Friday, October 2, 2026
பிறரிடம் மன்னிப்புக் கேட்பது பலவீனத்தின் அடையாளம் அன்று. இக்கருத்தை உணர்த்தும் வகையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் அதன்மூலம் நீ பெற்ற படிப்பினையையும் விவரித்து எழுதவும். THARSITA SELVARAJU (407 – 2026)
“ரவி! ரவி… ஒரே நிமிடம் நில். நான் இதுவரைக்கும் யாருகிட்டேயுமே
மன்னிப்புக் கேட்டதில்லை. உனக்கே தெரியும்…” என்று என் குரல் உரைக்க,
பூங்காவிலிருந்த அமைதி குலைந்தது. ஆனால், எனது குரலை விட உரக்க
“
“ஒன்னும் இல்ல, சின்ன
காயம் தான், சரியாகிடும்.” இது மாதிரி பல குரல்களையும், மனித உணர்வுகளின் அனைத்து
இந்த மருத்துவமனையில்
தான் தானும் என்னோடு சேர்ந்தே பயந்த என் நெருங்கிய தோழன், ரவியும் வேலை பார்த்தோம்.
இருவருமே தூங்காமல் கொள்ளாமல் படித்து இந்த இடத்திற்கு வந்தோம். அதனாலோ என்னவோ, இந்த
ஒருவர் ஒரு செயலுக்கு மன்னிப்புக் கேட்டால், அவர் தவறு செய்தவர். உடனடியாக,
அவரது திறமையும், குணமும் சந்தேகப்படப்படும். ஒரு மருத்துவராக, ஒருவர் எனது திறமையை
எப்பொழுதும் போல் ஒரு நாள், நானும் மருத்துவமனைக்குக் காலையிலேயே வந்துவிட்டேன். தூக்கம் கொஞ்சம் போதவில்லை. ஆனால் நான் ஆசைப்பட்டுச் செய்யும் இந்த வேலையின் முன், தூக்கம் ஒரு பொருட்டே இல்லையென்று, சுறுசுறுப்பாக ஒவ்வொரு நோயாளியையும் பரிசோதித்துவிட்டு, என் வேலையறைக்குச் சென்றேன். கொஞ்ச நேரம், என் கண்கள் தானாக மூட, என் தூக்கம் என்னை எப்படியோ விட்டுவிடாமல் தாக்கிவிட்டது. நானும் வீழ்ந்துவிட்டேன். ஆனால், கண்ணை மூடி இரண்டு நொடிகள் நகர்ந்திருக்காது, என் அறைக் கதவு ‘படால்’ என்று திறந்தது. புருவங்கள் சுருங்கி, கண்கள் பிதுங்கி, மூக்கு புடைப்பாக, ரவி வந்து நின்றான். கையில் சில தாட்கள். “என்னாச்சு?” என்று நான் அரை தூக்கத்தோடு கேட்க, “பேஷண்ட் 45-க்கு ஏன் அளவுக்கு அதிகம் மருந்து கொடுத்திருக்க! அவங்களால மூச்சே விட முடியல தெரியுமா? நல்ல வேளை, நர்ஸ் கவனிச்சு சொன்னாங்க!” என்று உரக்க கத்தினான் ரவி. முதலில் கூறிய இரண்டு வரிகளையும் கேட்டபோது அதிகமான என் இதயத் துடிப்பு, மூன்றாவது வரியில் நிலைக்குத் திரும்பியது.
“அய்யோ! நான் கூட பயந்துட்டேன். ஏதோ தெரியாம கொடுத்துட்டேன்! என்று , நல்ல வேளை!” என் வார்த்தைகள் கேட்கச் சாதாரணமாக இருந்தாலும், வியர்த்து விறுவிறுத்த என் முகமும் நடுங்கிக்கொண்டிருந்த என் கையும், என் மனதில் நாட்டியமாடிக்கொண்டிருந்த குற்ற உணர்ச்சியை வெளிக்காட்டின. என் தவறாக இருந்தாலும், என் மனத்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப் போன்ற ஒரு திறமையான மருத்துவர், இது போன்ற ஒரு தவற்றைச் செய்தார் என்று தெரியவந்தால், அனைவரும் என்ன நினைப்பர்? என் சிந்தனைகள் என் மூளையின் ஒவ்வொரு மூலைக்கும் ஓட, ரவி மட்டும் அதே இடத்தில் நின்றான். ஆனால், அவன் கண்களிலிருந்து கோபம் சென்று, ஒரு விதமான எதிர்பார்ப்பு தெரிந்தது. காவலர்கள் திருடனிடமிருந்து பதில் எதிர்பார்க்கும்பொழுது கொண்டிருந்த பார்வை போல. அந்தப் பார்வை தெரிந்தோ தெரியாமலோ என் தொண்டையில் ஒரு கட்டியை உருவாக்கியது, என் வார்த்தைகளை விழுங்க கஷ்டமாயிற்று. அவன் என்னைக் கேள்விகேட்பதற்கு முன் நான் கேட்டுவிட்டேன். “என்ன? போய் வேலைய பாரு!” என்று எலி கம்பீரமாக பேசினால் எவ்வாறு இருக்குமோ, அது போன்ற ஒரு பாவனையில்.
“உன்னிடம் சொல்ல வேற எதுவுமே இல்லையா?” என்று பொறுமையாகக் கேட்டான், என்னை உற்று நோக்கியவாறு. கோபமாக பேசியிருந்தால் கூட இந்தளவு மனம் குறுகுறுத்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், அவன் பொறுமையாகக் கேட்க, அந்தச் சாந்தத்தில் ஒன்று வெளிப்படையாகத் தெரிந்திருந்தது. என் தவற்றை ஏற்று, என்னிடமிருந்து மனமார்ந்த ஒரு மன்னிப்பு. அதைத் தான் தேடினான், ரவி. ‘ஒரு மருத்துவரின் கவனக்குறைவு அவனைக் கொலைகாரனாகக்கூட ஆக்கலாம், என் வேலையையா அவன் கேட்பான். என் தவறுக்காக என் மன்னிப்பு. அவ்வளவுதானே!’ என்று ஒரு பக்கம் யோசித்தாலும், மறு பக்கம், ‘என் திறமையிலே சந்தேகமா?’ என்று ஒரு சுயகௌரவ எண்ணம் பிறந்தது.
என்னை, இந்திடத்தில், குறைவானவனாகக் காட்டும் அந்த மன்னிப்பை கேட்கனுமா? நான் அவனைப் பார்க்க, ரவியும் என்னைப் பார்த்தான், அவனது பார்வை என்னை எரித்துவிடுவது போல். கஷ்டப்பட்டு, என் எச்சிலை விழுங்கியபடி, “எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை!” என்று வாய்கூசாமல் கூறினேன். கேட்ட அடுத்த வினாடி, கையிலிருந்த தாளை என் முகத்தில் வீசியவாறு, வெளியே சென்றான். அவன் வரும்பொழுது அவனுக்கும் எனக்கும் ஒரு மேசை அளவிருந்த இடைவெளி, அவன் சென்ற பிறகு மனதளவில் ஆயிரம் கிலோமீட்டர் தள்ளியிருந்தது போலிருந்தது. அவனுக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், அவன் எதிர்ப்பார்த்த மன்னிப்பு நியாயம் தானே!
அன்றிலிருந்து, ரவி என்னோடு பேசவே இல்லை. பூச்சிகளைக் கண்டால் மனிதர்கள் விலகுவது போல், என்னைக் கண்டாலே ஒதுங்கினான். சிறு வயதிலிருந்தே என்னோடு நெருங்கி இருந்தவன், நான் அவமானமாகவும் பலவீனமாகவும் காணும் ஒன்றை இப்படி எதிர்க்கிறான் என்றால், நமது கண்ணோட்டம் தான் வேறு, என்ற எண்ணம் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய, என் பார்வை மாறியது. இதைப்பற்றி அவனிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற விருப்பதில், வேலை முடித்து அவனைத் தேடினேன். என்னைக் கண்டவுடன், விறுவிறுத்தது அவனது காலடி…
“சாரி!” என்று ஒரு சின்ன குழந்தையின் மென்மையான குரல் என் காதில் விழ, நான்
நினைவு திரும்பினேன். ஆறு வயதைகூட தாண்டியிருக்காத அந்தக் குழந்தை,
ஒரு நாயின் பாதத்தைப் பிடித்துக்கொண்டு தட்டியவாறு, அதனிடம் மன்னிப்பு கேட்டது. தெரியாம மிதித்தேன்!’ என்று அவள் சொல்ல, என் முகம் மாறியது.
தான் செய்தது தவறு என்று தெரிந்தவுடன், தயங்காமல் மன்னிப்பு கேட்கிறாள் ஒரு சின்ன குழந்தை.
நாம் செய்ததை உணர்ந்து, அதை மாற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும், காயப்படுத்தியவருக்கு
மருந்தாகவும் அமையும் இந்த மன்னிப்பு, பலவீனம் அல்ல, பலத்தின் வடிவம் தானே, என்று எனக்குப் பொறுமையாகப் புரிந்தது.
ஏதோ புதிதாகக் கண்டுபிடித்தது போல், “ரவி!” என்று கத்தினேன். முதன் முறையாக,
என் மனத்தில் தயக்கமில்லாமல், என் சிந்தனையில் தெளிவோடு, “என்னை
மன்னித்துவிடு. நான் செய்தது தவறுதான்!” என்று உரக்கக் கத்தினேன். அதிர்ச்சியோடு திரும்பினான்,
ரவி, கன்னத்தில் ஒரு புன்னகையோடு. அவனது ஒரு சிரிப்புப் போதும், என்னை எனது செயல்களை
நன்றாக அது உணர வைத்தது. அன்று தான் உணர்ந்தேன், நம்மைத் திருத்தி
வாழவிடும் இந்த ‘மன்னிப்பு’ பலவீனம் அல்ல, பலமே, என்று! வாழ்கையில் சிலது தாமதமாக புரிந்தாலும்,
கடவுளால் ஒரு பாடம் எப்பொழுதும் புகட்டப்படும் என்று அறிந்தேன். அப்படி எனக்கு அனுப்பப்பட
பாடம் தான் ரவி. உங்களது பாடம் எனது கதையாக இருக்கட்டும்! நன்றி!
-
மொழி மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் படைத்துக்கொண்ட மொழி இல்லை என்றால், இன்றைய நாகரிக வளர்ச்சியே இல்லை. உலகின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கு...
-
நான் கடவுளிடம் கேட்க விரும்புபவை R. அஸ்வினி . உயர் நிலை 4 உயர்தமிழ். 22.4.2009 கடவுள்! இந்த நான்கு எழுத்து வார்த்தைக்குள் தான் எத்தைனை அர்த...
-
சமீபத்தில், ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் அனைத்து செயல்களைச் செய்யக்கூடிய அளவிற்கு நம் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. அக்காலத்தைப் போல ...