Sunday, April 25, 2010

A Letter to Town Council

Asha Kalaichelvam - Sec 2/1 Higher Tamil

அனுப்புதல்
கலை
புளோக் 14
பீஷான் ஸ்திரீட் 22
#35-40
சிங்கப்பூர் 570014

01/03/10

பெறுதல்
பொதுத் தொடர்பு அதிகாரி
பீஷான் ஸ்திரீட் 13
சிங்கப்பூர் 570197

மதிப்பிற்குரிய ஐயா

கரு: பொறுப்பில்லாமல் செல்லப்பிராணிகள் வளர்ப்பதைக் குறித்து


வணக்கம். சென்ற மாதம் என் குடும்பமும் நானும் பீஷான் ஸ்திரீட் 22க்கு புதிதாகக் குடிமாறி வந்தோம். ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் என் அடுக்குமாடிக் கட்டடத்தின் அருகே இருக்கும் பூங்காவிற்குச் சென்று மெதுவோட்டம் ஓடுவது வழக்கம். அப்போது செல்லப்பிராணிகளின் முதலாளிகள் பலர் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதைப் பார்த்துள்ளேன்.

சிலர் தங்கள் செல்லப்பிராணிகளைச் சங்கிலியில் இணைத்துப் பிடித்துச் செல்லாமல் சுதந்திரமாக விட்டுவிடுவார்கள். அப்போது பிராணிகளுக்கு இடையே சட்டை சச்சரவு ஏற்படுகிறது. நாய்களும் பூனைகளும் கண்ட இடங்களில் அசிங்கம் செய்துவிடும்போது முதலாளிகள் ஒன்றும் செய்வதில்லை. சில நேரங்களில், நான் பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது வீட்டு வாசலில் பிராணிகளின் மலமும் சிறுநீரும் பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும்.

நாய்கள் சில நேரங்களில் பலமாகவும் விடாமலும் குரைக்கும். இது, உறங்கும் குழந்தைகளுக்கும் இரவு நேர வேலை முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்போருக்கும் தொந்தரவாக இருக்கிறது. மேலும், சுதந்திரமாக விடப்பட்டுள்ள பூனைகள் கம்பிக்கதவு வழியாக மற்றவர்களின் வீட்டுக்குள்ளே புகுந்து விடுகின்றன. பொறுப்பில்லாமல் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களால் மற்றக் குடியிருப்பாளர்கள் தொந்தரவுக்கு ஆளாகின்றனர்.

செல்லப்பிராணிகளை நடக்கக் கொண்டு செல்லும்போது முதலாளிகள் அவற்றைச் சங்கிலியில் இணைத்துப் பிடித்துச் செல்ல வேண்டும். அப்போத பிராணிகளுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படாது. முதலாளிகள் செல்லப்
பிராணிகளின் மலத்தை எடுக்க பிளாஸ்டிக் பையையும் எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுப்புறம் கண்களுக்குக் குளிர்ச்சியாகவும் மனத்திற்கு இதமாவும் இருக்க வேண்டும் அல்லவா?


முதலாளிகள் செல்லப்பிராணிகளை அடக்கி வளர்க்கவேண்டும். நாய்கள் குரைக்கும்போது அவற்றைக் கண்டிக்க வேண்டும். பிராணிகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று மற்றவர்களின் வீட்டுக்குள் சென்று தொந்தரவு செய்யாமல் பார்க்க வேண்டும்.

பொறுப்பானச் செல்லப்பிராணி முதலாளியாக இருப்பதற்கு வழிமுறைகளை நான் கூறியுள்ளேன். இவற்றை முதலாளிகளுக்குத் தெரிவிக்க நீங்கள் அறிவிப்புகள் போடலாம். சுற்றுப்புறத்தைத் தூயமையாகவும் அமைதியாகவும் வைக்க உதவாதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள என்னுடைய ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

தங்கள் உண்மையுள்ள

கலை

No comments: