்றையெல்லாம் கருதாமல் சறுக்குப் போன்ற விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துகையில் மற்றோருடன் நட்புக் கொள்கின்றனர். தங்கள் நண்பர்களுடன் ஓடி ஆடி மகிழ்கின்றனர். இத்தகைய நட்புகள் வாழ்க்கை முழுவதும் நீடிக்க அதிக வாய்ப்புண்டு. இத்தகைய நட்புகளின் வழி விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தும்போது உதவும் மனப்பான்மையின் முக்கியத்துவம், விட்டுக்கொடுத்து விளையாடும் மனப்பான்மையின் முக்கியத்துவம் போன்றவற்றைப் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான விழுமியங்களையும் கற்றுக்கொள்கின்றனர். பெரியோர்களும் வேலை முடிந்த பிறகு பூப்பந்தாட்ட விளையாட்டு வசதி போன்றவற்றை சக ஊழியர்களுடனோ நண்பர்களுடனோ பயன்படுத்தி ஆனந்தம் அடைவது மட்டுமில்லாமல் நன்மையும் பெறுகின்றனர். இறுதியாக, முதியோர் விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்தும் நேரத்தை அவர்களுடைய நண்பர்களுடனோ மற்ற முதியவர்களுடனோ பேசுவதற்காகவும் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் மற்ற இன முதியோர்களும் நல்ல பிணைப்பையும் உறவையும் உருவாக்கி மகிழ்கின்றனர். “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்னும் பொன்மொழிக்கு ஏற்ப இவ்வசதிகளின் வழி எல்லா வயதினரும் ஒற்றுமையுடன் சிறந்த வாழ்க்கையை வாழ முடிகிறது. சிங்கையின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகளைப் பயன்படுத்துவதன் மூலம் மக்கள் எண்ணற்ற பயன்களை தினமும் அடைகின்றனர். முக்கியமாக, உடல் நலம் குன்றாமலும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கும் இவ்வசதிகள் பெரும் பங்கை ஆற்றுகின்றன. மக்களின் வாழ்வுகளும் இவ்வசதிகளினால் மேம்பட்டுள்ளன.எனவே,சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள் மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன என்னும் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

சிங்கப்பூரின் குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளன. கருத்துரைக்க.

சுசித்தா.ம - 2021 கோயில் கோபுரத்திலுள்ள எழில் மிக்க கலசத்தை மட்டுமே மக்களான நாம் எப்பொழுதும் ரசிக்கிறோம். அதன் அருமையையும் பெருமையையும் போற்றிப் பாடுகிறோம், வியப்பில் ஆழ்கிறோம். ஆனால் அக்கலசம் நூறடி உயரத்தில் உயர்ந்து, கம்பீரமாக நிற்கக் காரணமான தூண்களை அறவே மறந்துவிடுகிறோம். இத்தூண்களே கோயிலின் எடையை தாங்கி, அதை உயர்த்தி காட்டுகின்றன. அதைப் போலவே, மக்களாகிய நாம், உடல் ஆரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ, அடிப்படை காரணமாக அமைவது நமது குடியிருப்புப் பேட்டைகளிலுள்ள வசதிகளே என்பதை அடிக்கடி உணர தவறுகிறோம். சிங்கப்பூரில் இத்தகைய வசதிகள், குறிப்பாக விளையாட்டு வசதிகள், உதவியாக இருக்கின்றனவா என்று வினவினால், ஆம் என்றே நான் கூறுவேன். சிறு மீன் பிடி கிராமமாக இருந்த ஊரை, உலகே திரும்பி பார்க்குமாறு நம் அரசங்கம் அதை மாற்றியுள்ளது. அப்போதெல்லாம் குடிசை வீடுகள் மட்டுமே அனைத்து இடங்களிலும் தென்பட்டன, ஆனால், இப்போது அடுக்குமாடி கட்டடங்களையும் தாண்டி குடியிருப்பு பேட்டைகளில் விளையாட்டு வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தீட்டாத வைரத்தை தோண்டி, தீட்டி பளபளக்க செய்வது போல நமது குடியிருப்பு பேட்டைகளை விளையாட்டு திடல்கள், அடுக்குமாடி கீழ்த்தளத்தில் விளையாட்டு மேசைகள், பூங்காக்கள் போன்றவற்றால் செழிப்புற செய்துள்ளது. இவை மக்களின் ஆரோக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் நிச்சயம் மேம்படுத்துகின்றன. முதலில், விளையாட்டு திடல்கள். சிங்கப்பூர் குடியிருப்புப் பேட்டைகளில், பூப்பந்து திடல்களையும் வலைப்பந்து திடல்களையும் காண்பது அதிசயமல்ல. அவை அமைக்கப்பட்டது மட்டுமின்றி, வசதியாக பல குடியிருப்பு கட்டடங்களின் மத்தியில் பலருக்கும் சொந்தமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு மக்கள் கூடி விளையாடுமிடமாக இவை திகழ்கின்றன. “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடின் தாழ்வு" என்பது பழமொழி. அதற்கேற்ப இவ்வசதிகள் மக்களை ஒன்று திரட்டி பழக அனுமதி தருவன. ஒருவருக்கு ஒருவர் இணைந்து விளையாடுகையில் தங்களது ஆனந்தத்தையும் உவகையையும் பகிர்ந்து கொள்கின்றனர். இது ஐயமின்றி சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும். விளையாட்டுகள் மக்களை இணைக்க கூடியவை. அது மட்டுமல்லாது, அவை உடல் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. “ஆரோக்கிய வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பார்கள். தற்போதைய பரபரப்பான சூழலில் சிங்கப்பூர் மக்களுக்கு உடற்பயிற்சி செய்ய நேரமே கிட்டுவதில்லை. சிங்கபூரில் சராசரி பணியாளருக்கு வேலை நேரம் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை தான். ஆனால் பேரங்காடியில் வேலை செய்யும் துப்புரவாளரிலிருந்து பெரும் நிறுவனங்களுக்கு முதலாளியாக இருப்பவர்கள் வரை அனைவரும் இதைவிட அதிக நேரம் பணி புரிகிறார்கள். ஆனால், நாளைக்கு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி அவசியம் என்பதால், எளிதில் அடைய கூடிய தூரத்தில் அமைந்திருக்கும் இவ்விளையாட்டு திடங்கள் மக்களுக்கு ஊக்குவிப்பை அளிக்கின்றன. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய இயலும்? ஆக உடற்பயிற்சி பெற்று புத்துணர்ச்சி பெறுவது இன்றியமையாததாகும். பூப்பந்து மற்றும் வலை பந்து போன்ற விளையாட்டுகளை விளையாட அமைந்திருக்கும் இவ்வசதிகள் இதற்கு வழி வகுக்கின்றன. அடுத்தது, அடுக்குமாடி கீழ்தளங்களில் அமைந்திருக்கும் மேசை விளையாட்டுகள். இவை மேசை மேல் அமைந்திருக்கும் தாய விளையாட்டுகள். இது நல்லிணக்கத்தை தூண்டுவதற்கு செழிப்பான விளையாட்டு வசதியாக அமைகின்றது. ஏனெனில், இதை இரண்டுக்கு மேற்பட்டோரால் தான் விளையாட இயலும். ஆக, அடுக்குமாடி கட்டடங்களில் வாழ்பவர்கள் இங்கே ஒருவரோடு ஒருவர் பழகலாம். குறிப்பாக முதியோர்கள், வீட்டில் துணையின்றி இருக்கையில் இங்கு வந்து சகவயதினரோடு பழகும் பொழுது வயதான காலத்தில் நெருங்கிய நண்பர்களை உண்டாக்கி கொள்வார்கள். “நவில்தோறும் நூல் நயம் போலும் பயில்தோறும் பண்புடையாளர் தொடர்பு" என்பது அன்புமிகு வள்ளுவரின் குறள். அதாவது, படிக்க படிக்க இன்பமளிக்கும் நூல்களை போல, நல்லோருடன் பழக பழக அன்னட்பானது இனிக்கும். இவ்வாறு சேர்ந்து விளையாடுபவர்களிடேயே சமூக நல்லிணக்கம் அதிக வலு பெற்று அழகிய நட்பாக மலர்கிறது. இவர்கள் ஒரு படி மேலே சென்று, துன்பத்தில் தோள் நண்பர்களாகின்றனர். பண உதவி, மன உதவி ஆகியவற்றையெல்லாம் புரியும் நகமும் சதையும் போன்ற நண்பர்களாகின்றனர். அது மட்டுமல்லாது, தனிமையாக இருப்பதை விடுத்து சமூகத்தில் வாழும் மற்றவர்களோடு பழகுகையில் உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. ஏன்? ஏனென்றால், ஒருவரோடு ஒருவர் பழகி சமூக தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளும் போது, நாம் கவலைகளை மறந்துவிட்டு சிரிக்கின்றோம், உல்லாச வானில் சிறகடித்து பறக்கின்றோம். “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்" என்பார்கள். சிரிப்பதென்பது நம் இரத்த ஓட்டத்தை சீர் படுத்துவதால், நாம் உடல் ஆரோக்கியத்தை பெறுகின்றோம் என்பது நிதர்சனமான உண்மையாகும். அடுத்து, பூங்காக்கள். சிங்கப்பூர் குடியிருப்புப் பேட்டைகளில் அநேக பூங்காக்கள் அமைந்துள்ளன. இவை இயற்கை நிறைந்த, பச்சை பசேல் இடங்களாகவும் இருப்பதால், தூய காற்று மிக்க இடங்களாக உள்ளன. இங்கு ஊஞ்சல்கள் போன்ற விளையாட்டு வசதிகளுண்டு. அங்கு இருக்கையில் தூய காற்றையும் இயற்கையின் வனப்பையும் ரசிக்கும் வாய்ப்பு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த துணை புரிகிறது. இங்குள்ள ஊஞ்சல்கள் சமீபத்தில் நான்கு பேர் எதிர் எதிரே அமரும் ஊஞ்சல்களாக மாற்றி அமைக்கபட்டுள்ளன. ஆக, சிறுவர்கள் மட்டுமின்றி வெவ்வேறு குடும்பங்களைச் சார்ந்த ஆடவர்களும் அமரலாம். இது சமூக நல்லிணக்கத்தை நிச்சயம் மேம்படுத்தும். அல்லும் பகலும் செருப்பாய் அயராது உழைக்கும் நடு வயதினருக்கு ஒய்வெடுக்கவும் இது சிறந்த வாய்ப்பு. “பணம் பத்தும் செய்யும்” என்பது உண்மை தான். அதற்காக இவர்களின் வாழ்க்கை அதையே சுற்றி இருக்க இயலுமா? மக்கள் தொடர்பு வேண்டாமா? “பணம் இல்லாதவன் பிணம்” என்பது போல உறவுகள் இல்லாதவனும் அனாதை ஆவான். ஆகையால், வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக குடியிருப்பு பேட்டைகளில் அமைந்துள்ள இவ்விளையாட்டு வசதிகள் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, சமூக நல்லிணக்கத்தை உண்டாக்க உதவுகின்றன. “ஆடி அடங்கும் வாழ்கையடா, அறடி நிலமே சொந்தமடா.” நாம் உண்மையில் சம்பாதிக்க வேண்டியது பொன்னோ பொருளோ அல்ல, உறவுகளையும் நல்லிணக்கத்தையும். அதற்கு புதுமையாக அமைக்கப்பட்ட இப்பூங்கா விளையாட்டு வசதிகள் பெரும் வகையில் வழி வகுக்கின்றன. சுருக்கமாக, சிங்கபூரின் குடியிருப்பு பேட்டைகளில் உள்ள விளையாட்டு வசதிகள், மக்கள் உடல் அரோக்கியத்தோடும் சமூக நல்லிணக்கத்தோடும் வாழ உதவியாக உள்ளனவா என்றால், நான் ஆணித்தரமாக ஒப்புக்கொள்கிறேன். சிங்கப்பூரில் அமைந்துள்ள வசதிகள் தொலை நோக்கு சிந்தனையோடும் புத்தாக்க சிந்தனையோடும் ஆரோக்கியம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை உண்டாக்க அமைக்கப்பட்டுள்ளன. தாமரை மலரின் காம்பு எவ்வளவு நீளமோ, அதன் அளவே அது மேலோங்கி நிற்கும். அது போல, மக்களது ஆரோக்கியமும் நல்லிணக்கமும் எவ்வளவோ, அவ்வளவே அவர்களது வாழ்கையின் இன்பம் மற்றும் அனுபவம்.

Saturday, November 13, 2021

எந்த நிகழ்வுக்கும் காலதாமதமாகச் செல்லும் பழக்கம் உன்னிடமிருந்தது. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தால் அப்பழக்கத்தை நீ மாற்றிக்கொண்டு விட்டாய். அந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளோடும் உணர்வுகளோடும் விளக்கி எழுதுக - சிவமுத்து நிகித வர்ஷினி (303) 2021

சிவமுத்து நிகித வர்ஷினி (303) 2021 'ரிங்! ரிங்!' என்ற ஒலி என்னை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுப்பியது. ஒரு நொடிக் கூட தாமதிக்காமல் நான் துயில் எழுந்து பள்ளிக்குக் கிளம்பத் தொடங்கினேன். சில வாரங்களுக்கு முன் நேர்ந்த சம்பவம் என் வாழ்வைப் புரட்டிப் போட்டதோடு, என்னை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியிருப்பதை உணர்ந்து வியந்தேன். என் எண்ண அலைகள் பின்னோக்கிச் சென்றன… அன்று என் பாட்டியின் எழுபதாவது பிறந்தநாள் விழா ஆரவாரத்துடன் நடைபெறவிருந்தது. என் அப்பா என்னிடம் விழாவிற்கு மாலை ஆறு மணிக்கு வரச் சொன்னார். நானோ 'எதற்குப் பாட்டியின் பிறந்தநாளுக்கு அவ்வளவு சீக்கிரமாகப் போக வேண்டும்’ என்று எண்ணினேன். ஆகையால், நான் கணினி விளையாட்டுகளை ஆசைதீர விளையாடிவிட்டு, காலதாமதமாக மாலை எட்டு மணிக்குப் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றேன். அங்கு என் பெற்றோர் கோவைப் போல் சிவந்த முகத்துடன் எனக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களின் கண்கள் கோபக் கனல்கள் வீசின. நான் மௌனமாக என் பாட்டியிடம் சென்று பிறந்தநாள் வாழ்த்துக் கூறினேன். எப்பொழுதும் சூரியனைக் கண்டத் தாமரையைப் போல் மலர்ந்திருக்கும் என் பாட்டியின் முகம் வாட்டமாக இருந்தது. என் பாட்டியின் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்தன. என் பாட்டி தன் கண்களைத் துடைத்துவிட்டு, ஒரே வார்த்தையில் 'நன்றி' என்று கூறிவிட்டார். என் அப்பா என்னிடம் வந்து, “மாரா! நீ காலதாமதமாக வந்து பாட்டியின் மனதைக் காயப்படுத்திவிட்டாய். உன் பாட்டி எவ்வளவு ஆவலுடன் உனக்காக காத்திருந்தார் தெரியுமா? நீயோ கேக் வெட்டிய பிறகு ஆடி அசைந்து வருகிறாய். எல்லா நிகழ்வுகளுக்கும் காலதாமதமாகச் செல்லும் உன் பழக்கம் ஒரு நாள் உன்னையே அழித்துவிடும்!” என்று கூறினார். என் அப்பா நான் தாமதமாக வந்ததற்காக ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என்று எனக்கு அப்பொழுது புரியவில்லை. அதே வாரத்தில், என் நண்பர்களைக் குழு ஒப்படைப்பைச் செய்ய சனிக்கிழமை காலை பத்து மணிக்குச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், நான் நண்பர்கள் தானே என்ற மெத்தன சிந்தனையினால், விடுமுறை என்பதால் அதிக நேரம் தூங்கிவிட்டு, ஆமை வேகத்தில் நண்பர்களைக் காணச் சென்றேன். நான் என் நண்பர்கள் கூடியிருந்த நூலகத்தை அடையும்போது மணி பதினொன்று. என் நண்பர்கள் அதிக எரிச்சலுடன் காணப்பட்டனர். அவர்களின் முகத்தில் ஒரு துளி மகிழ்ச்சிகூட இல்லை. என் நண்பன், மாதவன், “மாரா, நாங்கள் அனைவரும் உனக்காக ஒரு மணி நேரமாக காத்துக்கொண்டிருக்கிறோம். உனக்கு ‘காலம் பொன் போன்றது’ என்று தெரியாமல் இருக்கலாம், ஆனால் எங்கள் அனைவருக்கும் தெரியும்.” என்று எண்ணெய்யில் போட்ட கடுகைப்போல் வெடித்தேன். நான் அவனிடம், “காலதாமதமாக வருவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? கோபம் உடம்பிற்கு நல்லதில்லை மாதவா.” என்று பதிலளித்தேன். பின்னர் என் நண்பர்களுடன் குழு ஒப்படைப்பைத் தொடங்கி, மாலை நான்கு மணிக்குதான் ஒப்படைப்பை முடித்தோம். என் நண்பர்கள் அந்நேரம் முழுவதும் ஒரு தருணத்தில் கூட என்னிடம் முக மலர்ச்சியுடன் பேசவில்லை. ஆனால், நான் இச்சம்பவத்தை ஒரு பொருட்டாக கருதவில்லை. பின்னர், என் அத்தை அவரின் வீட்டிற்கு என் குடும்பத்தினரை இரவு ஏழு மணிக்கு விருந்திற்காக அழைத்திருந்தார். நான் என் அத்தை வீடுதானே என்று எண்ணி, மெதுவாக கிளம்பி, அவர் வீட்டை இரவு எட்டு மணிக்கு அடைந்தேன். அங்கு என் அத்தை தட்டுகளையெல்லாம் கழுவ தொடங்கிவிட்டார். ஆனால், எனக்கென்று ஒரு தட்டில் உணவை வைத்திருந்தார். என் அத்தையின் முகம் கோபமும் வட்டமும் கலந்த கலவையாக இருந்தது. அவர், “மாரா, நான் உனக்காக உணவு எடுத்து வைத்துள்ளேன். ஆனால், நீயோ என் அழைப்புக்கு மரியாதை கொடுக்காமல், இவ்வளவு தாமதமாக வருகிறாய். இன்னும் காலதாமதமாக எல்லா இடங்களுக்கும் செல்லும் பேய்க்குணம் உன்னிடம் உள்ளதே!” என்று வருந்தினார். நான் உணவு கிடைத்தால் போதும் என்று என் அத்தையின் வார்த்தைகளைச் செவிமடுக்கவில்லை. அன்று எப்பொழுதும் போல் பள்ளிக்குச் செல்ல தாமதமாக ஏழு மணிக்கு கண் விழித்தேன். பள்ளி ஏழு பதினைந்திற்குத் தொடங்கியது. அப்போதுதான் எனக்கு ஒன்று நியாபகத்திற்கு வந்தது. என் முகம் வெளிறிப்போனது. என் இதயம் 'டப் டப்' என்று அதிவேகமாக துடித்தது. என் கைகள் வெடவெடக்க ஆரம்பித்தன. என்னிடம் எப்போதும் காலதாமதமாகப் பள்ளிக்குச் செல்லும் பழக்கம் இருந்ததால், அன்று ஏழு மணிக்குத் தொடங்கிய தேசிய நிலையிலான பரிச்சை நடைபெறுவதையே மறந்துவிட்டேன். நான் மின்னல் வேகத்தில் தயாராகிய பிறகு பள்ளிக்கு ஓடிச் சென்றேன். என் பெற்றோர் காலையில் நேரத்திற்கு வேலைக்குச் சென்றுவிட்டதால், என்னால் அவர்களிடம் உதவி கேட்க இயலவில்லை. நான் என் நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளைத் துடைத்தவாறு, ஓடியதினால் கலைந்த சீருடையுடன் என் ஆசிரியரின் முன் நின்றேன்.அவர் என்னை பார்த்து முகம் சுழித்தவாறு, “மாரா! எத்தனை முறை உன்னிடம் எல்லா நிகழ்வுகளுக்கும் காலதாமதமாகச் செல்லும் பழக்கத்தை மாற்றிக்கொள் என்று அறிவுரை கூறியுள்ளேன். இப்பொழுது உன் நிலையைப் பார்! காலதாமதமாக வருபவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க இயலாது. இதுதான் உன் மதிப்பெண்!” என்று காது கிழியும் அளவிற்கு சத்தமிட்டு, பூஜியம் என்று எழுதப்பட்டிருந்த தாளை என்னிடம் நீட்டினார். ஒரு கணம் என் இதயம் நின்றுவிட்டது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. துக்கம் என் தொண்டையை அடைத்தது. என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. என் மீது இடி விழுந்ததைப் போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. என் எதிர்காலத்தை நானே அழித்துவிட்டேன் என்று உணர்ந்தபோது என் கண்கள் அகல விரிந்தன. அன்றுதான் நான் ‘மணியோசை வரும் முன்னே, யானை வரும் பின்னே’ என்பதற்கான அர்த்தத்தை உணர்ந்தேன். எத்தனை பேர் காலதாமதமாக எல்லா நிகழ்வுகளுக்கும் செல்லும் பழக்கத்தை ஒழிக்க அறிவுரை கூறினார்கள். ஆனால், இன்று இப்பழக்கம் என் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டது. அன்று காலதாமதமாகச் செல்வதால் உறவுகள் விரிசல் அடைவதோடு நானும் அழிந்து விடுவேன் என்ற முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டேன். ஆனால், நான் வீணாக்கிய காலம் திரும்பவில்லையே. ‘மாரா’ என்று என் அம்மா அழைத்து என் எண்ணத்தை இன்றைக்குத் திருப்பினார். நான் அந்த நாளிலிருந்து ஒரு பொழுதும் எங்கேயும் தாமதமாகச் செல்வதில்லை.

எந்த நிகழ்வுக்கும் காலதாமதமாகச் செல்லும் பழக்கம் உன்னிடமிருந்தது. ஆனால் அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தால் அப்பழக்கத்தை நீ மாற்றிக்கொண்டு விட்டாய். அந்நிகழ்வுகளைப் பொருத்தமான வர்ணனைகளோடும் உணர்வுகளோடும் விளக்கி எழுதுக - நிலா இரமமூர்த்தி (307) 2021

நிலா ராமமூர்த்தி (307) 2021 என்னால் எனது காதுகளையே நம்பமுடியவில்லை. எனது கைகளும் கால்களும் ஓடவில்லை. எனது மனதில் ஆசிரியர் கூறிய சொற்கள் மீண்டும் மீண்டும் ஒலித்தன. “ கலா, உன்னை ஒரு சர்வதேச அளவிலான போட்டிக்கு பதிவு செய்துள்ளேன். போட்டிக்கு தயார் செய்வதற்கு உனக்கு இரண்டு மாதங்கள் உள்ளது. உன்னை நன்றாக தயார் செய்து கொள். உனது திறமையாலும் உனது விடாமுயற்சியாலும் யாருக்கும் அளிக்காத இந்த அரிய வாய்ப்பை நான் உனக்கு அளித்துள்ளேன். அதை நன்றாக பயன்படுத்திக்கொள், “ என்று கூறியிருந்தார். எனது செவிகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த நான், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு போட்டியில் முதல் பரிசு வெல்ல கங்கணம் கட்டிக் கொண்டேன். வீட்டை அடைந்ததும் எனது தாயாரிடமும் தந்தையிடமும் நடந்தவற்றை கூறியவுடனே அவர்களின் கண்களிலிருந்து முத்து முத்தான மகிழ்ச்சி கண்ணீர் துளிகள் விழத் துவங்கின. அவர்கள் என்னை புகழ்ந்த போது நான் அக மகிழ்ந்தேன். அதன்பின், நான் எனது அறைக்கு சென்று, போட்டியில் வெல்வதற்கு திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு, நான் திட்டத்தை தீட்டி முடித்துவிட்டேன் அந்தத் திட்டத்தை காணும்போதே எனது மனதில் நான் அந்த வெற்றி கோப்பையை விரைவில் வாங்கும் காட்சி தெரிந்தது. “ஆஹா ஓஹோ” என்று எல்லாரும் என்னை புகழும் சத்தம் எனது செவிகளுக்கு இன்னிசை ஆக இருந்தது. நான் மெய் மறந்து பகற்கனவு காணும் அந்த நேரத்தில் எனது தாயார் உள்ளே வந்து, “கலா, வெற்றி பெறுவதற்கு முன்பே கனவா? நீ ஒழுங்காக போட்டிக்கு தயார் செய்ய ஆரம்பி,” என்று கூறி சென்றுவிட்டார். அதைக்கேட்டு, எனது பேச்சை எழுதத் துவங்கினேன். இரவும் பகலும் உறங்காமல் உழைத்தேன். எனது கண்கள் சொக்கின. என்னால் உடம்பு வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் நான் அதையெல்லாம் பொருட்படுத்திக்கொள்ளாமல், பேச்சுக்குத் தேவையான தகவல்களை, பலவகையான இணையத்தளங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சேகரிக்கத் தொடங்கினேன். தகவல்களை சேகரித்து முடிப்பதற்கே ஒரு வாரம் ஆகிவிட்டது. எனது கடின உழைப்பால் எனக்கு போதுமான உறக்கம் கிடைக்கவில்லை. இருப்பினும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் அன்று பள்ளி முடிந்து எனது பேச்சை ஆசிரியரிடம் காட்டுவதற்காக வகுப்பிற்கு சென்றேன். அப்போது, ஆசிரியரின் பக்கத்தில் வேறு ஒரு மாணவி இருப்பதையும் நான் கவனித்தேன். “ இவர் யார்?” என்று எனக்குள் ஒரு கேள்விக்குறி எழுந்தது. ஆசிரியர், “ இவர் மீரா, நீ போட்டி அன்று வரமுடியாமல் போனால், இவர் உனது இடத்தை நிரப்பி உனக்கு பதிலாக பேசுவார்,” என்று கூறினார். அதை கேட்டவுடனே என்னால் என் மனதுக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. எனக்கு பதிலாக வேறு ஒருவரா? என்னை போல் திறமையானவர் வேறுயாருமில்லை. நான் ஏன் போட்டிக்கு அன்று வராமல் செல்வேன்? இது எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் இதையெல்லாம் பிறகு கண்டு கொள்ளாமல் எனது பேச்சை ஆசிரியரிடம் காட்டினேன். உடனே என்னை புகழ தொடங்கிய அவர், பிறகு எனக்கு பேசுவதற்கான பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். நானும் உன்னிப்பாக கவனித்து அவற்றை நன்றாக உள்வாங்கிக் கொண்டேன். நான் எனது ஆசிரியரை வாரத்திற்கு மூன்று முறை கட்டாயமாக ஒரு மாதத்திற்கு சந்திக்க வேண்டியிருந்தது. எனது இரத்தம், வியர்வை, கண்ணீர் அனைத்தையும் போட்டிக்கு தயார் செய்வதிலேயே செலுத்தி, மனது ஓய்வுக்காக கெஞ்ச, உடம்பு வலிக்க, விடாமல் உழைத்தேன். அவ்வாறு ஒருநாள் உழைத்துக் கொண்டிருந்த போது தாயார் எனது அறைக்குள் வந்து “ கலா, ஒரு நிமிடம், உன்னிடம் நான் கொஞ்சம் பேச வேண்டும்,” என்று கூறினார். “கூறுங்கள், ” என்றேன். “கலா உனது காலதாமதமான பழக்கத்தை பற்றி உனக்கும் எனக்கும் நன்றாக தெரியும், எந்த ஒரு நிகழ்வுக்கும் நீ கடைசி நிமிடம் தான் தயார் செய்து கொண்டு செல்வாய். இந்தப் போட்டி சர்வதேச அளவில் நடைபெறுகிறது. இதற்காக நிறைய உழைத்திருக்கிறாய். இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறவிருக்கிறது என்பது உனக்கும் தெரியும். ஆகவே, கிளம்புவதற்கு முந்தின தினமே உனது பொருட்களை எடுத்து வைத்துக்கொள், இல்லை என்றால் உனது உழைப்பு அனைத்துமே வீணாகிவிடும்,” என்று கூறினார். “சரி அம்மா,” என்று கூறிவிட்டு மறுபடியும் பயிற்சி செய்ய தொடங்கினேன். எனது தாயார் கூறியது, ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ போல் ஆனது. போட்டி தினமும் நெருங்கத் தொடங்கியது. போட்டிக்கு முந்தின நாள் வரை இன்னும் எனக்குத் தேவையானவற்றை எடுத்து வைக்கவில்லை. “ நாளை எடுத்து வைத்துக்கொள்ளலாம், எதற்கு அவசரம்? எனக்கு எடுத்து வைக்க தோன்றவில்லை,” என்று நினைத்துக் கொண்டு நானும் உறங்கச் சென்றேன். அடுத்த நாள் காலையில் எனது தாயார் பதறிக்கொண்டு, “காலா, எழு! கிளம்ப வேண்டும்,” என்று அவசரப்படுத்தினார். நான் மெதுவாக எழுந்து, காலச்சக்கரத்தை பார்த்தவுடன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. விமான நிலையத்தை அடைவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது! எனது மனது ‘லப்டப், லப்டப்’ என்று பதற்றத்தில் தாளம் போடத் தொடங்கியது. பம்பரத்தைப் போல் சுழன்று ஏனோதானோ என்று பொருட்களை எடுத்துவைத்து வீட்டை விட்டு அரக்க பரக்க வெளியேற தொடங்கியபோது, திறன்பேசி ஒலிக்கத் தொடங்கியது. நான் அதை எடுத்தேன். எனது ஆசிரியர், “கலா, எங்கே இருக்கிறாய்? விமானம் செல்வதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் மட்டுமே இருக்கின்றன! சீக்கிரம் வந்துவிடு!,” என்று கடும் சினத்தோடு கூறினார். “வந்துவிடுகிறேன்,” என்று கூறிவிட்டு உந்து வண்டியில் ஏறி ஓட்டுனரை அவசரப் படுத்தினேன். பதற்றத்தில் எனக்கு மயக்கமே வந்து விடும் போல இருந்தது. இறுதியில் நான் விமான நிலையத்தை சென்றடைந்தேன். ஆனால் எனது ஆசிரியரோ மீராவோ யாரும் அங்கே இல்லை. அப்போது தான் எனக்கு புரிந்தது. அவர்கள் என்னை விட்டு விட்டு சென்று விட்டார்கள். நீர் அருவி போல் என் கண்களிலிருந்து கசிந்தது. செய்வதறியாது திகைத்த நான், என்னை மனதிற்குள் கடிந்து கொள்ள துவங்கினேன். எனது கடின உழைப்பு அனைத்தும் விழலுக்கு இறைத்த நீரைப்போல் வீணாகியது. எனக்கு பதிலாக மீரா பேசுவாள், என்னால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. “ஒழுக்கம் விருப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்பதற்கேற்ப ஒழுக்கத்துடன் இருந்து தாமதமாக செல்லக்கூடாது என்ற பாடம் உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல் என் மனதில் பதிந்தது. ஆனால் இந்த ஏமாற்றும் போதாதென்று, சில வாரங்கள் கழித்து, போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டபோது எனது செவிகளால் அதை நம்பமுடியவில்லை. மீரா வெற்றி பெற்றுவிட்டாலா? எனக்கு கிடைத்திருக்கவேண்டிய கோப்பை அநியாயமாக அவளுக்கு கிடைத்துவிட்டது. என்னால் அந்த பொறாமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனது நெற்றிக் கண் திறந்தது, அந்தளவிற்கு கோபம், விரக்தி. நான் மட்டும் தாமதமாக செல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். அதனால், இனிமேல் எந்த நிகழ்வுக்கும் தாமதமாக செல்லக்கூடாது என்று உறுதி கொண்டேன்.

சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள். விவாதிக்க - அசீரா ஜன்னத் (306) 2021

அசீரா ஜன்னத் (306) 2021 ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும், வளர்ச்சியிலும், சாதனையிலும், சரித்திரத்திலும், பின்புலமாய் அமைவது அதனின் சமுதாயத்தைச் சார்ந்துள்ளது. அந்தச் சமூகத்தில் நிலவும் பரிவுணர்வையே சார்ந்துள்ளது. ஒரு பரிவு மிக்க சமுதாயத்தால் மட்டுமே இவ்வுலகில் உதயசூரியனைப் போல் ஒளிவீச முடியும். அச்சமுதாயம் மட்டுமே உலகத்தில் எந்தவொரு துன்பத்திலும் இடையூரிலும் மடங்கிவிடாமல் சிறந்தோங்கி திகழ இயலும். அது போன்ற சமுதாயமே நம் சிங்கப்பூர் என்று நான் பெருமையோடு கூறுகிறேன். அதுமட்டுமின்றி, நம் சிங்கப்பூரிலுள்ள இளையர்களுள் பெரும்பாலானோரே இந்த பரிவுமிக்க சமுதாயத்திற்கு அடித்தளமாக அமைந்து பரிவுணர்வை என்றும் கைவிடாதவர்கள் என்பது என் ஆணித்தரமான கருத்தாகும். முதலில், இவ்வுலகையே ஆட்டி படைத்த கொவிட்-19 கிருமித்தொற்று எல்லோரையும் குழப்பம் என்னும் இருளில் ஆழ்த்தியது. அனால் நம் சிங்கார சிங்கையின் இளையர்களின் உள்ளத்தில் என்றுமே பரிவு என்னும் ஊற்று வற்றாமல் சுரக்கியது. உதாரணத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களிடம் கொவிட்-19 கிருமித்தொற்று வெகுவாக பரவிய பொழுது, நம் இளையர்கள் பயந்து ஒதுங்கவில்லை. அவ்வூழியர்களின் மனதில் பிரகாசிப்பை ஏற்படுத்தும் வண்ணம் அவர்களோடு கைகோர்த்து நடந்தார்கள். அவர்களுக்கு பல தேவையான பொருட்களை தானம் செய்து அவர்களின் துன்பங்களைப் பற்றி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஊட்டினர். இவர்களுக்கு என்று மட்டுமல்லாமல், சொல்லொண்ணாத் துன்பத்தில் சிக்குண்டு அல்லல்படும் சிங்கப்பூரர்களுக்ககே தங்களது உன்னதமான சேவையை வழங்கிக்கொன்டே இருந்தனர். இதைக் கண்டு நாம் எப்படி சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவற்றவர் என்று கூறலாம்? அடுத்து, நம் கல்வியமைச்சு பிரதிபலன் எதிர்பாராது, உதவும் மனப்பான்மை கொண்ட சமூக தொண்டூழியத்தின் முக்கியத்துவத்தை இளையர்களுக்கு என்றுமே ஊட்டி வளர்க்க முற்படுகிறது. இளய வயதிலிருந்தே சிங்கப்பூரில் மீள முடியாத துன்ப வலையில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவ வேண்டியதன் முக்கியத்துவம் பள்ளிகளில் போதிக்கப்படுகிறது. ஆதலால், இளையர்கள் சிறு வயதிலிருந்தே இப்படிப் போன்ற சமூக தொண்டூழியத்தில் ஈடுபடுகின்றனர். மற்றவர்களின் இடுக்கனை கண்ட இளையர்களுக்கு இன்னும் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்னும் அவா பிறக்கிறது. அதனால் இன்று பல இளையர் குழுக்கள் பள்ளிகளில் பல்வேறு மக்களுக்கு உதவ முன்வருகிறார்கள். மற்றவர்களின் துயரத்தை பூரணமாக துடைத்தொழிப்பதற்கு விழைகிறார்கள். கைமாறு கருதாது கருணை மழையாய் மக்களின் உள்ளத்தில் ஒளிவூட்டும் தீபங்களாக சிறந்தோங்குகிறார்கள். அதுமட்டுமா, ஆலமரத்தின் விழுதுகளைப்போல தேவையுள்ளவர்களுக்கு அதிக தானமும் சேவையும் செய்து அவர்கள் வாழ்க்கையின் படிகளை ஏறி கரையேறுவதற்கு ஊன்றுகோலாக இருக்கிறார்கள். இதைப் பல வேளைகளில் இளையர் குழுக்கள் இலவச துணைப் பாட வகுப்புகள், உணவு தானம், முதியோர் இல்லத்தில் நடவடிக்கைகள் நடத்தி வருவது, பணம் சேகரித்து தானம் செய்வது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் சிங்கப்பூரின் இளையர்களுள் எண்ணற்றவர்கள் பரிவுணர்வோடு இருப்பது வெள்ளிடைமலையாக புலப்படுகிறது. மூன்றாவதாக, இளையர்களிடம் பரிவுணர்வு இழையோடுவதை நாம் பொது இடங்களில் அதிகமாக கவனிக்கலாம். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு ஒரு நெஞ்சை உலுக்கும் சாலை விபரீதம் நடந்த பொழுது, அதைக் கண்ட ஒரு இளையரான மாணவரே அதில் சிக்கிய உயிர்களைக் காப்பாற்ற முன்வந்தான். அதற்காக அவனுக்கு ‘ஆண்டின் சிங்கப்பூரர்’ என்ற விருது அளிக்கப்பட்டது. இதுவே இளையர்களின் பரிவுணர்வை தெள்ளத்தெளிவாக பிரதிபலிக்கிறதல்லவா? மேலும், பேருந்துகளிலும் ரயில்களிலும் பல இளையர்கள் தாங்கள் உட்காராமல், இன்னும் சிரமப்படும் முதியோர்களுக்கே இருக்கைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். முதியோர்களுக்கு உதவி தேவை என்னும் பொழுது தயங்காமல் கனிவன்போடு முன்வருகிறார்கள் என்பன பல எடுத்துக்காட்டுகள் இளையர்கள் பரிவுணர்வை மறக்கவுமில்லை துறக்கவுமில்லை என்பதற்கு சான்றுகளாக அமைகின்றன அல்லவா? ஆனாலும் சிலரோ, பெரும்பாலான இளையர்கள் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓய்வின்றி ஓடிக்கொண்டு பாடச்சுமையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் பொறுமை இழந்து என்றுமே எரிச்சலுடன் நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவார்கள். அதனால் அவர்கள் பரிவுடன் நடந்து கொள்ள நேரமின்றி பரிவை இழந்துவிடுகிறார்கள் என்றும் கூறலாம். ஆனால் இக்கருத்து சமூகத்தில் மிகக் குறைவான இளையர்களுக்கே பொருந்தும். இளையர்களுக்கு அதிக வேலையும் பாடச்சுமையும் இருக்கும்போதே அவர்கள் சமுதாயத்தின் நலனைக் கருதி தொண்டூழியம், கனிவு மிக்க செயல்கள் போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள் என்றால் இளையர்கள் எந்தளவுக்குப் பரிவு மிக்கவர்கள் என்பதை சிறிது எண்ணிப் பாருங்கள். அவர்கள் தந்நலமில்லாமல் தங்கள் நேரத்தை தியாகம் செய்து எவ்வளவோ பரிவுமிக்க செயல்களில் ஈடுபடுவது சிங்கப்பூர் இளையர்களுள் பரிவுணர்வு இழையோடுகிறது என்பதை பறைசாற்றுகிறதல்லவா? இளையர்கள் பரிவு மிக்கவர்கள் என்பதாலே இன்றைய காலத்தில் உயர்தர குடிமக்களாக, பண்பாடு மிக்க சான்றோர்களாக இமயத்தின் உச்சியை அடைவார்கள் என்பது திண்ணம். அவர்கள் ‘கடுகு போல் சிறிதுள்ளம்’ கொண்டவர்கள் அல்ல, வானுலகத்தினளவு பரிவு கொண்டவர்கள். ‘யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன், ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்’ என்பதற்கேற்ப இந்த சமூகத்தில் புனிதர்களாக மக்களுக்கு தூணாக அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். கொவிட்-19தின் பொழுதும், தொண்டூழியத்தின் மூலமும், பொது இடங்களிலும், மற்றவர் நலனைக் கருதி பரிவுணர்வுடன் நடந்துகொள்வதை பார்க்கும் பொழுது, மனம் பூரிக்கின்றது, உடல் சிலிர்க்கின்றது, கண்ணீர் துளிர்க்கின்றது, உள்ளமே நெகிழ்கிறது. இளையர்கள் பரிவு என்னும் அணிகலனை அணிவது அவர்களை மெருகூட்டி உள்ளத்தில் கவின்மிகு மாமனிதர்களாக கரையேறச் செய்கிறது. அவர்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கலங்கரை விளக்காகவும் அமைகிறார்கள். பரிவுமிக்க சமுதாயம் என்னும் விருட்சத்திற்கு அவர்களே விதைகளாகவும், தண்ணீராகவும், உரமாகவும், திகழ்கிறார்கள். இக்காரணங்களை கேட்டப்பின்பும் சிங்கப்பூர் இளையர்களுள் பெரும்பாலோர் பரிவுணர்வு மிக்கவர்கள் என்பதை மறுத்தால் அது தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதற்கு ஈடாகாதோ?